எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 10 ஜூன், 2019

சித்திரைக் கோலங்களும், ஜில்லென்று சில ஜூஸுகளும்.

சித்திரைக் கோலங்களும், ஜில்லென்று சில ஜூஸுகளும்.

சித்திரைத் தேர், பொற்றாமரைக் குளம், அக்கினி நக்ஷத்திரம், மண்டூக மகரிஷிக்கு கள்ளழகர் சாப விமோசனம் அருளிய கோலம்.

இந்தக் கோலங்கள் மே 1 - 15 , 2014, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.

1.. வெள்ளரிக்காய் , வாழைத்தண்டு ஜூஸ் :-

தேவையானவை :-
வெள்ளரிக்காய் - 1 ( தோலுரித்து துண்டுகளாக்கவும். )
வாழைத்தண்டு - 1 துண்டு.
உப்பு - 1 /3 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 சிட்டிகை.
கொத்துமல்லி - சில இலைகள்.

செய்முறை :-
வெள்ளரிக்காய் வாழைத்தண்டை சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் அடித்து வடிகட்டி உப்பு. மிளகுத்தூள், கொத்துமல்லி இலைகள் சேர்த்து அருந்தவும்.

2. காரட் ஆரஞ்ச் ஜூஸ்.

தேவையானவை :-
காரட் - 1
ஆரஞ்ச் - 2
ஜீனி - 2 டீஸ்பூன்
ஐஸ் கட்டிகள் - 4
தண்ணீர் - 2 கப்

செய்முறை:-



காரட்டைத் தோலுரித்து சதுரத் துண்டுகளாக்கவும். ஆரஞ்சைத் தோலுரித்து விதை நீக்கவும். காரட், ஆரஞ்ச், ஜீனி, ஐஸ்துண்டுகள், தண்ணீர் எல்லாவற்றையும் சேர்த்து ஜூசர் மிக்சரில் போட்டு ஜூசை வடிகட்டவும். மிச்சமிருக்கும் சக்கையில் இன்னும் சிறிது நீர் ஊற்றி அரைத்து மிச்ச ஜூசையும் வடிகட்டி கண்ணாடி டம்ளர் அல்லது சில்வர் டம்ளர்களில் பரிமாறவும்.

 3. கருவேப்பிலை கொத்து மல்லி புதினா  எலுமிச்சை ஜூஸ் :-

தேவையானவை :-
கொழுந்து கருவேப்பிலை - 1 கைப்பிடி
கொத்துமல்லி இலை - 1 கைப்பிடி
புதினா இலை - 1 கைப்பிடி
எலுமிச்சை ஜூஸ் - 1/2 டேபிள் ஸ்பூன்
காலா நமக் ( ராக் சால்ட் ) - இந்துப்பு - 1 சிட்டிகை
சாட் மசாலா - 1 சிட்டிகை.

செய்முறை :-
இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு சிறிது நீர் விட்டு அரைத்து அரைத்து  வடிகட்டி 4 கப் தண்ணீர் சேர்த்து எலுமிச்சை ஜூஸ், இந்துப்பு, சாட் மசாலா தூவிக் கலந்து கொடுக்கவும்.

4. நெல்லிக்காய் மோர்.

தேவையானவை :-
முழு நெல்லிக்காய் -2
தயிர் - 2 கப்
பச்சை மிளகாய் - பாதி
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை :-
நெல்லிக்காயின் கொட்டை நீக்கி துண்டுகளாக்கி சிறிது தயிர் மிளகாய் உப்பு சேர்த்து நன்கு அடிக்கவும். மீதி தயிரைக் கடைந்து ஊற்றி 4 கப் தண்ணீர் சேர்த்துக் கலந்து டம்ளர்களில் ஊற்றிக் கொடுக்கவும்.


5. நாவல்பழம் பீட்ரூட் ஜூஸ்.

தேவையானவை :-
நாவல் பழம் - 10
பீட்ரூட் - சிறியது - 1
வெல்லம் - ஒரு அச்சு.
ஏலப்பொடி - 1 சிட்டிகை
சுக்குப் பொடி - 1 சிட்டிகை

செய்முறை:-
நாவல்பழத்தின் சதைப் பகுதியை எடுத்துக் கொள்ளவும். பீட்ரூட்டைத் தோல் சீவி மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து நாவல் பழ சதையையும் அரைத்து வடிகட்டவும். வெல்லத்தைத் தூள் செய்து கலந்து ஏலப்பொடி, சுக்குப் பொடி தூவிக் கொடுக்கவும்.

1 கருத்து:

  1. பால கணேஷ்30 மே, 2014 ’அன்று’ முற்பகல் 7:11
    ரோஸ் மில்க்கையும் நாவல்பழ பீட்ரூட் ஜூலையும் படத்தைப் பார்த்தாலே நாவில் சுரக்கிறது... ட்ரை பண்ணிப் பார்த்துடறேன்....

    பதிலளிநீக்கு

    பெயரில்லா30 மே, 2014 ’அன்று’ முற்பகல் 11:55
    ஜூஸ் செய்ய பயன்படுத்தும் பழங்கள், பொருட்களின் மருத்துவ பயன்களையும் குறிப்பிட்டிருக்கலாமே!

    பதிலளிநீக்கு

    நானானி30 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 11:25
    super juices..thanks Then!!

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan5 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 10:07
    ட்ரை பண்ணிப் பார்த்தீங்களா கணேஷ்

    குறிப்பிட்டு இருக்கலாம்தான் ஐயாசாமி. ஆனால் இது குமுதம் பக்தி ஸ்பெஷலில் வந்ததால் அதை மட்டும் வெளியிட்டுள்ளேன்

    நன்றி நானானி மேம்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan5 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 10:07
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.