எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 11 ஜூன், 2019

குளுமை குளுமை கூல் கூல் .மில்க் ஷேக்ஸ் ..( MILK SHAKES)

குளுமை குளுமை கூல் கூல் .மில்க் ஷேக்ஸ் ..( MILK SHAKES)

இந்த வெய்யிலுக்கு இதமா சில மில்க் ஷேக்ஸ்.:-


1. க்ரேப்ஸ் ஆரஞ்ச் மில்க் ஷேக்.

தேவையானவை :-
திராக்ஷைச் சாறு  - 2 டீஸ்பூன் = ஒரு கைப்பிடி பழத்தை அரைத்து வடிகட்டவும்
ஆரஞ்சுச் சாறு  - 1/3 கப் ( இரண்டு பழங்களைப் பிழியவும்.
பால் பவுடர் - 4 டீஸ்பூன்
பொடித்த ஜீனி - 4 டீஸ்பூன்

செய்முறை:-
இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு  அரை  கப் தண்ணீர் அல்லது கால் கப் தண்ணீரும் 4 ஐஸ்துண்டங்களும் போட்டு நன்கு அடித்து கண்ணாடி டம்ளர்களில்  ஊற்றிக் கொடுக்கவும்.

2. மாங்கோ மில்க் ஷேக் :-

தேவையானவை :-
மாம்பழச் சாறு  - 1 கப் ( இரண்டு மாம்பழங்களில் இருந்து சாறு எடுத்து வடிகட்டவும்.)
பால் - 1 கப் ( கெட்டியாகக் காய்ச்சி ஆறவைத்தது )
ஜீனி - 4 டீஸ்பூன்.
அலங்கரிக்க சில துண்டு மாம்பழங்கள்.+ மாம்பழ ஐஸ்க்ரீம் ஒரு ஸ்கூப்.

செய்முறை :-
அனைத்தையும் மிக்ஸியில் போட்டு இரண்டு ஐஸ்துண்டங்கள் போட்டு அடித்து கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி மாம்பழத் துண்டுகள் + ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் போட்டு பரிமாறவும்.

3. ஆப்பிள் மில்க் ஷேக் :-

தேவையானவை :-
ஆப்பிள் துண்டுகள் - 2 கப் ( தோல் விதை எடுத்தது ).
பால் - 2 கப்
ஜீனி - 4 ஸ்பூன்
வனிலா எசென்ஸ் - சில துளிகள்

 செய்முறை :-
ஆப்பிள் , பால் , ஜீனி மூன்றையும் ஐஸ்துண்டங்களோடு சேர்த்து அடித்து எசன்ஸ் கலந்து கண்ணாடிக் குவளைகளில் ஊற்றிக் கொடுக்கவும்.

4. சப்போட்டா மில்க் ஷேக்

தேவையானவை :-
சப்போட்டா - 4 பழம் ( விதை தோல் எடுத்தது )
பால் - 2 கப்
ஜீனி - 4 ஸ்பூன்
ஃப்ரெஷ் க்ரீம்  - 1 டீஸ்பூன்

செய்முறை :-
மூன்றையும் மிக்ஸியில் போட்டு ஐஸ்துண்டங்களோடு அடித்து ஃப்ரெஷ் க்ரீமும் போட்டு அடித்து குவளைகளில் ஊற்றி  கொடுக்கவும்.

5. பனானா மில்க் ஷேக் :-

தேவையானவை :-
வாழைப்பழம் - 2
பால் - 4 கப்
ஜீனி - 4 ஸ்பூன்
ஃப்ரெஷ் க்ரீம் - 1 டீஸ்பூன்
வனிலா எசன்ஸ் - சில துளிகள்.

செய்முறை :-
அனைத்தையும் மிக்ஸியில் போட்டு இரண்டு ஐஸ் துண்டங்களும் போட்டு அடித்துக் குவளைகளில் ஊற்றிக் கொடுக்கவும்.

6. பைனாப்பிள் மில்க் ஷேக்:-

தேவையானவை :-
பைனாப்பிள் - 2 கப் ( தோல் முள் நீக்கியது )
பால் - 1/2 கப்
தயிர் - 1 டீஸ்பூன்
ஜீனி - 4 டீஸ்பூன்
ஃப்ரெஷ் க்ரீம் - 1 ஸ்பூன்.
யெல்லோ ஃபுட் கலர் - 1 சிட்டிகை.
அலங்கரிக்க - பொடியாக நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள் , டூட்டி ஃப்ரூட்டி துண்டுகள். - 2 டீஸ்பூன்.

செய்முறை :-
அனைத்தையு மிக்ஸியில் 4 ஐஸ்துண்டங்களோடு போட்டு அடித்து பைனாப்பிள், டூட்டி ஃப்ரூட்டி துண்டுகள் போட்டுக் கொடுக்கவும்.

7. ரோஸ் மில்க் :-

தேவையானவை :-
பால் - 1/2 லிட்டர்
ஜீனி - 6 ஸ்பூன்
பன்னீர் ரோஜா இதழ்கள்  - சில ( வெளிர் ரோஸ் நிறத்தில் உள்ள பன்னீர் ரோஜா இதழ்கள்.  )
ரோஸ் கலர் - 1 சிட்டிகை ( தேவைப்பட்டால் )
ரோஸ் எசன்ஸ் - சில துளிகள்
ஃப்ரெஷ் க்ரீம் - 1 டீஸ்பூன்.

செய்முறை :-
காய்ச்சி ஆறிய பாலில் ஜீனி ரோஜா இதழ்கள் ,ரோஸ் கலர், ரோஸ் எசன்ஸ், ஃப்ரெஷ் க்ரீம் போட்டு 4 ஐஸ்துண்டங்கள் போட்டு மிக்ஸியில் நன்கு அடித்துப் பருகக் கொடுக்கவும். ரோஜா இதழ்கள் சேர்க்கும்போது ரோஸ் எசன்ஸ் , ரோஸ் கலர் விரும்பினால் மட்டும் சேர்த்தால் போதும்.

---- எங்க கிளம்பிட்டீங்க குளுமை குளுமை கூல் கூல் மில்க் ஷேக் சாப்பிடவா. :)

1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்21 மே, 2014 ’அன்று’ முற்பகல் 8:48
    சிலவற்றை வீட்டிலேயே செய்து பார்க்கிறோம் சகோதரி... நன்றி...

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan26 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 10:40
    நன்றி தனபால் சகோ

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan26 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 10:40
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.