எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 6 ஏப்ரல், 2020

உய்யவந்த அம்மன் கோயிலில் வித்யாசமாய் ஒரு வேண்டுதல்.

உய்யவந்த அம்மன் கோயிலில் வித்யாசமாய் ஒரு வேண்டுதல்.

புதுவயல் சாக்கோட்டையில் உய்யவந்த அம்மன் கோயில் உள்ளது. இங்கு இருக்கும் அம்மனை உய்ய வந்த தாயார் என்றும் உய்ய வந்த நாச்சியார் என்றும் சொல்கிறார்கள். அருமையான எளிமையான கோயில். கோபுரங்கள்தான் மூன்று நான்கு இருக்கு.
வெளியிலேயே உக்கிரம் தெரிகிறதல்லவா. கோபுரத்தில் முருகன்.
உள்ளே நுழைந்ததும் விநாயகர் முருகன் சன்னதி . நேரே அம்மன் சன்னதி.

தீமையைக் கெல்லும் தாய். கோபுரத்தில் உய்ய வந்த பெருமாளும் காட்சி தருகிறார். கூடவே மதங்க நடனம் ஆடும் கோபாலனும். உய்ய வந்த பெருமாள், உய்ய வந்த அம்மன் புராணம் தெரியவில்லை.


அருவா மீசை, கொடுவா பார்வையுடன் கையில் நாகமும் குத்தீட்டியும் ஏந்தி காவல் யட்சன்
கருவறைக் கோபுரத்தின் பின்புறம் அம்மன், விநாயகர் சிற்பங்கள். காவல் தேவதைகள். கற்சுவர்.
யட்சனுக்குப் பக்கத்துணையாய் வாயிலைக் காக்கும் யட்சி. சிங்கப் பல், கையில் சூலம், நாகம்
யட்சனும் யட்சியும் மிரட்டலாய் இருக்குல்ல. காக்கும் தெய்வத்தின் காவல் தெய்வங்கள்.
கோயிலின் பக்கவாட்டில் இருந்த அழகான கதவு. கண்ணைக் கவர்ந்தது. இயற்கைச் சாளரங்கள். அந்தக் காலக் கோயில்கள் போல கல்கோயில்.

இவர்கள்தான் கோயிலில் கை கால் உருவத்தைச் செதுக்கி/ பொழித்துக் கொண்டிருந்தனர். காய்ச்சல் வந்தபோது வேண்டிக்கொண்டமையால் கோயிலில் சாமி சன்னதி முன் கை காலின் அவுட்லைனை வரைந்து அதைச் செதுக்கி வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர்.இவ்வாறு பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது இக்கோயிலில் சிறப்பு என்று சொன்னார்கள்.
உளியை வைத்து இவர் கல் தரையில் கால்விரல்கள், நகங்கள், பாத ரேகை, குதிகால், கைவிரல்கள், மூன்று முளிகள் , ரேகைகள் கொண்ட உள்ளங்கையைச்  செதுக்கியதை ஆச்சர்யத்துடன் சில நிமிடம் பார்த்துவிட்டு கடவுளை வணங்கி வந்தோம்.
 அவர்கள் செதுக்கிய இடத்துக்கு எதிரே அஷ்ட லெக்ஷ்மிகளும் அருள் பாலித்துக் கொண்டிருந்தார்கள். மிக அருமையான தரிசனம்.

டிஸ்கி :- இதையும் பாருங்க.

1. சாக்கோட்டை வீரசேகர உமையாம்பிகை புறவாயிற் சிற்பங்கள். 

2. சாக்கோட்டைகோயில். வீரனும் மன்னனும் அந்தணனும் அகத்தியரும்

3. சாக்கோட்டை வீரசேகர உமையாம்பிகை கோயில் - இரண்டு கொடிமரங்கள்.

4.  உய்யவந்த அம்மன் கோயிலில் வித்யாசமாய் ஒரு வேண்டுதல்.

1 கருத்து:

  1. 'பரிவை' சே.குமார்30 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:52
    நல்ல தரிசனம்....
    பகிர்வுக்கு நன்றி அக்கா...

    பதிலளிநீக்கு

    Unknown1 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 9:14
    Super sister

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்2 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 1:43
    அருமையான படங்கள் மற்றும் தகவல்கள்.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu6 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 11:10
    புதிய தகவல். கோயில் படங்கள் அருமை! அந்தக் கதவு செம அழகு. பக்கவாட்டில்தான் எடுக்க முடிந்ததோ சகோ?!!

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan20 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 12:29
    நன்றி குமார் சகோ

    நன்றி சுந்தர்ராஜன் சார்

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி துளசி சகோ & கீத்ஸ் ஆமாம். உறவினர்களுடன் ஒரு ஃப்ளையிங் விசிட்டில் எடுத்தேன். பூசாரி/அர்ச்சகர் தடுப்பாரோன்னு பயத்தோட :)

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan20 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 12:29
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.