நகரச்சிவன் கோயில் சூரக்குடி.
எனது 24 நூல்கள்
வியாழன், 30 ஜூலை, 2020
செவ்வாய், 28 ஜூலை, 2020
வேலங்குடி கண்டீஸ்வரர், காமாட்சியம்மன் திருக்கோயில்

காரைக்குடியில் இருந்து ( 9 கிமீ தூரத்தில்) புதுக்கோட்டை செல்லும் வழியில் கோட்டையூரில் உள்ள வேலங்குடியில் அமைந்துள்ளது அருள்மிகு கண்டீஸ்வரர் காமாட்சி அம்மன் திருக்கோயில். அருகில் ஒரு பெருமாள் கோயிலும், சொக்கேட்டான் ( விநாயகர் ) கோயிலும் அமைந்துள்ளது. எதிரே பெரிய மைதானமும் மாபெரும் ஊருணியும் இருக்கிறது.
ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் இதுவும். வேல மரங்கள் அதிகம் இருந்த காரணத்தால் இது வேலங்குடி என அழைக்கப்பட்டதாம். மிகப்பெரும் கம்பீரமான கோயில் இது.

வெள்ளி, 24 ஜூலை, 2020
புதன், 22 ஜூலை, 2020
இலுப்பைக்குடி தான்தோன்றீசுவரர் , சவுந்தரநாயகியம்மன் திருக்கோயில் :-

திங்கள், 20 ஜூலை, 2020
மாத்தூர் ஐந்நூற்றீசுவரர் , பெரியநாயகியம்மன் திருக்கோயில்

காரைக்குடியில் இருந்து ஆறு கிமீ தூரத்தில் அமைந்துள்ளது மாத்தூர் கோயில். நகரத்தார் கோயில்கள் ஒன்பதும் அடுத்தடுத்து இரு நாட்களில் தரிசிக்கும் பேறு பெற்றேன் . எல்லாக் கோயில்களுமே கிட்டத்தட்ட ஐம்பது கிமீ சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ளன. முதலில் மாத்தூர்.
இக்கோயில் பற்றி முன்பே சில இடுகைகள் எழுதி உள்ளேன். இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகப்.பழமையான கோயில் இது. மாத்தூர் கோயில் ஊரணியின் பெயர் கமலாலய தீர்த்தம். ஸ்தலவிருட்சம் மகிழமரம்.மாசிமாத திருவிழா பிரசித்தம்.

வியாழன், 16 ஜூலை, 2020
அருள் பொங்கும் ஈரோடு பெரிய மாரியம்மன், வலம்புரி விநாயகர் திருக்கோயில்கள்.

1000 இல் 2000 இருந்து ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டதாம் ஈரோட்டின் ப்ரப் ரோட்டில் அமைந்திருக்கும் பெரிய மாரியம்மன் திருக்கோயில். மிகப் பழமை வாய்ந்த இக்கோயிலின் உள்ளே நுழைந்ததும் சக்தியின் அருளாட்சி நம்மை ஆக்கிரமிக்கிறது. ரொம்பப் பவர்ஃபுல்.
ஈரோட்டில் ஏகப்பட்ட மாரியம்மன் கோயில்கள் இருப்பதால் இக்கோயில் பெரிய மாரியம்மன் கோயில் என்றழைக்கப்படுது. பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா ரொம்ப பேமஸ். பொங்கலிலிருந்து மஞ்சள் நீராட்டு வரை அனைத்து மக்களும் நேர்த்திக்கடனாக மாறுவேடமணிந்து வந்து வழிபாடு செய்வார்களாம்.

செவ்வாய், 14 ஜூலை, 2020
வெள்ளி, 10 ஜூலை, 2020
மகாகாலேஷ்வர்,ஓம்காரேஷ்வர்,சோம்நாத்,நாகேஷ்வர் ஜோதிர்லிங்க தரிசனம்.

மஹாகாலேஷ்வர், ஓம்காரேஷ்வரர்/மமலேஷ்வரர், சோம்நாத், நாகேஷ்வர் ஆகிய நான்கு ஜோதிர்லிங்கத்தையும் துவாரகை கிருஷ்ணன், உஜ்ஜயினி மஹாகாளியையும் தரிசனம் செய்து நாளாகிவிட்டது ஆனால் இப்போதுதான் பதிவு செய்கிறேன். குஜராத், & மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள கோயில்கள் இவை.
மகாகாலேஷ்வர். மிகவும் பந்தோபஸ்துடன் அமைந்த கோவில் இது. முதல்நாளே ரேஷன்கார்டு, பான்கார்டு , வோட்டர் ஐடி ,ஆதார் போன்ற அடையாள அட்டைகளில் ஏதோ ஒன்றைக் காண்பித்துப் பதிவு செய்துகொள்ளவேண்டும். மறுநாள் விடியற்காலையில் உள்ள ஸ்பெஷல் பஸ்மாஹாரத்தி எனப்படும் மயானபூஜையைப் பார்க்கவே இது.
இங்கே காமிராவுக்கோ செல்போனுக்கோ வேலையேயில்லை. கப்சிப். எல்லாவற்றையும் அணைத்து ரூமிலேயே வைத்துவிட்டுச் சென்றுவிடவேண்டும். என் அன்பிற்குரிய சின்னத்தம்பியும் அவனது மனைவியும் துபாயிலிருந்து குடும்பத்தோடு வந்திருந்து தரிசனம் செய்தபோது என்னையும் அழைத்துச் சென்று தரிசனம் செய்வித்தார்கள். அவர்கள் சென்னை டு மும்பை பிளைட்டில் வர எனக்கும் ஹைதை டு மும்பை பிளைட் டிக்கெட் எடுத்திருந்தார்கள். நன்றி இருவருக்கும். :)
சவுத் மும்பையில் அமைந்திருந்த தம்பி மனைவியின் உறவினர் இல்லத்துக்குச் சென்று ( மாபெரும் நிறுவனம் ஒன்றில் தலைமைப் பொறுப்பில் இருப்பதால் லட்சக்கணக்கில் வாடகை உள்ள வீட்டில் இரு தளங்கள் அவர்களுடையது. காரில் அழைத்துச் சென்று திடீரென்று பிசகிவிட்ட என் கால் வலிக்கு ஜஸ்லோக் ஹாஸ்பிட்டலில் உடனடி வைத்தியம் செய்வித்தார்கள். மிக அருமையான விருந்தோம்பலும் கொடுத்த அவர்களுக்கு நன்றி ) அதன் பின் ஒவ்வொரு இடமாகப் பார்த்துவந்தோம்.
அங்கிருந்து புறப்பட்டு உஜ்ஜயின் வந்து சேர்ந்தோம். அன்று டோக்கன் வாங்கினால் மறுநாள்தான் தரிசனம்.
விடியற்காலையில் குளித்துவிட்டுக் கியூவில் சென்று நின்று இங்கே கொடுக்கப்படும் சின்ன வெங்கலச் செம்புகளில் நீரை நிரப்பி மகாகாலேஷ்வரை அபிஷேகம் செய்த அனுபவம் மறக்கவியலாதது. முக்கிய விஷயம் இங்கே பெண்குழந்தைகள் தாவணி அல்லது புடவை உடுத்தினால்தான் கருவறைக்குள் இறைவனுக்கு அருகில் செல்ல அனுமதி. பெண்களும் சுடிதார், பாண்ட், சூட் எல்லாம் உடுத்தினால் செல்ல இயலாது. கட்டாயம் புடவை அணிய வேண்டும். குறிப்பிட்ட நேரம் மட்டுமே அனுமதி என்பதால் சீக்கிரம் சென்றால் முன் இடத்தில் அமரலாம். லாப்டாப்பில் புகைப்படம் பார்த்து பேர் கேட்டு ஐடிகார்டு பார்த்துத்தான் அனுமதிப்பார்கள் என்பதால் எல்லாவற்றையும் பர்பெக்ட்டாக செய்யவும்.
அதிகாலையில் நான்குமணிக்கு க்யூவில் சென்று சாமியைத் தொட்டு அபிஷேகம் செய்த அனுபவம் மறக்கவே இயலாதது. படிப்படியாக இருக்கும் கேலரியில் சென்று அதன் பின் அனைவரும் அமர்ந்துகொள்ள வேண்டும். அன்று இரவில் இறைவனடி சேர்ந்தவர்களின் பஸ்மம் லிங்கத்தின் மேல் துணி கொண்டு தூவப்பட்டு (அல்லது இறந்தவர்களின் உறவினர்களால் இந்த பூஜைக்காக முன்பே புக் செய்யப்பட்டவர்களின் பஸ்மம் துணியில் எடுத்து வரப்பட்டு லிங்கத்தின்மேல் தூவப்படுகிறது. ) தீபஹாரத்தி காண்பிக்கப்பட்டபின் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு தீபம் காண்பிக்கப்படுகிறது. அத்துடன் தர்ஷன் முடிந்தது. இங்கே இருப்பவர்கள் , ஹோட்டல் வைத்திருப்பவர்கள் ,24 மணி நேரமும் சரியாகத் தூங்க முடியாது என்று தோன்றுகிறது. அடுத்தடுத்து மற்ற தர்ஷன்கள். கூட்டம்.
இது முக்கியமான ஜோதிர்லிங்க ஸ்தலம். மாபெரும் மதில்களுடன் இந்த மூன்றடுக்கு சிவன் கோயில் சிப்ரா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. பிறப்பறுக்கும் பெருமானின் சக்திஓட்டம் உள்ள கோயில் இது. நம்மை அந்த அதிர்வுகள் தாக்குகின்றன. இங்கே இருக்கும் காலபைரவர் கோயிலும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று.

புதன், 8 ஜூலை, 2020
கரூர் கல்யாணவெங்கட்ரமணர், கல்யாண பசுபதீஸ்வரர், மாரியம்மன், கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில்கள் ;-

முதலில் சென்றது மகாமாரி என்று கருவூரை ஆடசி செய்யும் மாரியம்மன் திருக்கோயில்தான். பொங்கும் அவள் அருளாட்சியில் நனைந்து மனம் குளிர்ந்தது. அம்மை போன்ற உஷ்ணாதிக்க நோய்களைத் தீர்ப்பதோடு வாழ்வை வளமும் நலமும் பெறச் செய்யும் அம்மன் இவள். கிழக்கு நோக்கிய சந்நிதியில் நான்கு கரங்களுடன் அருள்பாலிக்கிறாள் சக்தி.
மண்ணில் பிறந்து மண்ணை அடைகிறோம் என்பதற்காக இங்கே திருமண்தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது. மஞ்சள் நீர்க் கம்பம் உற்சவம் விசேஷம். கம்பத்துக்கு தயிர் சாதம் படையலிட்டு சாமி கும்பிடுவார்கள்.
அடுத்து.,
தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ராமணர் கோயிலுக்கு ஒரு மாலை வேளையில் சென்றோம்
ஒரு சிறு குன்றின்மேல் ஒரு பாறையில் தானே சுயம்புவாகத் தோன்றி ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி அளிக்கும் வெங்கட்ரமணரைத் தரிசித்தோம். 500 வருடங்கள் பழமை வாய்ந்த கோயில் இது.

திங்கள், 6 ஜூலை, 2020
நவக்ரஹ கோயில் தரிசனம் :- திங்களூர் சந்தோஷ வாழ்வருளும் சந்திர பகவான்

திங்களூர் கும்பகோணத்தில் இருந்து 33 கிமீ தூரத்தில் உள்ளது. மூலவர் கைலாசநாதர். இறைவி பெரியநாயகி, நாவுக்கரசராலும் சுந்தரராலும் பாடல் பெற்ற தலம்.அப்பூதி அடிகளின் மகனைப் பாம்பு தீண்ட திருநாவுக்கரசர் இறைவனிடம் இறைஞ்சித் திருப்பதிகம் பாடி அவனை உயிர்ப்பித்த தலம்.
மிகச்சிறிய அழகான கோயில். இக்கோயில் கிழக்குமுகமாக பெரியநாயகி அம்மன் சந்நிதி அமைந்துள்ளது.. தெற்கு நோக்கிய சந்நிதியில் கைலாசநாதர் எழுந்தருளி உள்ளார். அவருக்கு எதிரில் எல்லாக் கோயில்களிலும் சந்திரன் சூரியன் இருக்கும் இடங்களில் அவர்கள் முறையே எழுந்திருக்கிறார்கள். கோஷ்ட தெய்வமாக சிவனுக்கு எதிரில் வாயிற்புறத்தில் இடப்புற சந்நிதியில் எழுந்திருக்கும் சந்திரனே இத்தலத்தில் சந்திர பகவானாக வணங்கப்படுகிறார்.

வியாழன், 2 ஜூலை, 2020
நவக்ரஹக் கோயில் தரிசனம்:- திருநாகேஸ்வரம் ராஜவாழ்க்கை நல்கும் ராகுபகவான்

"ராகுவைப் போலக் கொடுப்பவரும் இல்லை, ராகுவைப் போலக் கெடுப்பவரும் இல்லை" என்று சொல்வார்கள் நல்ல திருமண வாழ்க்கை அமையக் காரணகர்த்தா ராகுபகவான். போககாரன் என்று குறிப்பிடுவார்கள். இங்கே ராகு மங்கள ராகுவாக தன துணைவியர் நாகவள்ளி, நாககன்னி ( சிம்ஹி, சித்ரலேகா ) யுடன் எழுந்து அருள்பாலிக்கிறார். நீண்ட ஆயுளும், சகல சம்பத்தும் அளிக்க வல்லவர் ராகு. இவர் ஆட்சி நடைபெற்றால் அந்த ஜாதகர் ராஜவாழ்க்கை வாழ்வார் என்பது ஜோதிட கணிப்பு. இவரது சுழற்சி ஒன்றரை ஆண்டுகள். ராகுவுக்கு உகந்த நிறம் நீலம். உகந்த மலர் மந்தாரை. உரிய ரத்னம் கோமேதகம். தான்யம் உளுந்து, நைவேத்தியம் உளுந்துப்பொடி சாதம் .
மூலவர் செண்பகாரண்யேஸ்வரர், இறைவி கிரிகுஜாம்பாள். நாகராஜன் வழிபட்ட ஈசன் எனவே நாகநாத ஸ்வாமி என்றழைக்கப்படுகிறார். கும்பகோணத்தில் இருந்து 6 கிமீ அமைந்துள்ளது. ஸ்தலவிருட்ஷம் செண்பகம். தீர்த்தம் நாகதீர்த்தம் மற்றும் சூரிய தீர்த்தம் உட்பட பன்னிரு தீர்த்தங்கள். சூரிய புஷ்கரணி இது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
ஹனுமத் ஜெயந்தி கோலங்கள்
ஹனுமத் ஜெயந்தி கோலங்கள் இந்தக் கோலங்கள் 22.12.2022 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.
-
குன்றக்குடியின் சுப்புலெட்சுமி . பள்ளி முழுப்பரிட்சை விடுமுறை தினங்களில் காரைக்குடி வரும்போது குன்றக்குடிக்குப் பாதயாத்திரையாக அத்தைமக்கள் அ...
-
திருப்புகழைப் பாடப் பாட.. சில மாதங்களுக்கு முன்பு இல்லத்தில் திருப்புகழ் பாராயணம் நடைபெற்றது. முருகப் பெருமானின் மேல் அருணகிரிநாதர் பக்தி கெ...
-
சொக்கேட்டான் கோயில் சொக்கேட்டான் கோயில், சொற்கேட்ட விநாயகர் ,சொற்கேட்டான் கோயில், சொல் கேட்ட ஐயா ஆகிய பெயர்களோடு விளங்கும் விநாயகரை சில...