வேலங்குடி கண்டீஸ்வரர், காமாட்சியம்மன் திருக்கோயில்
காரைக்குடியில் இருந்து ( 9 கிமீ தூரத்தில்) புதுக்கோட்டை செல்லும் வழியில் கோட்டையூரில் உள்ள வேலங்குடியில் அமைந்துள்ளது அருள்மிகு கண்டீஸ்வரர் காமாட்சி அம்மன் திருக்கோயில். அருகில் ஒரு பெருமாள் கோயிலும், சொக்கேட்டான் ( விநாயகர் ) கோயிலும் அமைந்துள்ளது. எதிரே பெரிய மைதானமும் மாபெரும் ஊருணியும் இருக்கிறது.
ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் இதுவும். வேல மரங்கள் அதிகம் இருந்த காரணத்தால் இது வேலங்குடி என அழைக்கப்பட்டதாம். மிகப்பெரும் கம்பீரமான கோயில் இது.
கிழக்குப்பக்கம் மூன்று நிலை கொண்ட இராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. ஆனால் கோயிலின் தெற்கு வாயில் அம்பாள் சந்நிதியின் பக்கமே திறந்துள்ளது.
ஒருநாள் காலையில் புறப்பட்டு தரிசனம் செய்யச்சென்றோம். அப்போதுதான் காலை திருவனந்தலுக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. சந்நிதியாகத் திறக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அர்ச்சகர் சுத்தம் செய்து கொடிருந்தாரார். ஒரே ஒருவர் வந்து அங்கே நவக்ரகத்துக்கு விளக்கேற்றிக் கொண்டிருந்தார்.
இக்கோயில் இளையாற்றங்குடியில் இருந்து பிரிந்து வந்த நகரத்தாரால் கட்டப்பட்டது என்றாலும் இதன் முழுமையான ஸ்தல புராணமும் இக்கோயில் புஷ்கரணியின் பெரும் தெரியவில்லை.
ஆலங் குடித்த கண்டீசர்
அன்புயர் அன்னை காமாட்சி
ஞாலம் இதனைக் காத்தருள
நாடிவந் தமர்ந்த நற்பதியாம்
வேலங்குடிக்குச் சென்றேநாம்
விழிகள் சொரியக் கும்பிட்டால்
காலம் முழுதும் மகிழ்வேதான்
கருணை முகிலின் பொலிவேதான்.
-- நன்றி நமது செட்டிநாடு இதழ்.நவம்பர் 2015.
இப்பாடலை வைத்துப் பார்க்கும்போது இந்த ஈசன் ஆலங் குடித்து கண்டத்தில் அடக்கி இவ்வுலகைக் காத்தவர் என்று சொல்லப்பட்டுள்ளது.எனவே அவர் கண்டீசர் என வழங்கப்படுகிறார்.
கண்டத்தில் ஆலத்தை அடக்கியமையால் கண்டீசர், அன்பு கொண்ட கண்களால் பக்தர்களை நோக்கி அருள் புரிவதால் காமாட்சியம்மன் என்று இறைவன் இறைவிக்குப் பெயர்.
வேலங்குடி என்றதும் நமக்கு கண்ணதாசனின் வேலங்குடித் திருவிழா என்ற ஒரு நாவல் ஞாபகம் வரலாம்.
லிங்கோத்பவர்.
இந்தக் கோயிலில் புள்ளிகள் கம்மி. இங்கே மாணிக்கவாசகர் அருகில் இருக்கும் யோக தண்டம் சிறப்பு. இது உபதேசம் கொடுக்கும் சுவாமிகளுடையது என்கிறார்கள். வாய்ந்தது. அதேபோல் பைரவ மூர்த்தியும் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.
விநாயகர் முருகனுக்கு கிழக்கில் தனிச்சந்நிதி.
விதானத்தில் கல்தாமரை. சுதைச் சுண்ணமா தெரியவில்லை.
நன்கு நீண்ட வெளிப்பிரகாரம். நன்கு பராமரிக்கப்படும் கோயில் இது.
வயநாச்சியம்மன் கோயிலும் இங்கு பிரசித்தம்.
தேவர்கள் புடைசூழ மீனாட்சி திருக்கல்யாணம் அம்மன் சந்நிதி கோபுர வாயிலில் அமைந்துள்ளது.
கிழக்குப் பக்கம் ஏழு எட்டுப் படிகளோடு உயர்ந்து காட்சி அளிக்கும் கோபுர வாயில் ஏனோ இரும்புக்கு கம்பிக் கதவுகளால் மூடப்பட்டுள்ளது.
வேலங்குடிக் கோயிலைச்சார்ந்தவர்கள் "கேரள சிங்கவள நாடாகிய பாலையூர் நாட்டில் வேலங்குடியான தேசிக நாராயணபுரத்தில் கழனி நல்லூருடையார்." என்று குறிப்பிடுவர்.
வேலங்குடியில் ஏழூர்ச்செவ்வாய் பிரசித்தம். நவராத்திரி, திருவிளக்கு பூஜை போன்றவை இன்னும் பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
டிஸ்கி :-
இவற்றையும் பாருங்க.
1. மாத்தூர் ஐந்நூற்றீசுவரர் பெரியநாயகியம்மன் திருக்கோயில்
2. இலுப்பைக்குடி தான்தோன்றீசுவரர் சவுந்தரநாயகியம்மன் திருக்கோயில் :-
3. வேலங்குடி கண்டீஸ்வரர், காமாட்சியம்மன் திருக்கோயில்
4. இளையாற்றங்குடிக்கோவிலில் அபூர்வ ஓவியங்கள்:- .நர்த்தன நடராஜரும், கங்காதரரும்.
5. சூரக்குடி தேசிகநாதர் ஆவுடைநாயகியம்மன் திருக்கோயில்.
6. இளையாற்றங்குடி கைலாசநாதர் நித்யகல்யாணியம்மன் திருக்கோயில்
7. இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவியம்மன் திருக்கோயில்.
8. நேமம் ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் சௌந்தரநாயகியம்மன் திருக்கோயில்.
9. வைரவன்பட்டி வளரொளிநாதர் வடிவுடையம்மன் திருக்கோயில்.
10. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், மருதீசர், வாடாமலர் மங்கையம்மன் திருக்கோயில்.
ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் இதுவும். வேல மரங்கள் அதிகம் இருந்த காரணத்தால் இது வேலங்குடி என அழைக்கப்பட்டதாம். மிகப்பெரும் கம்பீரமான கோயில் இது.
கிழக்குப்பக்கம் மூன்று நிலை கொண்ட இராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. ஆனால் கோயிலின் தெற்கு வாயில் அம்பாள் சந்நிதியின் பக்கமே திறந்துள்ளது.
ஒருநாள் காலையில் புறப்பட்டு தரிசனம் செய்யச்சென்றோம். அப்போதுதான் காலை திருவனந்தலுக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. சந்நிதியாகத் திறக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அர்ச்சகர் சுத்தம் செய்து கொடிருந்தாரார். ஒரே ஒருவர் வந்து அங்கே நவக்ரகத்துக்கு விளக்கேற்றிக் கொண்டிருந்தார்.
காமாட்சியம்மன் |
ஆலங் குடித்த கண்டீசர்
அன்புயர் அன்னை காமாட்சி
ஞாலம் இதனைக் காத்தருள
நாடிவந் தமர்ந்த நற்பதியாம்
வேலங்குடிக்குச் சென்றேநாம்
விழிகள் சொரியக் கும்பிட்டால்
காலம் முழுதும் மகிழ்வேதான்
கருணை முகிலின் பொலிவேதான்.
-- நன்றி நமது செட்டிநாடு இதழ்.நவம்பர் 2015.
இப்பாடலை வைத்துப் பார்க்கும்போது இந்த ஈசன் ஆலங் குடித்து கண்டத்தில் அடக்கி இவ்வுலகைக் காத்தவர் என்று சொல்லப்பட்டுள்ளது.எனவே அவர் கண்டீசர் என வழங்கப்படுகிறார்.
கண்டத்தில் ஆலத்தை அடக்கியமையால் கண்டீசர், அன்பு கொண்ட கண்களால் பக்தர்களை நோக்கி அருள் புரிவதால் காமாட்சியம்மன் என்று இறைவன் இறைவிக்குப் பெயர்.
வேலங்குடி என்றதும் நமக்கு கண்ணதாசனின் வேலங்குடித் திருவிழா என்ற ஒரு நாவல் ஞாபகம் வரலாம்.
லிங்கோத்பவர்.
இந்தக் கோயிலில் புள்ளிகள் கம்மி. இங்கே மாணிக்கவாசகர் அருகில் இருக்கும் யோக தண்டம் சிறப்பு. இது உபதேசம் கொடுக்கும் சுவாமிகளுடையது என்கிறார்கள். வாய்ந்தது. அதேபோல் பைரவ மூர்த்தியும் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.
விநாயகர் முருகனுக்கு கிழக்கில் தனிச்சந்நிதி.
விதானத்தில் கல்தாமரை. சுதைச் சுண்ணமா தெரியவில்லை.
நன்கு நீண்ட வெளிப்பிரகாரம். நன்கு பராமரிக்கப்படும் கோயில் இது.
வயநாச்சியம்மன் கோயிலும் இங்கு பிரசித்தம்.
தேவர்கள் புடைசூழ மீனாட்சி திருக்கல்யாணம் அம்மன் சந்நிதி கோபுர வாயிலில் அமைந்துள்ளது.
கிழக்குப் பக்கம் ஏழு எட்டுப் படிகளோடு உயர்ந்து காட்சி அளிக்கும் கோபுர வாயில் ஏனோ இரும்புக்கு கம்பிக் கதவுகளால் மூடப்பட்டுள்ளது.
வேலங்குடிக் கோயிலைச்சார்ந்தவர்கள் "கேரள சிங்கவள நாடாகிய பாலையூர் நாட்டில் வேலங்குடியான தேசிக நாராயணபுரத்தில் கழனி நல்லூருடையார்." என்று குறிப்பிடுவர்.
வேலங்குடியில் ஏழூர்ச்செவ்வாய் பிரசித்தம். நவராத்திரி, திருவிளக்கு பூஜை போன்றவை இன்னும் பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
டிஸ்கி :-
இவற்றையும் பாருங்க.
1. மாத்தூர் ஐந்நூற்றீசுவரர் பெரியநாயகியம்மன் திருக்கோயில்
2. இலுப்பைக்குடி தான்தோன்றீசுவரர் சவுந்தரநாயகியம்மன் திருக்கோயில் :-
3. வேலங்குடி கண்டீஸ்வரர், காமாட்சியம்மன் திருக்கோயில்
4. இளையாற்றங்குடிக்கோவிலில் அபூர்வ ஓவியங்கள்:- .நர்த்தன நடராஜரும், கங்காதரரும்.
5. சூரக்குடி தேசிகநாதர் ஆவுடைநாயகியம்மன் திருக்கோயில்.
6. இளையாற்றங்குடி கைலாசநாதர் நித்யகல்யாணியம்மன் திருக்கோயில்
7. இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவியம்மன் திருக்கோயில்.
8. நேமம் ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் சௌந்தரநாயகியம்மன் திருக்கோயில்.
9. வைரவன்பட்டி வளரொளிநாதர் வடிவுடையம்மன் திருக்கோயில்.
10. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், மருதீசர், வாடாமலர் மங்கையம்மன் திருக்கோயில்.
Thulasidharan V Thillaiakathu20 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 4:29
பதிலளிநீக்குபடங்கள் மிக அழகு கோயியைப் பற்றியும் தெரிந்து கொண்டோம்...
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan28 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 7:30
nandri Geeths.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
பதிலளிநீக்கு
தெம்மாங்குப் பாட்டு....!!6 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 10:43
நல்லப் பதிவு, நன்றி.