நெல்லிமரத்துப் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம் :-
10.9.2017 அன்று காரைக்குடியில் நாவன்னா புதூர் நகரச்சிவன் கோயில் அருகில் உள்ள நெல்லிமரத்துப் பிள்ளையாருக்குக் கும்பாபிஷேகம் காலை பத்துமணி அளவில் நடைபெற்றது. இது யாகசாலை.
நவயுகப் புத்தகாலயம் மெய்யப்ப அண்ணனின் பிள்ளைகள் இந்நிகழ்வை சிறப்பாக நடத்தினார்கள்.
எங்கள் ஐயா இருந்தபோது தினமும் இந்தப் பிள்ளையாரை வணங்கிவிட்டுத்தான் காலைப் பலகாரமே உண்பார்கள்.
பலகாலம் என்னுடைய ஈமெயில் பாஸ்வேர்டாக இவர் பெயர்தான் இருந்திருக்கிறது :) கடவுள் பெயரை எல்லாம் பாஸ்வேர்டாக வைக்கக் கூடாது என்று பிள்ளைகள் அறிவுறுத்தியபின்தான் மாற்றினேன் :)
எங்கள் குடும்பத்தின் எல்லா சுப நிகழ்வுகளின்போதும் இவருக்கு முதல் வணக்கம் ( அபிஷேக ஆராதனை ) செய்துவிட்டுத்தான் ஆரம்பிப்போம்.
அநேகமாக ஒவ்வொரு முறையும் இங்கே தாய்வீடு வரும்போது எங்கள் அத்தைகளுக்கு 3 அல்லது 5 என்று சிதறுகாய் வேண்டுதல் இருக்கும்.
எங்கள் வாழ்வோடும் வளத்தோடும் இணைந்த இந்த விநாயகருக்கு எங்கள் பாட்டனார் வெள்ளிக்கவசம் செய்து வைத்துள்ளார்கள். பெட்டகத்தில் இருக்கும் அதை நாள் கிழமைகளில் சாற்றி வணங்குவதுண்டு.
இக்கோயில் அருகே சொல்கேட்ட கல்யாண விநாயகர், 108 பிள்ளையார், ஆஞ்சநேயர், அம்மன், பதினெட்டாம்படிக் கருப்பர் ஆகிய தெய்வங்களுக்கும் கோயில் அமைந்துள்ளது.
சநீஸ்வரபகவானுக்கும் தனிக்கோயில் நகரச்சிவன் கோயிலை ஒட்டி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது
சுற்றி அமைந்த எல்லாக் கோயில்களும் பெரிதாக்கிக் கொண்டே போக இவரது கோயில் மட்டும் சின்னதாக ஆகிவிட்டதுபோல் வருத்தமாக இருந்தது. மேலும் பராமரிப்பும் குறைந்துவிட்டது போலத் தோன்றியது.
இன்று கும்பாபிஷேகம் நிகழ்ந்து ஜொலிக்கும் அவரது கோயிலைப் பார்த்ததும் நிம்மதியானது. சம்பளம் வாங்கியதும் முதல் சிறு தொகை அவர் பெயர் சொல்லி வைத்திருக்கும் சாமி டப்பாவில் போட்டு விடுவேன். அது ஒரு கணிசமான தொகையாக ஆகி இருந்தது. அதை என் தந்தை மூலம் எங்கள் பங்களிப்பாகக் கொடுத்ததில் சந்தோஷம் பெருகியது.
கும்பாபிஷேகம் முடிந்ததும் கும்பநீர் தெளிக்கின்றார்.
அவரது கோயிலில் இருந்து பிரசாதமாகக் காளாஞ்சி ( சில்வர் வாளியில் அர்ச்சனை செய்த தேங்காய் , வெற்றிலை பாக்கு, ஒரு சீப்பு வாழைப்பழம், ஆப்பிள், சாத்துக்குடி, மஞ்சள் குங்குமம் ஆகியன ) கிடைத்தது பெரும்பாக்கியம்.
அவர் நம்மைக் காக்கின்றார். நாம் அவரை நினைத்தாலும் நினையாவிட்டாலும். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளுக்கு நாம் என்ன செய்துவிட முடியும்.. வெல்லப் பிள்ளையாரைக் கிள்ளி வெல்லப் பிள்ளையாருக்கே படைத்ததுபோலத்தான். :)

Thulasidharan V Thillaiakathu11 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 3:26
பதிலளிநீக்குநல்ல நிகழ்வு..//அவர் நம்மைக் காக்கின்றார். நாம் அவரை நினைத்தாலும் நினையாவிட்டாலும். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளுக்கு நாம் என்ன செய்துவிட முடியும்.. வெல்லப் பிள்ளையாரைக் கிள்ளி வெல்லப் பிள்ளையாருக்கே படைத்ததுபோலத்தான். :)// உண்மை....ரசித்தவரிகள்
பதிலளிநீக்கு
G.M Balasubramaniam11 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 4:11
நல்லதொரு பதிவு வாழ்த்துகள்
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan28 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 7:11
mikka nandri Tulsi sago
mikka nandri Bala sir.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!