திருமயம் கோட்டை குடைவரை லிங்கக்கோயில்.
ஒரே வழுக்கும் பாறைகள் . எங்கும் பிடிமானம் இல்லை. படி இறங்கி வந்தால் இன்னும் பள்ளம் .அங்கே ஏணி மாதிரி இரும்புப் படியிலிருந்து எல்லாரும் இறங்கிக்கிட்டு இருக்காங்க. கொஞ்சம் எட்டிப் பார்த்தா அட ஏறிட்டு அதன்பின் இறங்கிகிட்டு இருக்காங்க ! அங்க என்ன இருக்கு ? அதீத ஆவலோடு போனோம்.
பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட கோயில் இருக்காம். பார்க்கப் போறோம். ரெடியா இருங்க. இங்கே மூன்று குடைவரை குகைக்கோயில்கள் இருக்கு. சத்யகிரீஸ்வரர் கோயில்( சிவன் ), சத்தியமூர்த்தி கோவில் ( விஷ்ணு ). அதன் பின் இந்த குகை லிங்கோத்பவர் கோயில்.
சத்தியகிரி என்னும் இம்மலையே சாளக்கிராம மலைக்கு ஒப்பானதாம். இந்தக் கோயில்களை ராக் கட் டெம்பிள்ன்னு சொல்றாங்க. பாறையை வெட்டி அதனுள்ளே குடைந்து லிங்கத்தையும் அதே பாறையிலேயே வடிவமைச்சிருக்காங்க.
ஏறவா வேணாமான்னு பார்த்துக்கிட்டே நடந்தா ரங்க்ஸ் என் பயத்தைக் கண்டுபிடிச்சிட்டாரு. நீ வேணா கீழ நில்லு. நான் வேணா ஏறிப் பார்த்துட்டு வர்றேன்னார். அட நமக்குத்தெரியாம அங்கே என்ன இருக்கோ பார்த்தே ஆவணும்னு துணிஞ்சு ஏறிட்டேன். :)
அந்தப் படிகள்ல ஏறவே பயமா இருந்தது. கிடுகிடுன்னு ஆடுறாப்புல. ஏறக்கூட பரவாயில்லை இறங்க இன்னும் பயம். கரணம் தப்பினால் மரணம் இல்ல ஆனால் கால் பெண்டாகிடுமோன்னு ( ஸ்லிப் ஆகி பிராக்சர் ) பயம்.
உள்ளே அட ! அழகான சிவலிங்கம். எந்தக் காலத்திலேயோ இந்தப் பாறையைக் வெட்டி அதனுள்ளே சதுர பீடமும் நீள பாணமும் கொண்ட ஆவுடையாரை பிரதிஷ்டை பண்ணி இருக்காங்க. நம்ம மக்களோ பக்திப் பரவசத்துல பூப்போட்டு அவர்மேலேயே விளக்கும் ஏத்தி இருக்காங்க.
பணம் வேற போட்டு அர்சிச்சிருக்காங்க
ஆனா பிரதக்ஷிணம் செய்ய முடியல. ஏன்னா கோமுகி லிங்கத்தை ஒட்டி இருந்தது. அதைத் தாண்டலாமா கூடாதான்னு தெரியல. அந்தக் குடைவரைக் கோயிலுக்குரிய கதவை வேற கழட்டி அங்கேயே போட்டு வைச்சிருந்தாங்க.
அதுனால பாத்தமா நமச்சிவாய, சிவாய நமஹ, சிவ சிவ,
சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளுஞ்
சிவசிவ என்றிடத் தேவரு மாவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே. --
அப்பிடின்னு சொல்லிட்டு இறங்கியாச்சு .
ஹையா ..இறங்கியாச்சு ..இறங்கியாச்சு..
இந்த திருமயம் கோட்டைல இன்னும் இரண்டு குடைவரைக் கோயில்கள் இருக்கு. ஊமைத்துரை மறைவிடம் இருக்கு. பீரங்கிகள் இருக்கு, இன்னும் என்னென்ன அதிசயத்தை எல்லாம் ஒளிச்சு வைச்சிருக்கோ இந்தக் கோட்டை.

Thenammai Lakshmanan28 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 7:26
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!