எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 20 ஜூலை, 2020

மாத்தூர் ஐந்நூற்றீசுவரர் , பெரியநாயகியம்மன் திருக்கோயில்

மாத்தூர் ஐந்நூற்றீசுவரர் , பெரியநாயகியம்மன் திருக்கோயில்

காரைக்குடியில் இருந்து ஆறு கிமீ  தூரத்தில் அமைந்துள்ளது மாத்தூர் கோயில். நகரத்தார் கோயில்கள் ஒன்பதும் அடுத்தடுத்து இரு நாட்களில் தரிசிக்கும் பேறு பெற்றேன் . எல்லாக் கோயில்களுமே கிட்டத்தட்ட ஐம்பது கிமீ சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ளன. முதலில் மாத்தூர்.

இக்கோயில் பற்றி முன்பே சில இடுகைகள் எழுதி உள்ளேன். இரண்டாம் நூற்றாண்டில்  கட்டப்பட்ட மிகப்.பழமையான கோயில் இது.   மாத்தூர் கோயில் ஊரணியின் பெயர் கமலாலய தீர்த்தம். ஸ்தலவிருட்சம் மகிழமரம்.மாசிமாத திருவிழா பிரசித்தம்.
கொங்கணச்சித்தர் என்னும் முனிவர் ரசவாத வித்தையால் தங்கம் தயாரிக்க முற்பட அவரைத் தடுத்தாட்கொண்ட ஈசன் குடிகொண்ட கோயில் இது. தங்கத்துக்கு மாற்றுரைத்த ஈசன் என்பதால் ஐந்நூற்றீசுவரர் என்றழைக்கப்படுகிறார். தேவி பெரியநாயகி அம்மன்.


சிவன் சந்நிதி எல்லா நகரச்சிவன் கோயில்களிலும் கிழக்குப் பார்த்தும், அம்மன் சந்நிதி தெற்குப் பார்த்தும் அமைந்திருக்கும்.


நான்கு சிம்மங்கள் தாங்கி நிற்கும் உயர்வுமிகு நந்தி இங்கே விசேஷம்
எழில்மிகு உறுதியான கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டான கோயில் இது. 1949 இல் 2002 , 2015 யிலும் கும்பாபிஷேகம் நடந்து அழகுற பராமரிக்கப்படும் கோயில் இது.

வல்லப கணபதி, மயில்மேல் அமர்ந்த ஷண்முகநாதர், இரட்டை நாய் வாகனம் கொண்ட வைரவர்,

கதை சூலத்துடன் ஆனந்தக்  காட்சி தரும் மகிழ மரத்தடி ஆனந்த முனீஸ்வரர் சக்தி வாய்ந்தவர்.
கோயிலுக்குள்ளேயே இவருக்கு சிதறுகாய் உடைப்பதுண்டு. மேலும் இவருக்கு சாம்பிராணி காட்டி தீபம் காட்டுவார்கள்.
திருவிழாவின்போது பயன்படும் பீடங்கள். 
கம்பீர  ரிஷபவாகனம்.

நந்தியம்பெருமானுக்கு மாப்பிள்ளை அலங்காரம் செய்வதாக வேண்டிக்கொண்டால் உடனடியாகத் திருமணம் ஆகாத இளையர்களுக்குத் திருமணம் நடைபெறுகிறதாம்.
தேர்க்கொட்டகை
கோயிலுக்கு வெளியே  கிழக்கு பார்த்து ஒரு விநாயகர் கோயிலும்
தெற்கு பார்த்து ஒரு மாரியம்மன் கோயிலும் இருக்கிறது.
வெள்ளைக் கற்களால் உருவான சண்டிகேசுவரர், சிங்க சிற்பத்தின் வாய்க்குள் உருளும் கல், பன்னிரு ராசிகளும் அம்மன் சந்நிதியின் முன்பு விதானத்தில் செதுக்கப்பட்டிருப்பது, இயற்கை சாளர முறையில் கருவறையின் பக்கம் கூட வியர்க்காமல் தேவையான காற்று வருவது ,  திருவோடு மரம் , நட்சத்திர விருட்சங்கள் நடப்பட்டிருப்பது, பசு ஸ்தோத்திரம் ஆகியன சிறப்பு. இதன் தென்புறம் இருக்கும் புஷ்கரணி வெகு கட்டுக் கோப்பாகவும் அழகாகவும் இருக்கும்.


மாத்தூர் ஏழு பிரிவைச்சார்ந்தவர்களுக்கும் ( மாற்றூர்க்கோயில். கேரள சிங்கவள நாடாகிய பிரம்பூர் நாட்டில் மாற்றூரான வீரபாண்டியபுரத்தில் 1. உறையூருடையார், 2. அரும்பாக்கூருடையார், 3. மணலூருடையார், 4. மண்ணூருடையார், 5. கண்ணூருடையார், 6. கருப்பூருடையார், 7. குளத்தூருடையார்.) இக்கோயில்தான் முதன்மை ஸ்தலம் .

இங்கே கோயிலில் பாக்கு வைத்தபின்தான் திருமணம் சொல்லச்செல்வார்கள்.  கோயில் மாலை வந்தால்தான் திருமணம் நடக்கும். மணமக்களுக்கு முதலில் அணிவிக்கப்படும் மாலை கோயில்மாலைதான். கோயிலில் புள்ளியாக அங்கீகாரமும் கிடைக்கும்.

இக்கோயில்களில் ஒரு சிறப்பு என்னவென்றால் உண்டியல் இருக்காது.  நகரத்தார் பராமரிப்பில் இருப்பதால் அர்ச்சகர்களின் கெடுபிடி இருக்காது. சென்றோம் வணங்கினோம் வந்தோம் என மகிழ்வாக இருக்கலாம்.

காரைக்குடி வந்தால் கட்டாயம் இக்கோயிலுக்குப் போய்வாங்க.

லோகாதயப் பொருட்களில் இருந்து சித்தரைத் தடுத்தாட்கொண்ட ஈசன் நம்மையும் லோகாயத விஷயங்களில் இருந்து தடுத்தாட்கொண்டு கதிமோட்சம் வழங்குவார்.


டிஸ்கி :- இதையும் பாருங்க


1.விருட்சங்களை நடுவோம் ! வனவாழ்வியல் காப்போம். !

2.16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும். 

  3.பசு ஸ்தோத்திரமும், நட்சத்திரக் கோயில்களும், திருவோடு மரமும்.


16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.
https://honeylaksh.blogspot.com/2016/06/16-500.html

விருட்சங்களை நடுவோம் ! வனவாழ்வியல் காப்போம். !
https://honeylaksh.blogspot.com/2016/03/blog-post_21.html

பசு ஸ்தோத்திரமும், நட்சத்திரக் கோயில்களும், திருவோடு மரமும்.
https://honeylaksh.blogspot.com/2017/01/blog-post_23.html

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. மாத்தூர் ஐந்நூற்றீசுவரர்  பெரியநாயகியம்மன் திருக்கோயில்

2. இலுப்பைக்குடி தான்தோன்றீசுவரர் சவுந்தரநாயகியம்மன் திருக்கோயில் :- 

3. வேலங்குடி கண்டீஸ்வரர், காமாட்சியம்மன் திருக்கோயில் 

4. இளையாற்றங்குடிக்கோவிலில் அபூர்வ ஓவியங்கள்:- .நர்த்தன நடராஜரும், கங்காதரரும். 

5. சூரக்குடி தேசிகநாதர் ஆவுடைநாயகியம்மன் திருக்கோயில்.

6. இளையாற்றங்குடி கைலாசநாதர் நித்யகல்யாணியம்மன் திருக்கோயில்

7. இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவியம்மன் திருக்கோயில்.

8. நேமம் ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் சௌந்தரநாயகியம்மன் திருக்கோயில்.

9. வைரவன்பட்டி வளரொளிநாதர் வடிவுடையம்மன் திருக்கோயில்.

10. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், மருதீசர், வாடாமலர் மங்கையம்மன் திருக்கோயில்.

1 கருத்து:

  1. மனோ சாமிநாதன்15 செப்டம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 11:05
    கோவில் பற்றிய விபரங்கள் அருமை! சிறப்பான புகைப்படங்களும் ஓவியங்களும் இது ஒரு பழம்பெரும் கோவில் என்பதைக்காட்டுகிறது!

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan28 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 7:21
    aam Mano mam 1500 aandu palamai vayntha koil endru sameepathil arinthen. karuthukku nandri.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.