எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 8 ஜூலை, 2020

கரூர் கல்யாணவெங்கட்ரமணர், கல்யாண பசுபதீஸ்வரர், மாரியம்மன், கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில்கள் ;-

கரூர் கல்யாணவெங்கட்ரமணர், கல்யாண பசுபதீஸ்வரர், மாரியம்மன், கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில்கள் ;-

முதலில் சென்றது மகாமாரி என்று கருவூரை ஆடசி செய்யும் மாரியம்மன் திருக்கோயில்தான். பொங்கும் அவள் அருளாட்சியில் நனைந்து மனம் குளிர்ந்தது. அம்மை போன்ற உஷ்ணாதிக்க நோய்களைத் தீர்ப்பதோடு வாழ்வை வளமும் நலமும் பெறச் செய்யும் அம்மன் இவள். கிழக்கு நோக்கிய சந்நிதியில் நான்கு கரங்களுடன் அருள்பாலிக்கிறாள் சக்தி.

மண்ணில் பிறந்து மண்ணை அடைகிறோம் என்பதற்காக இங்கே திருமண்தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது. மஞ்சள் நீர்க் கம்பம் உற்சவம் விசேஷம். கம்பத்துக்கு தயிர் சாதம் படையலிட்டு சாமி கும்பிடுவார்கள். 

அடுத்து.,

தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ராமணர் கோயிலுக்கு ஒரு மாலை வேளையில் சென்றோம்
ஒரு சிறு குன்றின்மேல் ஒரு பாறையில் தானே சுயம்புவாகத் தோன்றி ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி அளிக்கும்  வெங்கட்ரமணரைத் தரிசித்தோம். 500 வருடங்கள் பழமை வாய்ந்த கோயில் இது.




பெரிய திருவடி

மரு போன்றவை நீங்க இங்கே உப்பு மிளகு வெல்லம் போட்டுப் பிரார்த்தனை செய்கிறார்கள்.

 கல்யாண பாக்யம், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டிக்கொண்டால் அது உடன் நிறைவேறுகிறது. செம்மாலி சமர்ப்பணம் என்பது இங்கே விசேஷம்.


கல்யாணபசுபதீஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலம். காமதேனு வழிபட்ட தலமும் கூட.

மூலவர் பசுபதீஸ்வரர், இறைவி சௌந்தரநாயகி (அலங்காரவல்லி ) , கிருபா நாயகி. கரூர் நகரின் மத்தியில் பஸ்  கோயில் அமைந்துள்ளது.

தலமரம் வஞ்சி. தீர்த்தம் தடாகை தீர்த்தம், அமராவதி நதி. 
பதினெட்டுச் சித்தர்களுள் ஒருவரான சித்தர் கருவூராருக்குத் தனி ஆலயம் உள்ளது.  ராகு கேதுவுக்குத் தனிச்சந்நிதியும் உள்ளன. மிகப் பெரிய கோவில் இது. பூந்தோட்டம் போல் நிறைய செடிகொடிகள். நடைபாதையைச்  சுற்றிப் புல்வெளிகள். புகழ்சோழர் மண்டபம் என்னும் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. முசுகுந்தச் சக்கரவர்த்தியின் சிலை உள்ளது.

கரூரில் இருந்து 25 கிமீ தொலைவில் அமைந்துள்ளது கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில். ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் ஏற்பட்ட போட்டியில்  சிதறிய மேருமலையை ஒரு துண்டு வைரமணியாகச்  சிதறி பாண்டிக்கொடுமுடி ஆயிற்றாம்.



இங்கே மும்மூர்த்திகளும் கோயில் கொண்டுள்ளது சிறப்பு. நாயன்மார் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். சுந்தரர் நமச்சிவாயப்பதிகம் பாடிய தலமாகும்.
ஈசன் மகுடேஸ்வரர் என்ற கொடுமுடிநாதர், இறைவி திரிபுர சுந்தரி, தீர்த்தம் தேவதீர்த்தம், பிரம்மதீர்த்தம் ,காவிரி. வடக்கிலிருந்து தெற்காகப் பாயும் காவிரி இங்கே கிழக்கே திசை திரும்பிச் செல்கிறது. ஸ்தலவிருட்ஷம் வன்னிமரம். வீரநாராயணப் பெருமாள், பிரம்மா ஆகியோரையும் ஒருங்கே வணங்கலாம்.
இங்கே மலையம்மன் கோவில், பஸ் ஸ்டாண்டை ஒட்டி இன்னும் சில கோயில்கள் உள்ளன. அவற்றையும் தரிசித்தோம். 

ஆ வழிபட்டதால் ஆநிரையப்பர் என்றும் அழைக்கப்படுகிறார். இங்கும் கல்யாணவரம், குழந்தைவரம் வேண்டி நின்றால் நினைத்தது நிறைவேறுகிறது என்கிறார்கள். இவரும் சுயம்புமூர்த்தி. இவரை வணங்குவோருக்கு மனஅமைதி கிடைக்கும்.

குறிப்பு :- கொடுமுடி & கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் படங்கள் எது என்று பிரிக்க முடியவில்லை. கலந்து விட்டன.

1 கருத்து:

  1. சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country1 செப்டம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 11:18
    இந்த அனைத்துக் கோயில்களுக்கும் சென்றுள்ளேன். இன்னும் இரண்டு மாதங்களில் கொங்கு நாட்டிலுள்ள பாடல் பெற்ற தலங்களுக்கு கோயில் உலா செல்ல உள்ளோம். (படங்கள் எது என பிரிக்கமுடியவில்லை என்று கூறியுள்ளீர்கள். நாங்கள் சில சமயங்களில் ஒரே நாளில் 15 கோயில்கள் வரை செல்லும் வாய்ப்பு கிடைக்கும். ஒவ்வொரு கோயிலுக்குச் சென்று வெளியே வந்தபின் உடனே அந்தந்த பெயருடன் ஒரு கோப்பினை உருவாக்கி புகைப்படங்களை அதனை வைத்துவிடுவேன். இந்த முறையானது புகைப்படங்கள் கலக்காமல் இருக்க உதவியாக உள்ளது. இதனை நான் என் கைபேசியிலுள்ள கேமரா மூலமாகவே செய்துவருகிறேன்)

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan17 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 11:40
    anegamaga ipothu apadithan seithu varukiren . ithu palaiya laptop il irunthu kidaithathu. athanal therila Jambu sir. ideavukku nandri :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

ஹனுமத் ஜெயந்தி கோலங்கள்

ஹனுமத் ஜெயந்தி கோலங்கள்  இந்தக் கோலங்கள்  22.12.2022 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.