எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

ஒரு தேரில் இத்தனை சிற்பங்களா ?

ஒரு தேரில் இத்தனை சிற்பங்களா ?

கடியாபட்டி பூமிஸ்வர சுவாமி கோயிலின் தேரைப் பார்த்து இன்றுவரை வியந்துகொண்டே இருக்கிறேன். ஒரு தேரை கிட்டத்தில் இவ்வளவு தெளிவாகப் பார்த்தது அன்றுதான்.



காரைக்குடி கொப்புடையம்மன் தேரின்போது அர்ச்சனை செய்யச் சென்றிருக்கிறோம். அதேபோல் அநேக கோயில்களில்  ( சிதம்பரம், திருவாரூர், மன்னார்குடி, காரைக்குடி நாவன்னா புதூர் பெருமாள் கோயில் தேர், சப்பரம் ) தரிசனம் செய்திருக்கிறோம்.ஆனால் அவற்றின் சிற்ப நுட்ப வேலைப்பாடுகளைக் கவனிக்கும் வாய்ப்பு என் சித்தப்பாவால் கிட்டியது. கடியாபட்டிக்குச் சென்றிருந்தபோது இத்தேரைப் பார்க்க அழைத்துச் சென்றார்கள்.

காமிரா கண்களால் பார்த்து மிக வியந்தேன். சின்னச்சின்ன மரத்துண்டுகளுக்குள் எவ்வளவு நுட்பமான சிற்பங்கள். உக்கிரமான  அனைத்துமே  அத்தேரில் இருந்தன
போர்புரியும் சாமிகள், ஆலிலை கிருஷ்ணன், தவம் செய்யும் முனி சிரேஷ்டர்கள், தியானம் , யோகம் செய்யும் சாமியார்கள் என பல்வேறுவிதமாகக் கலந்து கட்டியும் இருந்தன சிற்பங்கள்.

குட்டி தேவதைகள், பூதகணங்கள், நந்திதேவர், கருடன், ஆஞ்சநேயர், சுகப்பிரம்ம ரிஷி , சிம்மங்கள், யாளிகள், யானைகள், என ஒரே சிற்பக் கூட்டம்.

இதுபோக பிள்ளையார், முருகன், சிவன், பார்வதி, தேரை முன்புறமிருந்தும் & பின்புறமிருந்தும் வழிநடத்தும் காடன், சுடலை மாடன், அங்காளம்மன், பாவாடைராயன், பேச்சியம்மா  போன்ற  சாமிகளும், அய்யனார்,கறுப்பர், முனியையா போன்ற தெய்வங்களும் இருந்தனர்.



 சக்தியின் அனைத்து ரூபங்களும் , நரசிம்மவதார  சிற்பங்களும், சரபேசர், பிரத்யங்கிரா , மகா காளி , பத்ரகாளி போன்ற அனைத்து சிலாரூபங்களும் உக்கிரத்துடன் இருந்தனர்.

தசாவதாரங்களும், 64 திருவிளையாடல்களும், அஷ்ட லெக்ஷ்மிகளும் , நவ துர்க்கைகளும்  என எல்லா தெய்வங்களின் உருவமும் வாழ்க்கை வரலாறும் கண்கொள்ளாக் காட்சியாகக் காணக் கிடைத்தன.

இரண்யவதம்
கத்தி, அரிவாள், கேடயம், வில் அம்பு, வாள், ஈட்டி, கதாயுதம், தண்டாயுதம், சூலாயுதம் வேலாயுதம்  தாங்கிய தெய்வங்கள்தான் அதில் காட்சி அளித்தார்கள்.
இவை எல்லாவற்றுடனும் தாமரைக் குமிழ்கள் வேறு தங்க நிறத்தில் பளபளத்தன , மணிகளும் அடுத்தடுத்து அழகு சேர்த்தன.


இதை எல்லாம் செஞ்சு பதிச்சங்களா இல்லை அதுலேயே செதுக்கினாங்களா ?





இதை பெயிண்ட் அடித்தவர்களிடம் கேட்டால் ஒன்றும் தெரியவில்லை அவர்களுக்கு. இது பல ஆண்டுகளுக்கு முற்பட்ட கலைபோலத் தோன்றுகிறது. யாராவது ஸ்தபதியைக் கேட்டால் தெரியுமென நினைக்கிறேன். :)

பார்த்துப் பார்த்து வியந்து சுற்றிச் சுற்றிப் புகைப்படமெடுத்துப் பகிர்ந்துள்ளேன்.

1 கருத்து:

  1. கரந்தை ஜெயக்குமார்18 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 7:00
    ஆகா எத்துனை திறமையாய்
    அருமையாய் படைத்திருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam19 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 3:10
    மரச் சிற்பங்கள் தானே நானும் பல தேர்களில் பார்த்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan28 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 7:27
    nandri Jayakumar sago

    aam .... nandri Balasir.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.