எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 28 செப்டம்பர், 2020

பூமீஸ்வர ஸ்வாமிதேரின் காவல் தெய்வங்கள். - சுடலை மாடனும் காட்டுக் கருப்பரும்.

பூமீஸ்வர ஸ்வாமிதேரின் காவல் தெய்வங்கள். - சுடலை மாடனும் காட்டுக் கருப்பரும்.

கடியாபட்டி பூமீஸ்வர ஸ்வாமி கோயிலின் தேரைப் பற்றி இரு இடுகைகள் முன்பே எழுதி உள்ளேன். அத்தேரின் கீழே செதுக்கப்பட்டுள்ள காவல் தெய்வங்கள் பற்றி இங்கே பார்ப்போம்.

முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் ஒவ்வொரு கட்டைகளிலுமாக பல்வேறு உக்ர தெய்வங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவை போக தனி அம்மன் , தனிச் சாமிகளும் செதுக்கப்பட்டுள்ளன.

”கீழ்க்கட்டையில் காவல் தெய்வங்கள். தேரைக் காவல் காக்கும் தெய்வங்கள். ஐயனார். வீரன், கருப்பர் போன்ற காவல் தெய்வங்கள். அதன் மேல்படியில் குதிரை வீரர்கள், வீரப் பெண்கள். அதன் மேல்படியில் உக்ர தெய்வங்கள். அதற்கும் மேல் படியில் சாத்வீக தெய்வங்கள் என மனதையும் கண்ணையும் கருத்தையும் நிறைத்தனர் தெய்வத் திரு உருவத்தினர்.

 தேரை முன்புறமிருந்தும் & பின்புறமிருந்தும் வழிநடத்தும் காடன், சுடலை மாடன், அங்காளம்மன், பாவாடைராயன், பேச்சியம்மா  போன்ற  சாமிகளும், அய்யனார்,கறுப்பர், முனியையா போன்ற தெய்வங்களும் இருந்தனர்.” என முன்பே குறிப்பிட்டு இருக்கிறேன்.

 இவர்  தேரின் பின்புறம் செதுக்கப்பட்டிருக்கிறார். சிங்கத்தின் மேல் வீற்றிருக்கிறார். சுற்றிலும் நான்கு சிங்கமுக யாளிகள், இரண்டு யானை முக யாளிகள்  மற்றும் அண்டபேரண்டப் ப்ட்சிகள் இரண்டு  வேறு. சுடலை மாடனா தெரியவில்லை.
இந்தக்கட்டையின் பக்கவாட்டில் இரு புறங்களிலும் போர் வீரர்கள் இருக்கிறார்கள் இவரைப் போல. வில் அம்புடன் தயாராய் இருக்கிறார் எதிரியை வீழ்த்த.

இரட்டைப் புரவிகளில் ஆரோகணித்திருக்கும் குதிரை வீரன். கையில் அரிவாள். அவரைத் தாங்கியபடி கீழே யானையும் மூன்று  சித்திரக் குள்ளர்களும் .
சாட்டை தாங்கிய வீரன்.
வில்லேந்தும் வீராங்கனையும் வீரனும் எதிர் எதிர் பக்கங்களில்.

சுடலை மாடன், காடன், கருப்பர் ஆகியோர் கருக்கருவாளுடன்.
யானை போன்ற யாளி. 
அகண்ட முகமுடைய யாளி . முனியையா, மற்றும் ஐயனார்.
ஓடும் யானைகள் மேல் குதிரைகள் அவற்றில் ஆரோகணிக்கும் வீரன். கீழே குள்ளர் மூவர். விதம் விதமான யாளிகள். அவை ஏதோ பல்லாயிரம் பற்கள் காட்டிச் சிரிப்பது போல் இருக்கிறது.

முன்புற காவல் தெய்வம்.
முன் வலது பக்கம் கீழே இரட்டை பட்டாக்கத்தி/கருக்கருவாள் வீரர்கள்.
நடுவில் தேர்க்காவலன்.
இன்னொரு புறமும் இரு பட்டாக்கத்தி/ கருக்கருவாள் வீரர்கள்.
முன்புறம் காவலிருந்து வழி நடத்தும் இவரின் அருகில் ஒரு குட்டி யாளி இருக்கிறது. கையில் தண்டம். இடது கையில் வைத்து வாயில் வைத்திருப்பதுபோலிருப்பது சங்காவெனத் தெரியவில்லை.
பெயர் தெரியாப் பட்சியின் மேல் ( அண்டபேரண்டப் பட்சியா )  வீரன்.
அவன் எதிர்ப்புறம் அன்னத்தின் மேல்எவ்வி நிற்கும் வீராங்கனை.
இரண்ய மல்யுத்தம், இரண்ய வதம், சரபேஸ்வரர், ப்ரத்யங்கிரா, நரசிம்மர், ஆஞ்சநேயர்,  பத்ரகாளி, காட்டுக் கருப்பர், ஐயனார், பாண்டிமுனி, பாவாடை ராயன் , பேச்சியம்மா , அங்காள பரமேஸ்வரி, சுடலை மாடன், கோட்டை மாடசாமி, காடன். தாண்டவ சிவன் போன்ற உக்கிர தெய்வங்களின் அரசாட்சி தேரின் கீழ்ப்பகுதியில் பூரணமாக இருக்கிறது. மேல்பகுதியிலும் தசாவதாரம், இரண்யவதம் திருவிளையாடல்கள், அஷ்டலெக்ஷ்மி, அம்மன்கள், விநாயகர், முருகன், சிவன் இடம் பெற்றிருக்கிறார்கள்.

ஆக மொத்தத்தில் வீரமும் தைரியமும் துணிச்சலும் விளைவிக்கும் சிற்பங்கள். தேருக்கு நிகழக்கூடிய எந்த ஆபத்தையும் எதிர்நோக்கித் தாக்கத் தயாராய் நிற்கும்  படைவீரர்கள். ஆக்ரோஷக் காவல் தெய்வங்கள் கொஞ்சம் மெய்சிலிர்க்கவைக்கும்/ மயிர்க்கூச்செரியவைக்கும் அழகு.

1 கருத்து:

  1. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University30 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 4:25
    ரசனையுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். மெய் மறக்க வைத்தன இச்சிற்பங்கள்.

    பதிலளிநீக்கு

    ராமலக்ஷ்மி1 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 4:26
    படங்களும் பகிர்வும் அருமை, தேனம்மை.

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan24 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 11:13
    நன்றி ஜம்பு சார்

    நன்றி ராமலெக்ஷ்மி. புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.