எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 2 செப்டம்பர், 2020

வல்லக்கோட்டை முருகன் கோயில்

 வல்லக்கோட்டை முருகன் கோயில்

சென்னையிலிருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் அமைந்துள்ளது வல்லக்கோட்டை முருகன் கோயில் . திருத்தணி செல்லும்  முன் இங்கே சென்று வணங்கிவிட்டுத்தான் சென்றோம் . அழகன் முருகன் ஆறடி உயரத்துக்கும் மேலே ( ஏழடி உயரம் என்கிறார்கள். ). வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியனாக அழகுற நின்று அருள்பாலிக்கிறான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில் என்கிறார்கள்.
அங்கே வேல் மட்டுமல்ல மயில்களும் கண்டோம். ஒன்றல்ல பல.
வல்லன் என்ற அசுரனின் கொடுமையால் மக்கள் துன்புற அவனை ஆட்கொண்ட முருகப் பெருமான் அவனது பெயராலே இத்தலம் விளங்க அருள்பாலித்தாராம். அதனால் இவ்வூருக்குப் பெயர் வல்லக்கோட்டை.
பகீரதன் என்னும் மன்னன் கட்டுவித்த கோயிலாம் இது. இந்திரன் தன் சாபம் நீங்க இங்கே பாதிரி மரத்தடியில் எழுந்தருளி இருந்த முருகப்பெருமானை நோக்கித் தவமிருந்து தன்னுடைய வஜ்ராயுதத்தால் இங்கே புஷ்கரணி உண்டாக்கி மூழ்கி எழுந்து சாபம் நீங்கப் பெற்றானாம். அதனால் இந்த தீர்த்தத்துக்குப் பெயர் வஜ்ர தீர்த்தம்.
மிக அழகிய பிரகாரங்களுடன் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது கோயில். பரணி, கிருத்திகை, விசாகம் ஆகியன விசேஷம்.
அருணகிரிநாதர் இந்தக் கோ(ட்)டை நகரப் பெருமானைப் பற்றி எட்டு திருப்புகழ் பாடல்கள்  பாடி இருக்கிறாராம்.  முருகனே அவரது கனவில் வந்து பாடச் சொன்னதாக ஐதீகம்.
இக்கோயில் முருகனை வழிபட்டதால் பகீரதன் என்னும் அரசன் இழந்தை எல்லாம் பெற்றானாம். அதேபோல் வணங்கும் எல்லாருக்கும் இழந்ததை எல்லாம் மீட்டுக் கொடுப்பான் முருகன் என்று சொல்கிறார்கள்.
தானதன தான தந்த தானதன தான தந்த
     தானதன தான தந்த ...... தனதான

......... பாடல் .........

ஆதிமுத னாளி லென்றன் தாயுடலி லேயி ருந்து
     ஆகமல மாகி நின்று ...... புவிமீதில்

ஆசையுட னேபி றந்து நேசமுட னேவ ளர்ந்து
     ஆளழக னாகி நின்று ...... விளையாடிப்

பூதலமெ லாம லைந்து மாதருட னேக லந்து
     பூமிதனில் வேணு மென்று ...... பொருள்தேடிப்

போகமதி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லுன்றன்
     பூவடிகள் சேர அன்பு ...... தருவாயே

சீதைகொடு போகு மந்த ராவணனை மாள வென்ற
     தீரனரி நார ணன்றன் ...... மருகோனே.

தேவர்முநி வோர்கள் கொண்டல் மாலரிபிர் மாவு நின்று
     தேடஅரி தான வன்றன் ...... முருகோனே

கோதைமலை வாழு கின்ற நாதரிட பாக நின்ற
     கோமளிய நாதி தந்த ...... குமரேசா

கூடிவரு சூரர் தங்கள் மார்பையிரு கூறு கண்ட
     கோடைநகர் வாழ வந்த ...... பெருமாளே.

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 3"

"முத்தைத்தரு"

இராகம்: கௌளை
தாளம்: திஸ்ர த்ருபுடை/மிஸ்ரசாபு
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன ..... தனதான

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ..... எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ..... அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ..... இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ..... ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ..... கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ..... எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ..... முதுகூகை
கொட்புற்றெழ நட்புற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட வொத்துப் பொரவல ..... பெருமாளே.

டிஸ்கி :- இதையும் பாருங்க. 

அறுபடை முருகன் கோயில்கள். - திருப்பரங்குன்றம்.

அறுபடை முருகன் கோயில்கள். :- பழமுதிர்ச்சோலை

(தொ. பரமசிவனின் அழகர் கோயில் - ஒரு பார்வை.)

அறுபடை முருகன் கோயில்கள் :- திருச்செந்தூர்.

அறுபடை முருகன் கோயில்கள் :- பழனி/திருஆவினன்குடி

அறுபடை முருகன் கோயில்கள் :- சுவாமிமலை/திருவேரகம் 

அறுபடை முருகன் கோயில்கள் :- திருத்தணி.  

1 கருத்து:

  1. G.M Balasubramaniam26 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 10:24
    ஒரே கோவில்கள் விஜயம்போலிருக்கிறதே

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan30 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 11:41
    ஆம் பாலா சார். முன்னே போனது.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.