வியாழன், 6 பிப்ரவரி, 2020

வேதவல்லியைத் தேடி.

வேதவல்லியைத் தேடி.

கும்பகோணத்தில்ருந்தபோது தாராசுரம் ஐராவதேசுவரர் கோயிலுக்குப் போனோம். வண்டியை நிறுத்திவிட்டுப் போனால் முதன் முதலில் நுழைந்தது வேதவல்லி அம்மன் சன்னிதி. யுனெஸ்கோவின் அரும்பெரும் சரித்திரச் சின்னத்தில் இடம் பெற்றதால் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழும், அறநிலையத்துறையின் பராமரிப்பின் கீழும் இயங்கி வருகிறது இக்கோயில் நிர்வாகம்.

தனிக்கோயில் கொண்டவள். ரொம்பப் பிடித்து விட்டது பார்த்ததுமே. சிம்மவாஹினியைச் சுற்றிலும் சிம்ம யாளிகள். வேதவல்லியை மட்டுமல்ல அங்கே குடிகொண்டிருந்த சிற்பங்களனைத்தையுமே பிடித்துவிட்டது. எங்கே பார்ப்பது எதையாவது தவறவிட்டுவிடுவோமோ வென்ற எண்ணம் வேறு. மழை வேறு தூறி பயமுறுத்திக்கொண்டே இருந்ததால் கிடைத்ததை சுட்டுக் கொண்டேன். ( ஃபோட்டோ )

எந்தக் கோயிலிலும் இல்லாத புதுமையாக வேதவல்லி அம்மனுக்கு என்று தனிக்கோயில் இங்கே ஈஸ்வரன் கோயிலுக்குப் பக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது .

மிக அழகான சிற்பங்களுடன் வடிவமைக்கப் பட்டிருக்கும்  இவ்விரு கோயில்களும் ( ஐராவதேசுவரர் கோயில் )  ஆராய்ச்சிமாணவர்களுக்கு ஒரு பொக்கிஷம். எங்கும் சிற்பம் எதிலும் சிற்பம்.

அம்மன் கோயில் ப்ரகாரம் பூரா அம்மன் சிலைகள்தான். சிங்கமுகம் கொண்ட யாழிகள் செதுக்கப்பட்டுள்ளன. 

வேதவல்லி அம்மன்கோயில் கருவறை கோபுரம் நாற்புறமும் செதுக்கப்பட்ட தனிப்பகுதியாகத்  தெரிவது தனிச்சிறப்பு.

கோஷ்ட தெய்வத்துக்கும் காவல் தெய்வங்கள் :) 


கோமுகி எல்லாம் இங்கே சிங்க முகியா அல்லது பெண்முகமா தெரியவில்லை.

மேலும் கருவறைப் படிக்கட்டுகளில் யானை, சிங்கம் கொண்ட  ( யாழிபோன்ற ) ஒரு உருவத்தின் மேல்  போருக்குச் செல்வது போன்ற வீராங்கனை சிலை சுற்றிலும் ஆயுதங்களோடு வீரர்கள், சித்திரக் குள்ளர்கள் போன்ற வடிவமைப்பு பிரமிக்க வைக்கிறது.
நாழிக்கிணறு இருந்தது கோயில் ப்ரகாரத்தில். எம்மாம் பெரிய தும்பிக்கை படிகளில் காவலிருக்கும் யானைக்கு. ஆனால் கற்களால் மூடப்பட்டிருக்கு இந்த வாயில் ஏனென்று தெரியவில்லை.
காக்கும் சக்தி இங்கே இறைவனுக்கு வலப்புறமாக இருக்கிறாளாம். நம்மையும் கருணைக் கண் கொண்டு காக்கும்படி வேண்டி வந்தோம். :)

1 கருத்து:

 1. திண்டுக்கல் தனபாலன்12 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 7:27
  படங்கள் அனைத்தும் அருமை...

  பதிலளிநீக்கு

  Nagendra Bharathi13 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 3:23
  அருமை

  பதிலளிநீக்கு

  ”தளிர் சுரேஷ்”13 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 7:47
  சிறப்பான படங்கள்! அருமையான தகவல்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு

  Thulasidharan V Thillaiakathu13 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 9:57
  என்ன அழகான படங்கள்..என்ன ஒரு கலை நுட்பம் ...அருமையாங்க இருக்கின்றது...

  பதிலளிநீக்கு

  வெங்கட் நாகராஜ்14 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 9:05
  அருமையான சிற்பங்கள். உங்கள் பதிவு மூலம் பார்த்து ரசித்தேன். நன்றி.

  பதிலளிநீக்கு

  Thenammai Lakshmanan16 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 8:50
  நன்றி டிடி சகோ

  நன்றி நாகேந்திர பாரதி

  நன்றி சுரேஷ் சகோ

  நன்றி துளசி சகோ & கீத்ஸ்

  நன்றி வெங்கட் சகோ.

  பதிலளிநீக்கு

  Thenammai Lakshmanan16 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 8:50
  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

ஸ்ரீ ராம நவமி, சித்ரா பௌர்ணமிக் கோலங்கள்.

 ஸ்ரீ ராம நவமி,  சித்ரா பௌர்ணமிக் கோலங்கள்.