எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

காரைக்குடி சிவன் கோயில் கும்பாபிஷேகம்.

காரைக்குடி சிவன் கோயில் கும்பாபிஷேகம்.

காரைக்குடியில் இருக்கும் நகரச் சிவன் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி நிகழ இருக்கின்றது. இதைப்பற்றி என் ராமு மாமா முகநூலிலும் தனி மெயிலிலும் அறியத்தந்தவற்றை இங்கே பகிர்கிறேன்.

/////காரைக்குடிச் சிவன் கோவில் கும்பாபிஷேகம் – 27-08-2015 ,மன்மத வருடம் ஆவணி மாதம் ய ம் தேதி அன்று
குடமுழுக்கு ஆண்டு ஆங்கில ஆண்டு
1 ஆங்கிரச 21-04-1872
2 விஜய 1953
3 ஆனந்த 1974
4 விபவ 1989
5 சித்திரபானு 26-08-2002
6 மன்மத 27-08-2015

காரைக்குடி ஊராட்சி மன்றம் ஏற்படுத்தப்பட்டது 1855
நகராட்சியாக மாற்றப்பட்ட்து 5-09-1928
1888 குடமுழுக்கின்போது ராம.ஆத.ராம. ராமனாதன் செட்டியார் அவர்கள் கிழக்கு ராஜகோபுரம் எடுத்தார்கள்.

1953 குடமுழுக்கின்போது தமிழ்க்கடல் இராய.சொ. காரியக்காரராக இருந்தபோது அன்பர்களைக் கொண்டு திருச்சுற்று முழுவதும் சிமிண்ட் நடை பாதை நிறுவப்பட்டது. வெள்ளி அங்கிகள் செய்யப்பட்டன. ஆறு.பழ.சி.பழ. குடும்பத்தாரால் சரபேஸ்வரர் எழுந்தருளச் செய்யப்பட்டது. கரு.கும.மீ. மீனாட்சிசுந்தரம் செட்டியார் தென்புறக் கோபுரத்தைக் கட்டினார்கள்.


1974ம் ஆண்டு அபிசீனீயா நாச்சியப்ப செட்டியார் காலத்தில் நன்னீராட்டு விழாவின்போது மீனாட்சி அம்மன் சக்தி உக்கிரமாக விளங்கியதால் காஞ்சி ஸ்ரீ சங்கராச்சார்யார் அவர்கள் பைரவர் சன்னதிக்குப் பக்கத்தில் கிழக்கு நோக்கிய சன்னதியில் சக்தி பீடம் அமைத்தார்கள். அப்பீடத்தை திரிபுர சுந்தரி என அழைக்கிறார்கள். அம்மனுக்கு எதிர்த்தார்ப் போல் விநாயகரைப் பெருச்சாளி வாகனத்துடன் எந்திரப் பிரதிட்டையுடன் எழுந்தருளச் செய்தார்கள்.


1989ல் ராம.வீர.ராமசாமி செட்டியார் அவர்களால் திருக்கலியாண மண்டபம் கட்டப் பெற்றது.

ஆடிப்பூரம், விஜயதசமி, அஷ்டமி, திருக்கார்த்திகை, சிவராத்திரி, பிரதோஷம் ஆகியவை விஷேசமாகக் கொண்டாடப் படுகின்றன./////

அனைவரும் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சிவனருள் பெற்றுப் பயன் பெறுங்க. :)

வாங்க வாங்க காரைக்குடிக்குப் போகலாம். கம்பன் எக்ஸ்ப்ரஸ்ஸில் தனி போகியே ஏற்பாடு செய்திருக்காங்களாம்., சென்னையிலிருந்து 26 ஆம் தேதி காரைக்குடிக்கும், 27 ஆம் தேதி - காரைக்குடியில் இருந்து சென்னைக்கும்.

நமப் பார்வதி பதயே ஹரஹர மஹாதேவா.
தென்னாடுடைய சிவனே போற்றி.
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்18 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 9:32
    சிறப்பாக அமைய வாழ்த்துகள் சகோ...

    பதிலளிநீக்கு

    'பரிவை' சே.குமார்18 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 11:22
    பகிர்வுக்கு நன்றி அக்கா...
    விழா சிறப்பாக நடைபெறட்டும்....

    பதிலளிநீக்கு

    காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்20 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 2:03
    இறையருள் நம் அனைவருக்கும் ஆகுக

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan21 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 7:44
    நன்றி டிடி சகோ

    நன்றி குமார் சகோ

    நன்றி காளிராஜன் கிருஷ்ணன் சகோ

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan21 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 7:44
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்21 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 7:45
    விழா சிறப்புற வாழ்த்துகள்.. அவன் அருள் அனைவருக்கும் கிடைத்திட எனது பிரார்த்தனைகளும்....

    பதிலளிநீக்கு

நவக்ரஹக் கோலங்கள்.

 நவக்ரஹக் கோலங்கள்.