எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 3 பிப்ரவரி, 2020

உதயகால ஸ்லோகமும் சூரிய நமஸ்காரமும்.

உதயகால ஸ்லோகமும் சூரிய நமஸ்காரமும்.


உதயகால ஸ்லோகமும் சூரிய நமஸ்காரமும்.

உதயகால ஸ்லோகம்.

1.ஆதிகணபதி அறுமுகரை அம்பிகை மணவாளரைக் கால பைரவர் நந்திகேஸ்வர் வீரபத்ர தக்ஷிணாமூர்த்தியைத் தியானித்தெழுந்தேன்.

2.சேஷகிரிவளர் வெங்கடேசரைத் திருமகள் அலர்மேலுவை தேவி சரஸ்வதி சதுர்முகப் ப்ரம்மா ஸ்ரீ பூமிதேவி அம்மனை


3. ப்ராணதார மாகவிளங்கிடும் பரிபூரண காவேரியம்மனை ஆதி கங்கையை அறுபத்தாறுகோடி அகிலபுவனத்தின் தீர்த்தத்தை

4. மத்ஸ்யகூர்ம வராஹ நரசிங்க வாமனாவதார மூர்த்தியை வீரபரசுராம பலபத்ர ஸ்ரீ ராமகிருஷ்ண பௌத்தரை

5. ஸ்ரீ ஹரி திருமார்பில் விளங்கிடும் ஸ்ரீ துளசிமஹா தேவியை ஜனகர் திருமகள் ப்ராணநாதரை ஸ்ரீபரதலக்ஷ்மண சத்ருக்னரை

6. ஆதிசக்தியை லக்ஷ்மி சரஸ்வதி சாவித்ரி காயத்ரி அம்மனை அகலி த்ரௌபதை சீதை தாரை மண்டோதரி ஐந்துபேர்களை


7. தேவகி குந்தி சுபத்ரை ருக்மணி ஸப்தரிஷிகள் தேவியை தசரதர் தேவி கௌசல்யையுடன் சிறந்த உத்தமிமார்களை

8. அபிராமியுடன் ஸூரகன்னியரை ஐராவதம் உச்சைஸ்ரவம் அருமையான காமதேனுவை அடர்ந்த கற்பகச் சோலையை

9. அஷ்டதிக்குபாலகர் அவர்கள் தேவியை அஷ்டவஸீ அஷ்டகஜங்களை சித்தர் கின்னர் கிம்புருடரை சிறந்த வித்யாதரர்களை

10. வசிஷ்டர் வாமதேவர் காசியபர் அகத்தியர் அத்திரி ஆங்கீரஸ புலஸ்தியர் கிருது புலஸ்கர் முதலான தவசிலாக்கிய மகான்களை

11. வேதவியாசரை மார்க்கண்டேயரை வீணாகான நாரதரை சூதர் சௌனகர் துர்வாசமுனி ஜடபரதர் ஜடத்காருவை

12. மதங்கமாமுனி ரிஷ்யசிங்கரை மஹரிஷி சரபங்கரை வைஸம்பாயனர் சுமந்து ஜைமனி பைலவர் ஜாபாலியை

13. கபிலரிஷியுடன் தத்தாத்ரேயரை கட்கி பரத்வாஜரை ஹயக்ரீவர் ப்ரகஸ்பதிகுரு ஆதிசங்கராச்சாரியை

14. பத்மபாதரை அஷ்டகோணரைப் புகழ்பெற்ற இராமானுஜரை சீதளாச்சாரி கோவிந்தரை சிறந்த மத்வாச்சாரியை

15. அகில புவனத்தைக் காத்துரட்சிக்கும் அஷ்டலெக்ஷ்மி நாதரை அநுமார் பெரிய திருவடியுடன்  ஆழ்வார்கள் பன்னிருவரைப்

16. பரம பக்தனாம் ருக்மாங்கதன் துருவன் பக்தன் பிரஹலாதனைப் பக்தி செய்திட்ட குசேலர் அம்பரீஷன் பீஷ்மர்விதுரர் பாஞ்சாலியை

17. ஆதிமூலத்தைக் கூவி அழைத்திட்ட அறிவுமிகுந்த கஜேந்திரனை அரனைத் துதி செய்த பாணராவணப் பிருங்கி சண்டிகேச பக்தரை

18. அப்பர் சுந்தரர் ஞானசம்பந்தர் அறுபத்து மூவர் தங்களை ஜய தேவருடன் துளசிதாசரை ஹரிசிறந்த பக்திமான்களை

19. பக்தர் குழாங்களை பகவான் மூவரைப் பாரிலுள்ள புண்ணிய நதிகளை ஏற்றித் தொழுதேன் ஹ்ருதயசுத்தியுடன் போற்றிப் புகழ்பாடினேன்.

20. உதயகாலத்தில் உள்ளம் தெளிந்து ஹ்ருதயத்தில் பரதேவியின் பாதகமலத்தைத் தியானம் பண்ணியே பவங்கடந் தேறினேன். தியானித்தெழுந்தேன்.

சூரிய நமஸ்காரம்.

இது என் பெரியம்மா கொடுத்த ஸ்லோகப் பேப்பர். அதை என் வலைத்தளத்தில் அப்படியே ஆவணப்படுத்தியுள்ளேன்.

முன்பு எல்லாம் அதிகாலை 4 மணிக்கு எழுந்தவுடன் காலைக்கடன் முடித்து சூரியன் உதயமாகும் நாழிகையில் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி இருக்கிறார்கள்.

புராண இதிகாச விஷயங்கள் அனைத்துமே வருவதாலும் இதில் படைத்தவர் பிரபஞ்சம் முழுமைக்குமான ஒரு தியானமும் நன்றியறிவித்தலும்  இருப்பதாலும் பகிர விரும்பினேன்.

எத்தனை கடவுள், முனிவர், தேவர், கின்னரர், கிம்புருடர், கந்தவர், வித்யாதரர், மகான்களை, ஆழ்வார்களை நாயன்மார்களை நதிகளை, பகவான் மூவரைப் பாடினாலும் முடிவில் உள்ளந்தெளிந்து பரதேவியின் பாதகமலம் பற்றி பவங்கடத் தேறித் தியானித்தெழுவதால் சிறப்பானதாகிறது மிகப்பிடித்தமானதும் ஆகிறது.

1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்3 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 4:39
    நன்றி சகோதரி...

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan7 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 1:53
    நன்றி டிடி சகோ

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan7 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 1:54
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.