எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 10 பிப்ரவரி, 2020

நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY.

நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY.

 முக்தியடைய நிஷ்டை இன்றியமையாதது. அழிக்கும் சிவனே நிஷ்டையில் ஆழ்ந்திருக்கும் காட்சி நிலையாமையையும் நிலையானவனைப் பற்ற வேண்டிய நிலைமையையும் உணர்த்தியது. சும்மா இருப்பதே சுகம் என்று  சொல்லி இருக்காங்க. ஆனா ஒரு அரைமணி நேரம் இப்படி சும்மா அமர்ந்து பாருங்க ( சிந்தனை எதுவுமில்லாம :).

சைவ நாற்படிகள் சரியை கிரியை யோகம், ஞானம் இவை சிவ புண்ணியங்களாகும். அட்டாங்க யோகங்களில் இயமம், நியமம், ஆசனம், ப்ரணாயாமம், பிரத்யாகாரம், தாரணை ,தியானம், சமாதி. என்பனவற்றுள் இது ஏழாம் எட்டாம் யோகமாகும். இவை முக்தி பெற வழிகளாம்.

 உலக புகைப்பட தினத்துக்காக பல்வேறு இடங்களில் ( நாகேஷ்வர், பெங்களூரு, கர்நாடகா ( பிதாருக்கும் குல்பர்க்காவுக்கும் மத்தியில் இருக்கும் சிவன் ) , குஜராத் சோம்நாத்தில் ஆர்ட் கேலரி அருகில் இருக்கும் லிங்கம்.  &  நிஷ்டையில் இருக்கும் சிவன் படங்களைப் பகிர்கிறேன்.



உடுக்கையும் சூலமும் நாகமும்  சுமந்து புலித்தோலாசனத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறார் நாகேஷ்வர்.

பெங்களூரு ராஜராஜேஸ்வரி கோயில் போய்விட்டுத் திரும்பிய போது ஒரு பிள்ளையார் கோவில் ஆர்ச் முகப்பைப் பார்த்துப் படியேறினால் ஒரு குட்டி மலை. அங்கே இந்தச் சிவன் நிஷ்டையிலிருந்தார்.

இவர் கர்நாடகாவில் குல்பர்காவிலிருந்து பிதாருக்குச் செல்லும் வழியில் நிஷ்டையில் இருந்தார்.

குஜராத் சென்றிருந்தபோது சோம்நாத் ஆர்ட் காலரியின் அருகே இருந்த சிவலிங்கம். காரிலிருந்தே ஒரு க்ளிக்

அநேக படங்கள் காரிலிருந்தும் படியேறும்போதும் நடந்துகொண்டும் எடுத்தது. ( கூட வர்றவங்க டென்ஷன் ஆயிடக்கூடாது பாருங்க அதான் . :)

ஹரஹரஹரஹர மஹாதேவ். ஓம் நமச்சிவாய. சிவோஹம்.

1 கருத்து:

  1. ராமலக்ஷ்மி19 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 1:04
    அருமையான கோணங்களில் அழகான படங்கள். தங்களுக்கும் உலக ஒளிப்பட தின வாழ்த்துகள், தேனம்மை.

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu19 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 7:47
    அழகான புகைப்படங்கள் அதுவும் எங்கள் மனமுகந்த இறைவனின் படங்கள்! அருமை! பகிர்வுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு

    ”தளிர் சுரேஷ்”20 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 7:27
    அழகான படங்கள்! சிறப்பான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan21 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 7:46
    நன்றி ராமலெக்ஷ்மி. :)

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்

    நன்றி சுரேஷ் சகோ :)

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan21 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 7:46
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்23 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 7:25
    அழகான புகைப்படங்கள். இப்படங்களில் இருப்பதில் இரண்டு இடங்களில் நானும் படம் எடுத்திருக்கிறேன்! :)

    பதிலளிநீக்கு

நவராத்திரிக் கோலங்கள்

  நவராத்திரிக் கோலங்கள்