இராஜராஜேச்சுவரத்தில் ஒரு மாலை.
கூண்டுக்குள் நாதக் கருங்கல் படிகள் |
உள் ப்ரகாரம். |
ரிஷபம் காக்கும் மதில்கள் |
இங்கே ஐராவதம் என்னும் யானை துர்வாச முனிவர் இட்ட சாபம் நீங்கப்பெற்றதால் அது வணங்கிய ஈஸ்வரன் ஐராவதேஸ்வரர் என்று அழைக்கப்படுகின்றார். இக்கோயில் இரண்டாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. சிற்பக்கலை, கட்டிடக் கலை எல்லாமே வெகு நேர்த்தி.
தேர்க்கால் மண்டபம் |
இந்தியாவின் தொல்பொருள் துறையினாலும் , தமிழ்நாடு அறநிலையத் துறையினாலும் பராமரிக்கப்பட்டு வருகின்றன இக்கோயில்கள். இரு கோயில்கள் என்றா சொன்னேன் ஆம் பக்கத்திலேயே வேதவல்லி அம்மனுக்குத் தனிக்கோயில் கட்டப்பட்டிருக்கு.இந்தக் கருவறை மண்டபங்கள் இணைக்கப்பட்டிருக்கும் இடத்தில் சிம்மங்கள் தாங்கிய தூண்கள் கொண்ட தேர் போல இருக்கு. அதைக் குதிரைகளும் யானைகளும் இழுத்துச் செல்கின்றன. பார்க்கவே தத்ரூபமான காட்சி. !
விரல் அளவு சிற்பங்களிலிருந்து 4 அடிச் சிற்பங்கள் வரை இருக்கின்றன. பார்க்க ஒரு முழு நாளும் போதாது , ஒரு மழை மாலையில் போய் கிடைத்ததை சுட்டுக்கொண்டு வந்தோம். ( போட்டோ எடுத்தத சொல்றேங்க)
மிகப் பரந்த சுற்றுப் ப்ரகாரம். |
தீபம் கூட கற்பூரம் காண்பிப்பதில்லை. சரித்திரச் சின்னங்களில் புகை படிந்துவிடுமென்று. நெய் தீபம் மட்டுமே. அதுவும் சிறியதாய். ( தஞ்சைக் கோயில் கூட அப்படித்தான் )
அண்ணாமலையார். |
இயற்கைப் பலகணிகள். |
அந்தக் காலக் கோயில் அமைப்புகளில் இது கொஞ்சம் வித்யாசமான கோயில்தான், விமானம் 5 நிலைகள் மட்டுமே கொண்டது. முன்புறம் இருக்கும் நந்தியினருகே நாதப்படிகள் என்று கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. கூண்டுக்குள் இருக்கிறது. :)
கருவறையின் முன் மண்டபங்கள் கூட குதிரை யானை இழுக்கும் தேர் போலவே இருக்கின்றன. யாழிகள், சிங்கங்கள், குள்ளர்கள், தேவதைகள், நாட்டியக்காரிகள், இவர்களோடு 63 நாயன்மார்கள், சிவனடியார்களின் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
நடந்து நடந்து கால்களுக்கெல்லாம் நல்ல அக்யுபஞ்சர் ட்ரீட்மெண்ட் எடுத்தது போல இருந்தது. மொத்தத்தில் புத்துணர்வு ஊட்டிப் புதுப்பித்த கோயில். போய்ப்பார்த்தால் நீங்களும் அந்த அற்புதத்தை உணர்வீர்கள். :)
திண்டுக்கல் தனபாலன்10 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 6:39
பதிலளிநீக்குசென்று விடுவோம்...
அருமையான படங்கள்...
பதிலளிநீக்கு
”தளிர் சுரேஷ்”10 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 7:52
அருமையான சிற்ப கருவூலத்தை படங்கள் வாயிலாக தரிசித்த மகிழ்ச்சி! நன்றி!
பதிலளிநீக்கு
Thulasidharan V Thillaiakathu11 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 4:01
படங்கள் மிக அழகாக இருக்கின்றன. கண்ணையும், மனதையும் கவருகின்றன. அருமையான சிற்பக்கலை நுணுக்கங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
பதிலளிநீக்கு
வெங்கட் நாகராஜ்11 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 9:39
நேரில் சென்று பார்க்கத்தூண்டும் பதிவு. சில படங்கள் திறக்க நேரமாகிறது. மீண்டும் முயற்சிக்க வேண்டும்.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan16 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 8:48
கட்டாயம் பார்த்து வாருங்கள் டிடி சகோ
நன்றி சுரேஷ் சகோ :)
நன்றி துளசி சகோ & கீத்ஸ்
நன்றி வெங்கட் சகோ பார்த்தீர்களா எல்லாப் படங்களையும்..?
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan16 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 8:48
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!