நவக்ரஹ கோயில் தரிசனம் :- புள்ளிருக்குவேளூரில் மங்களம் தரும் அங்காரகன்.
வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயிலில் மங்களம் தரும் அங்காரகன் குடிகொண்டிருக்கிறார். இங்கே மூலவர் வைத்தியநாதர் , தாயார் தையல்நாயகி, முத்துக்குமாரசுவாமி, அங்காரகன் ஆகியோரைத் தரிசித்தல் விசேஷம்.
சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வடிந்த வியர்வைத்துளியில் உதித்தவர் அங்காரகன். அந்தத் துளி கீழே விழாமல் பூமாதேவி தாங்கி வளர்த்ததால் இவர் பூமிகாரனாகவும் திகழ்கிறார். இன்னொரு கதையில் இந்த நெற்றிப் பொறியை அக்கினி கங்கையில் சேர்த்ததால் அங்காரகன் தோன்றினார் என்கிறார்கள். அக்கினி தேவனுக்கும் விகேசிக்கும் பிறந்தவர் அங்காரகன் என்றும் இவர் விநாயகரை வணங்கி தவமிருந்து அமரபதவி அடைந்தார் என்றும் கூறுகிறது இன்னொரு கதை. உஜ்ஜயினியில் தோன்றியவர் என்றும் கூறுகிறது ஒரு கதை.
 |
செந்நிறகிரகம் செவ்வாய் |
புள் இருக்கு வேள் ஊர் என்றால் முருகன், ருக்வேதம் ,கருடன் ( ஜடாயு, சம்பாதி) சூரியன் ஆகியோர் வணங்கி அருள் பெற்றதாக சொல்கிறார்கள்.