மந்த்ராலயத்தில் ஒரு மதியம்.
மனதுக்கு மிகவும் பிடித்த மகத்துவபூர்ணமான இடம் மந்த்ராலயம்.
17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கர்நாடகா ஆந்திரா பார்டரில் துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள மந்த்ராலயத்தின் பிருந்தாவனத்தில் ஜீவசமாதியாகி அருளாட்சி செய்பவர் ராகவேந்திர சுவாமி. அவர் பிறந்தபோது அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் திருவேங்கடநாதர். திருப்பதி பெருமாளின் பெயர்.!
ஹைதையில் இருந்தபோது ஒரு முறை ( இது இரண்டாம் முறை – முதல் முறை குழந்தைகள் சின்னவர்களாக இருக்கும்போது சென்றது ). சென்று வந்தோம்.
கர்நாடகாவில் ஏதோ நதிநீர் மின்சாரப் பிரச்சனை காரணமாக அன்று60 கிலோமீட்டர் ரெய்ச்சூரைச் சுற்றிக்கொண்டு சென்றோம். அதனால் மதியம் ஆகிவிட்டது.
மதிய உணவு உண்டுவிட்டுக் காத்திருந்தோம். முன்பு சென்றதை விட மந்த்ராலயம் மிகப் பெரிதாக ஆகி இருந்தது. நடைபாதைகள், கடைகள் என விரிந்திருந்தது.
மேலும் பக்தர்கள் வரிசையில் செல்ல தனித்தனிப் பாதைகளும் இருந்தன.
நடராஜர், சரஸ்வதி, விநாயகர் என்று பாதையெங்கும் இரு மருங்கிலும் தெய்வத்திரு உருவங்கள் அமைக்கப்பட்டு அருவி போல் நீரும் ஃபோகஸ் லைட்டுகளும் அமைக்கப்பட்டிருந்தன. மாலையில் இன்னொளி கூட்டலாம் இவை. நாம் சென்றது மதியம் என்பதால் செயற்கை அருவிகளும் அமைதி காத்தன.
வந்தாச்சு. ஆனால் கோயில் மூடி உள்ளதே. இனி மாலைதான் தரிசனம் செய்யலாம்.
மதங்க நர்த்தனம் மிக மிக அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. சிமெண்டுச் சிற்பங்கள் மிக அழகுற வண்ணம் தீட்டப்பட்டு இருந்தன.
யமுனையின் அலைகளும் பல தலை கொண்ட நாகத்தின் மீது குட்டிக்கிருஷ்ணன் தொத்தி நின்று சமாளிப்பதும் சுற்றிநிற்கும் மக்களின் பரிதவிப்பும் கொஞ்சம் அந்தக் காட்சி பயமாகத்தான் இருந்தது என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
மஞ்சளம்மா சன்னதி
நேரம் ஆகிவிட்டதால் உணவுக்கூடமும் மூடிவிட்டது. துங்கபத்ராவுக்குச் சென்று தீர்த்தத்தைத் (ப்ரோக்ஷித்துக் ) தெளித்துக் கொண்டு திரும்ப வந்து அமர்ந்தோம்.
சில பக்தர்கள் குளியலாடிக்கொண்டிருந்தார்கள்.
பிருந்தாவனம் திரும்பினோம்.
மஞ்சளம்மா சன்னதியில் தீப ஹாரத்தி காண்பித்து வணங்கிப் பின் ராகவேந்திரரைப் பிருந்தாவனத்தில் வணங்கினோம்.
நல்ல தரிசனம். மனம் நிறைந்திருந்தது.
எத்தனையோ மேடுபள்ளங்கள் வாழ்க்கையில் அத்தனையையும் அவர்
ராயர் பார்த்துக் கொள்வார் என்ற நிம்மதியில் திரும்பினோம்.
ராயர் பார்த்துக் கொள்வார் என்ற நிம்மதியில் திரும்பினோம்.
”பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச |
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே ||”
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே ||”
வெங்கட் நாகராஜ்27 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 8:31
பதிலளிநீக்குநல்லதோர் தரிசனம். படங்கள் அழகு.
பதிலளிநீக்கு
G.M Balasubramaniam27 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 3:29
எங்களை என் மைத்துனன் அழைத்துக் கொண்டு போயிருக்கிறான்
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan2 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 12:59
nandri Venkat sago
arumaiyana tharisanamaga irunthirukkum Bala sir.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!