எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 6 ஜூன், 2020

பிதார் பாப்நாஷ் ஷிவ் மந்திர் - பிதார் பாபநாசம் சிவன் கோயில்.

பிதார் பாப்நாஷ் ஷிவ் மந்திர் - பிதார் பாபநாசம் சிவன் கோயில்.

பாப்நாஷ் என்றால் பாவங்களை அழிப்பவர் என்று அர்த்தம். இங்கே வந்து பாப்நாஷ் அருவியில் நீராடி சிவனை வணங்குபவரின் பாவங்கள் தொலையும் என்பது நம்பிக்கை. சிவன் ராத்திரி இங்கே ரொம்ப ஸ்பெஷல். ஹைதையிலிருந்து குல்பர்கா சென்றுவிட்டு பிதார் வரும் ( பிதார் - உட்கிர் ) வழியில் இக்கோயிலுக்குச் சென்றோம். காரோட்டி இதன் சிறப்பைச் சொல்லி அழைத்துச் சென்றார். நீளச் செம்மண் பாதை போய்க்கொண்டே இருந்தது. அதன்பின் வந்தது கோயில்.
பாபநாஷில் அமைந்திருக்கும் பூர்வகோயில் சிதைந்துவிட்டதால் புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கோயில் இது. ( 2014 இல் ).

இப்போ கூகுள் பண்ணிப்பார்த்தீங்கன்னா செங்கலர்ல ஜொலிக்குது கோபுரம். 

விநாயகர், சரஸ்வதி, லெக்ஷ்மி. பக்கச் சுவரின் கோபுரத்தில்
 



மூன்று விதமான லிங்கங்கள் தரையில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கு. இந்த மூன்று லிங்கங்களையும் பக்தர்கள் தொட்டு வணங்கலாம். அபிஷேகிக்கலாம். மலர் தூவி ஆராதனை செய்யலாம்.



இலங்கையில் இருந்து அயோத்தி திரும்பும் வழியில் ராமர் ஸ்தாபித்த லிங்கம். கோயிலின் உட்புறம் மிகப்பெரும் லிங்கம் இருக்கு.



இந்தக் கோவிலை ஒட்டி பாப்நாஷ் என்கிற அழகான நீர்வீழ்ச்சி ஒன்று இருக்கு. அதுக்கு கீழே இறங்கி ஏறணும். அதன்பின் இக்கோயிலுக்கு வந்தோம். இதன் முன்னால் செவ்வக வடிவில் புஷ்கரணி இருக்கு. பொதுவா வடநாட்டுக்கோயில்கள் பக்கம் இதுபோல் ஊரணியைப் பார்ப்பது அரிது.



மிக அழகான எளிமையான இக்கோயிலை விட்டு வரவே மனசில்லை. ஆனா அடுத்து பிதார் குருத்வாராவும், பிதார் கோட்டையையும் பார்த்துட்டு ஹைதை திரும்பணுமே.




அதுனால பாப்நாஷ் ஈஸ்வர்கிட்ட என் பாபத்தை எல்லாம் நாசம் செய்து விமோசனம் கொடுன்னு வேண்டிக்கிட்டு சுத்தி சுத்தி ஃபோட்டோ எடுத்துட்டு வந்தேன். ஓம் நமஷிவாய !


எனக்குப் பிடித்த ஜெகதீஷ் ஹரியின் இந்த ஆரத்திப் பாடலை ரஃபாக மொழி பெயர்த்திருக்கிறேன். இது தேவநகரி பாஷை. ஆனால் பெரும்பாலான வார்த்தைகள் ஹிந்தி சமஸ்க்ருதம் எல்லாவற்றிலும் ஓரளவு ஒரேபோல அர்த்தம் தரும்.



Om Jai Jagadish Hare

Swami Jai Jagadish Hare

Bhakt Jano Ke Sankat

Daas Jano Ke Sankat

Kshan Men Door Kare

Om Jai Jagadish Hare





ஓம் ஜெய் ஜெகதீஷ் ஹரே ஸ்வாமி ஜெய் ஜெகதீஷ் ஹரே பக்த ஜனங்களின் சங்கடங்களை, உங்கள் தாசர்களின் சங்கடங்களை க்ஷணத்தில் துரத்தி அடிப்பவரே, ஓம் ஜெய் ஜெகதீஷ் ஹரே.



Jo Dhyaave Phal Paave

Dukh Bin Se Man Kaa

Swami Dukh Bin Se Man Kaa

Sukh Sampati Ghar Ave

Sukh Sampati Ghar Ave

Kasht Mite Tan Kaa

Om Jai Jagadish Hare



உங்களுக்காகத் தவம் செய்து துதிப்பவர்களின் துக்கங்களை மனதிலிருந்து அகற்றுபவரே சுவாமி , துக்கத்தை மனதிலிருந்து அகற்றி இல்லத்தில் சுக சம்பத்து கொடுப்பவரே, சுக சம்பத்து அளித்து உடல் கஷ்டங்களை நீக்குபவரே ஓம் ஜெய் ஜெகதீஷ் ஹரே



Maat Pita Tum Mere

Sharan Kahoon Kiski

Swami Sharan Kahoon Kiski

Tum Bin Aur Na Dooja

Tum Bin Aur Na Dooja

Aas Karoon Jiski

Om Jai Jagadish Hare



எனக்குத் தாயும் தந்தையுமானவனே, யார் பாதத்தை நான் சரணடைவேன் உம்மையன்றி, யார் பாதத்தில் சுவாமி நான் அடைக்கலமாவேன். உம்மையன்றி வேறு யார் உளர் உம்மையன்றி வேறு யார் உளர் நான் பற்றிக் கொள்ள.. ஓம் ஜெய் ஜெகதீஷ் ஹரே.



Tum Pooran Paramatma

Tum Antaryami

Swami Tum Antaryami

Paar Brahm Parameshwar

Paar Brahm Parameshwar

Tum Sabke Swami

Om Jai Jagadish Hare



நீ பூரணமான பரமாத்மா, நீ உள்ளுறைந்திருப்பவன், சுவாமி நீ எங்கும் வியாபித்திருப்பவன், பரப்ரஹ்மா, பரமேஸ்வரா, ஆதிஅந்தமானவனே, நீ எல்லாவற்றிற்கும் இறைவன், ஓம் ஜெய் ஜெகதீஷ் ஹரே.



Tum Karuna Ke Saagar

Tum Paalan Karta

Swami Tum Paalan Karta

Main Moorakh Khalakhami

Main Sevak Tum Swami

Kripa Karo Bharta

Om Jai Jagadish Hare



நீ கருணைக்கடல், நீ எங்களைக் காப்பவன், சுவாமி நீ எங்களைக் காப்பாற்றுபவன், நான் வீணான ஆசைகளில் அழிபவன், நான் உன் சேவகன், கிருபை செய் பர்த்தாவே ஓம் ஜெய் ஜெகதீஷ் ஹரே.



Tum Ho Ek Agochar

Sab Ke Praan Pati

Swami Sab Ke Praan Pati

Kis Vidhi Miloon Dayamaya

Kis Vidhi Miloon Dayamaya

Tum Ko Main Kumati

Om Jai Jagdish Hare



நீ எல்லாவற்றிலும் மறைந்திருப்பவன், எல்லா உயிர்க்கும் ப்ராணபதி, சுவாமி எல்லாவற்றிலும் உறைந்திருப்பவனே, எந்த வினைப்பயனாலோ உன்னை அடைந்தேன் கருணைமயமானவனே, எந்த வினைப்பயனாலோ உன்னைச் சந்தித்தேன் தயமயமானவனே, பெறற்கரும் பேறுபெற்றேன் வழிநடத்துவாய் ஓம் ஜெய் ஜெகதீஷ் ஹரே.   



Deen Bandhu Dukh Harta

Thaakur Tum Mere

Swaami Rakhshak Tum Mere

Apne Haath Uthao

Apni Sharan Lagao

Dwaar Padha Tere

Om Jai Jagadish Hare



துக்கத்தைப் போக்கும் தீனபந்து, என்னை ஆள்பவன் நீ, என்னைக் காக்கும் இரட்சகன் நீ, உன் கரங்கள் உயர்த்தி ஆசீர்வதிப்பாய், உன் பாதகமலங்களைக் கொடு, முழுமையாகச் சரணடைந்தேன்  உன்னை, ஓம் ஜெய் ஜெகதீஷ் ஹரே.  



Vishay Vikaar Mitaao

Paap Haro Deva

Swami Paap Haro Deva

Shradha Bhakti Badhao

Shradha Bhakti Badhao

Santan Ki Seva

Om Jai Jagadish Hare.



சித்தசுத்தி அளிப்பவரே, பாபத்தை அழிக்கும் தேவே, சுவாமி பாபத்தை அழிப்பவரே, ஷ்ரத்தை, பக்தி அதிகமாக்கி, ஷ்ரத்தை பக்தி அதிகமாக்கி, உன்சேவையில் மனம் மகிழ்ந்தேன் ஓம் ஜெய் ஜெகதீஷ் ஹரே.



Om Jai Jagadish Hare

Swami Jai Jagadish Hare

Bhakt Jano Ke Sankat

Daas Jano Ke Sankat

Kshan Men Door Kare

Om Jai Jagadish Hare



ஓம் ஜெய் ஜெகதீஷ் ஹரே ஸ்வாமி ஜெய் ஜெகதீஷ் ஹரே பக்த ஜனங்களின் சங்கடங்களை, உங்கள் தாசர்களின் சங்கடங்களை க்ஷணத்தில் துரத்தி அடிப்பவரே, ஓம் ஜெய் ஜெகதீஷ் ஹரே.

1 கருத்து:

  1. வெங்கட் நாகராஜ்3 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 9:58
    அழகான கோவில்.....

    பதிலளிநீக்கு

    மாதேவி4 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 10:06
    தரிசித்தோம் நன்றி.

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam4 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 4:06
    ஆஹா எப்படியெல்லாம்பதிவு எழுதுகிறீர்கள் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan11 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 12:08
    nandri Venkat sago

    nandri Madevi

    nandri Bala sir :)


    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

வைகுண்ட ஏகாதசிக் கோலங்கள்

வைகுண்ட ஏகாதசிக் கோலங்கள்  இந்தக் கோலங்கள்  5. 1. 2023  குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.