எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 20 ஜூன், 2020

நவக்ரஹ கோயில் தரிசனம் :- புள்ளிருக்குவேளூரில் மங்களம் தரும் அங்காரகன்.

நவக்ரஹ கோயில் தரிசனம் :- புள்ளிருக்குவேளூரில் மங்களம் தரும் அங்காரகன்.

வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயிலில் மங்களம் தரும் அங்காரகன் குடிகொண்டிருக்கிறார். இங்கே மூலவர் வைத்தியநாதர் , தாயார் தையல்நாயகி, முத்துக்குமாரசுவாமி, அங்காரகன் ஆகியோரைத் தரிசித்தல்  விசேஷம். 

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து  வடிந்த  வியர்வைத்துளியில் உதித்தவர் அங்காரகன். அந்தத் துளி கீழே விழாமல் பூமாதேவி தாங்கி வளர்த்ததால் இவர் பூமிகாரனாகவும் திகழ்கிறார். இன்னொரு கதையில் இந்த நெற்றிப் பொறியை அக்கினி கங்கையில் சேர்த்ததால் அங்காரகன் தோன்றினார் என்கிறார்கள். அக்கினி தேவனுக்கும் விகேசிக்கும் பிறந்தவர் அங்காரகன் என்றும் இவர் விநாயகரை வணங்கி  தவமிருந்து அமரபதவி அடைந்தார் என்றும் கூறுகிறது இன்னொரு கதை. உஜ்ஜயினியில் தோன்றியவர் என்றும் கூறுகிறது ஒரு கதை. 

செந்நிறகிரகம்  செவ்வாய்

புள் இருக்கு வேள் ஊர்   என்றால் முருகன், ருக்வேதம் ,கருடன் ( ஜடாயு, சம்பாதி) சூரியன் ஆகியோர்  வணங்கி அருள் பெற்றதாக சொல்கிறார்கள்.
வைத்தியநாத சுவாமி, மூலிகைத் தைல பாத்திரத்துடன் தையல்நாயகி அம்மன், செவ்வாய் ஆகியோர் இருப்பதால் இது நோய் நீக்கும் தலம் ஆகும்.

பழமை பூசிய சுவர்கள், மதில்கள் கோபுரங்கள் . கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் அப்போதுதான் புதுப்பொலிவுறும். 
கும்பகோணத்தில் இருந்து 44 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு கிருத்திகைக்கும் சிதம்பரத்தில் இருந்து ( 27 கிமீ ) பாதயாத்திரையாக தரிசிக்க பக்தர்கள் வருவார்கள். சீர்காழியில் இருந்து ஐந்து கிலோமீட்டர்.
முருகப்பெருமானும் முத்துக்குமரன் என்ற பெயரில் இக்கோயிலில் வீற்றிருக்கிறார். அவரும் செவ்வாய் சாராம்சம் பெற்றவரே. 
செவ்வாய் ., அங்காரகன் ,, மங்களன், பௌமன், குஜன் ஆகிய பெயர்களால் வழங்கப்படுகிறார்.  இவருக்கு மாலினி, சுசீலினி என இரு மனைவியர்.
ரணம், ருணம் ( உடல் நலிவு , கடன் ) தீர்ப்பவர் செவ்வாய்.  செவ்வாய் விரதமிருந்தால் மணப்பேறும் மகப்பேறும்   கிட்டும். 

பவழ/ளம் அணிதல் , செந்நிற ஆடை அணிதல், அளித்தல் ,.செவ்வாய் விரதம் இருப்பது,  செந்நிற மலர்கள், செண்பக மலர்கள், செவ்வரளி மாலை,  ஆகியன செவ்வாயை மகிழ்விக்கும்.

ரத்த அணுக்களுக்கு காரணமானவர். சகோதர உறவு உத்தியோகம்,
பூமி நிலம் மனை ஆகியவற்றுக்கும் காரகன் செவ்வாய்

நடராஜரின் வித்தியாச நடனம்

நடராஜரின் வித்தியாச நடனம்  !!!

அகத்தியர் நாடி ஜோதிடம் இங்கே ஸ்பெஷல்.

திருநாவுக்கரசர் & சுந்தரரால் தேவார பாடல் பெற்ற ஸ்தலம். சித்தாமிர்தக குளத்தில் வெல்லக் கட்டியைக் கரைத்துவிட்டால் நோய் தீரும் என்பது நம்பிக்கை. உப்பும் மிளகும் வாங்கி நேர்த்திக்கடனாகக்  கொட்டுகிறார்கள்.

இங்கே வழங்கப்படும் திருநீறும், திருச்சாந்து உருண்டையும் நோய் நொடி தீர்க்கும் மருந்தாகக் கருதப்படுகிறது.
செவ்வாய் தோஷத்தில் இருந்து விடுபட முருகன் துதிப்பாடல்கள் அனைத்துமே பாடலாம். திருமணத்தடை நீங்கும்

இடப் பற்றாக்குறையால் செவ்வாய் பரிகார பூஜையின்போது ஆண், பெண் குழந்தைகளை நெருக்கியடித்து அமர வைக்கின்றார்கள்.   முன்பே நேரம் ஒதுக்கி பத்து பதினைந்து பேராக அமரவைத்து பரிகாரம் செய்து தரிசனம் செய்வித்தால் நலமாகவும் திருப்தியாகவும் இருக்கும்.   

செவ்வாய் துதிகள்

அங்காரகன்

ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ: பௌம: ப்ரசோதயாத்

ஓம் அங்காரகாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி
தன்னோ: பௌம: ப்ரசோதயாத்

செவ்வாய் துதி

வசனநல் தைரியத்தோடு மன்னர் சபையில் வார்த்தை
புசபல பராக்ர மங்கள் போர்தனில் வெற்றியாண்மை
நிசமுட னவரவர்க்கு நீணிலந் தனில ளிக்குங்
குலனில மகனாஞ் செவ்வாய்க் குரைகழல்
போற்றி போற்றி.

அங்காரகன் (செவ்வாய்)

சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ
மங்கள செவ்வாய் மலரடி போற்றி!
அங்காரகனே அவதிகள் நீக்கு!

செவ்விய நிறத்து செவ்வாய் போற்றி
திவ்விய சுகமத்தைத் தருவாய் போற்றி
கவ்விய வினைகளைக் களைவாய் போற்றி
அவ்வியம் அகன்றிட அருள்வாய் போற்றி  



டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

1. நவக்ரஹ கோயில் தரிசனம் - ஆலங்குடி ஆலமர் ஈசன். 

2.  நவக்ரஹ கோயில் தரிசனம் :- புள்ளிருக்குவேளூரில் மங்களம் தரும் அங்காரகன்.

3. நவக்ரஹ கோயில் தரிசனம் :- திருவெண்காடு பிள்ளை இடுக்கி அம்பாளும் புதபகவானும்

4. நவக்ரஹ கோயில் தரிசனம் :- கீழப்பெரும்பள்ளம் கேண்மை மிக்க கேதுபகவான்

5. நவக்ரஹ கோயில் தரிசனம்:- கஞ்சனூரில் சுபம், சுகமீயும் சுக்கிரமூர்த்தி

6. நவக்ரஹ கோயில் தரிசனம். :- சூரியனார் கோவிலில் சிவசூரியநாராயணரை நோக்கும் மங்களகுரு..

7. நவக்ரஹ கோயில் தரிசனம்:- திருநள்ளாறு சாயாபுத்திரன் சனி பகவான்.

8. நவக்ரஹக் கோயில் தரிசனம்:- திருநாகேஸ்வரம் ராஜவாழ்க்கை நல்கும் ராகுபகவான்

9. நவக்ரஹ கோயில் தரிசனம் :- திங்களூர் சந்தோஷ வாழ்வருளும் சந்திர பகவான் 

1 கருத்து:

  1. வெங்கட் நாகராஜ்27 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 8:53
    அங்காரகன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.....

    பதிலளிநீக்கு

    பெயரில்லா28 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 4:58
    arputham

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam28 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 3:12
    வருடத்துக்கு ஒரு முறை சென்று வரும் பழக்கம் இருந்தது கடந்த இரு வருடங்களாகப் போக முடியவில்லை

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan17 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 11:31
    nandri Venkat sago

    nandri peyarilla

    nandri Bala sir.aduthavarudam poi vangka.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

வைகுண்ட ஏகாதசிக் கோலங்கள்

வைகுண்ட ஏகாதசிக் கோலங்கள்  இந்தக் கோலங்கள்  5. 1. 2023  குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.