நவக்ரஹ கோயில் தரிசனம் - ஆலங்குடி ஆலமர் ஈசன்.
கும்பகோணத்தில் இருந்து பதினேழு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது ஆலங்குடி. இறைவன் ஆபத்சகாயேஸ்வரர். இறைவி ஏலவார்குழலி அம்மை.
பாற்கடலைக்கடைந்தபோது வெளிவந்த விஷத்தை இறைவன் அருந்தி தேவர்களைக் காப்பாற்றியதால் ஆபத்சகாயேஸ்வரர் என்று பெயர். அதனாலேயே இவ்வூருக்கு ஆலங்குடி என்று பெயர்.
ஆலங்குடியில் ஆலமர் ஈசனைத் தரிசிக்கும் பேறு கிட்டியது. "குரு பார்க்கக் கோடி நன்மை" என்பார்கள். மழையும் இருளும் போட்டிபோட்டுத் தாக்கியபோதும் ஆலங்குடி சென்று அத்தகைய குருவை அருகே தரிசித்ததில் மிகவும் மகிழ்ந்தோம்.
பிரகஸ்பதி, வியாழன் என்றழைக்கப்படும் இவரின் பார்வை இருந்தால்தான் திருமணம் நடைபெறும்.
ஜாதகம் காண்பிக்க சென்றால் "வியாழ நோக்கம் வந்துவிட்டது திருமணம் செய்துவிடலாம்" என்று ஜோசியர்கள் கூறுவார்கள்.
ஆலங்குடி குரு ஆதிசங்கரரே வழிபட்ட குரு என்பதால் மிகவும் விசேஷமானவர். நவக்ரஹங்களிலேயே சுபகிரகம் குருபகவான்தான். தேவர்களின் குரு. அறிவு, ஞானம், புத்திரபாக்கியம், தனம் ஆகியவற்றுக்கு அதிபதியும் இவர்தான்.
திருமணம் இல்வாழ்வு ஆகியவற்றை செவ்வனே அமைப்பவர் குருபகவான்தான். இவருக்கு உகந்த நிறம் மஞ்சள் . எனவே மஞ்சள் வஸ்திரம் சாத்தி முல்லை மலர் வைத்து கொண்டக்கடலை சுண்டல் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து வழிபடுகிறார்கள். நவரத்தினங்களில் இவருக்கு உகந்த ரத்னம் புஷ்பராகம்.
இங்கே கலங்காமல் காத்த விநாயகர் சந்நிதியும் உள்ளது. 24 முறை குருவை வலம் வந்து 24 தீபம் ஏற்றினால் விசேஷம் என்கிறார்கள்.
கல்லாலின் புடையமர்ந்து நான்மறையா
றங்கமுதற் கற்ற கேள்வி
வல்லார்க ணால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கப் பாலாய்
எல்லாமா யல்லதுமா யிருந்ததனை
யிருந்தபடி யிருந்து காட்டிச்
சொல்லாமங்ற சொன்னவரை நினையாம
னினைந்துபவத் தொடக்கை வெல்வாம்.
“குருர் ப்ரஹமா குருர் விஷ்ணுர்
குருர் தேவோ மஹேஸ்வர:
குரு: ஸாஷாத் பரம் ப்ரஹம
தஸ்மை ஸ்ரீ குருவே நம:”
அங்கே நல்ல தரிசனத்தோடு எனக்கு முல்லைப்பூ கிடைத்தது விசேஷம்தானே :)
கோயிலை அடைய அரை கிலோமீட்டர் பஸ் ஸ்டாப்பிலிருந்து நடக்க வேண்டும். ஆட்டோவுக்கு 30 ரூபாய். கும்பகோணத்தில் இருந்து பஸ்கள் அடிக்கடி இல்லை. இது ஒரு குறையாகத்தான் இருக்கு. அதனால் மறுநாளில் இருந்து டாக்ஸி புக் செய்து சென்று வந்தோம்.
2017 செப்டம்பர் 2 ஆம் தேதி குருபெயர்ச்சி . குருவை வணங்கித் திருவருள் பெறுவோம்.
என் உள்ளம் கொள்ளை கொண்ட ஆலமர் செல்வனைத் தரிசித்ததோடு மட்டுமல்ல உங்களுக்காக எடுத்தும் வந்து பகிர்ந்துள்ளேன். நல்லதோ அல்லது அல்லதோ நமக்கு கற்றுக் கொடுக்கும் அனைவருமே குருதான். அவர்கள் அனைவருக்கும் வந்தனம். குருப்யோ நமஹ.
டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.
1. நவக்ரஹ கோயில் தரிசனம் - ஆலங்குடி ஆலமர் ஈசன்.
2. நவக்ரஹ கோயில் தரிசனம் :- புள்ளிருக்குவேளூரில் மங்களம் தரும் அங்காரகன்.
3. நவக்ரஹ கோயில் தரிசனம் :- திருவெண்காடு பிள்ளை இடுக்கி அம்பாளும் புதபகவானும்
4. நவக்ரஹ கோயில் தரிசனம் :- கீழப்பெரும்பள்ளம் கேண்மை மிக்க கேதுபகவான்
5. நவக்ரஹ கோயில் தரிசனம்:- கஞ்சனூரில் சுபம், சுகமீயும் சுக்கிரமூர்த்தி
6. நவக்ரஹ கோயில் தரிசனம். :- சூரியனார் கோவிலில் சிவசூரியநாராயணரை நோக்கும் மங்களகுரு..
7. நவக்ரஹ கோயில் தரிசனம்:- திருநள்ளாறு சாயாபுத்திரன் சனி பகவான்.
8. நவக்ரஹக் கோயில் தரிசனம்:- திருநாகேஸ்வரம் ராஜவாழ்க்கை நல்கும் ராகுபகவான்
9. நவக்ரஹ கோயில் தரிசனம் :- திங்களூர் சந்தோஷ வாழ்வருளும் சந்திர பகவான்

குரு பகவான் காயத்ரீ
ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு: ப்ரசோதயாத்
குரு பகவான் மந்திரம்
தேவானாம்ச ருஷினாம்ச குரும்
காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் த்ரிலோகஸ்ய
தம் நமாமி பிருஹஸ்பதிம்
குரவே சர்வ லோகானாம் பீஷஜே பவ ரோகினாம்
நிதயே சர்வ வித்யானாம் தக்ஷிணா மூர்த்தயே நமஹ!

ஞான ஆனந்த மயம் தேவம் நிர்மலம் ஸ்படிக ஆக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே!
பூஜ்யாய ராகவேந்திராய சத்யா தர்ம ரதாயச 1
பஜதாம் கல்ப விருக்ஷாய நாமதான் காமதேனுவே 11
குரு என்பதால் நடுவில் ஹயக்ரீவர் ஸ்தோத்திரத்தையும் ராகவேந்திரர் ஸ்தோத்திரத்தியும் பகிர்ந்துள்ளேன்.

குணமிகு குருபகவானே கொடுங்கோள் அகற்றிடுவாய்
சீரும் சிறப்பும் செல்வமுமாய் வாழ
உந்தன் பார்வையை மொத்தமாய் எனக்குத்
தந்தருள் புரிவாய் உன் பொன்னடி போற்றி.
சீரும் சிறப்பும் செல்வமுமாய் வாழ
உந்தன் பார்வையை மொத்தமாய் எனக்குத்
தந்தருள் புரிவாய் உன் பொன்னடி போற்றி.
அங்கே நல்ல தரிசனத்தோடு எனக்கு முல்லைப்பூ கிடைத்தது விசேஷம்தானே :)
கோயிலை அடைய அரை கிலோமீட்டர் பஸ் ஸ்டாப்பிலிருந்து நடக்க வேண்டும். ஆட்டோவுக்கு 30 ரூபாய். கும்பகோணத்தில் இருந்து பஸ்கள் அடிக்கடி இல்லை. இது ஒரு குறையாகத்தான் இருக்கு. அதனால் மறுநாளில் இருந்து டாக்ஸி புக் செய்து சென்று வந்தோம்.
2017 செப்டம்பர் 2 ஆம் தேதி குருபெயர்ச்சி . குருவை வணங்கித் திருவருள் பெறுவோம்.
என் உள்ளம் கொள்ளை கொண்ட ஆலமர் செல்வனைத் தரிசித்ததோடு மட்டுமல்ல உங்களுக்காக எடுத்தும் வந்து பகிர்ந்துள்ளேன். நல்லதோ அல்லது அல்லதோ நமக்கு கற்றுக் கொடுக்கும் அனைவருமே குருதான். அவர்கள் அனைவருக்கும் வந்தனம். குருப்யோ நமஹ.
டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.
1. நவக்ரஹ கோயில் தரிசனம் - ஆலங்குடி ஆலமர் ஈசன்.
2. நவக்ரஹ கோயில் தரிசனம் :- புள்ளிருக்குவேளூரில் மங்களம் தரும் அங்காரகன்.
3. நவக்ரஹ கோயில் தரிசனம் :- திருவெண்காடு பிள்ளை இடுக்கி அம்பாளும் புதபகவானும்
4. நவக்ரஹ கோயில் தரிசனம் :- கீழப்பெரும்பள்ளம் கேண்மை மிக்க கேதுபகவான்
5. நவக்ரஹ கோயில் தரிசனம்:- கஞ்சனூரில் சுபம், சுகமீயும் சுக்கிரமூர்த்தி
6. நவக்ரஹ கோயில் தரிசனம். :- சூரியனார் கோவிலில் சிவசூரியநாராயணரை நோக்கும் மங்களகுரு..
7. நவக்ரஹ கோயில் தரிசனம்:- திருநள்ளாறு சாயாபுத்திரன் சனி பகவான்.
8. நவக்ரஹக் கோயில் தரிசனம்:- திருநாகேஸ்வரம் ராஜவாழ்க்கை நல்கும் ராகுபகவான்
9. நவக்ரஹ கோயில் தரிசனம் :- திங்களூர் சந்தோஷ வாழ்வருளும் சந்திர பகவான்
வெங்கட் நாகராஜ்27 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 8:24
பதிலளிநீக்குஆலங்குடி தரிசனம் சிறப்பு.
பதிலளிநீக்கு
Thulasidharan V Thillaiakathu27 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 9:20
அருமையான பதிவு குருவைப் பற்றியும் கோயில் பற்றியும்!!...
என் உள்ளம் கொள்ளை கொண்ட ஆலமர் செல்வனைத் தரிசித்ததோடு மட்டுமல்ல உங்களுக்காக எடுத்தும் வந்து பகிர்ந்துள்ளேன். நல்லதோ அல்லது அல்லதோ நமக்கு கற்றுக் கொடுக்கும் அனைவருமே குருதான். அவர்கள் அனைவருக்கும் வந்தனம். குருப்யோ நமஹ.// பகிர்விற்கு மிக்க மிக்க நன்றி!! நமக்குக் கற்றுக் கொடுக்கும் அனைவருமே குருதான்...ஆம் ஆம்! யாசிப்பவரிடம் கூட நாம் பல கற்க முடியும்...அவரும் நமக்குக் குருதான் ஏன் வ்ழியில் காண்பவர் கூட அபப்டித்தான்....உங்களது இந்த வரிகளை மிகவும் ரசித்தோம்....
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan17 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 11:28
Nandri Venkat Sago
Nandri Thulasi sago & Geeths.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!