எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 8 ஜூன், 2020

ஸ்ரீ சேது பந்தன ஜெயவீர ஆஞ்சநேயர்.

ஸ்ரீ சேது பந்தன ஜெயவீர ஆஞ்சநேயர்.


திருப்புல்லாணிக்கு அருகில் ஸ்ரீ சேதுக்கரை ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் சமுத்திரத்தைப் பார்த்து அமைந்திருக்கிறது.


ஆடி அமாவாசை போன்ற தினங்களில் இங்கேயும் ராமேஸ்வரத்திலும் பிதுர் தர்ப்பணம் நடைபெறும். ஆனால் இங்கே கோயிலுக்கு எதிரே பத்தடியிலேயே கடலும் அதை ஒட்டி சீரற்ற படிகளும் சிதைந்த சிலைகளுமாகக் காட்சி அளிக்கின்றன. நடப்பதே சிரமமாய் இருந்தது.



முதலில் ஒரு விநாயகர் கோயில் அமைந்திருக்கிறது.



கோயிலின் வெளி முகப்பில் ராமர் சீதை லெக்ஷ்மணன் ஆஞ்சநேயரின் சுதைச்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. மஹாலெக்ஷ்மியும் அருள் பாலிக்கிறார்.



உள் சந்நியிதில் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி அளிக்கிறார். கருவறையில் ஜெயவீர ஆஞ்சநேயர் நிற்கும் திருக்காட்சி மனதை நிறைக்கிறது. 

மனோஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஸ்ரீ ராமதூதம் சி’ரஸா நமாமி



ஆனால் கோயிலுக்கு வெளியே கந்தைத் துணிகளும் பின்னமான சாமி சிலைகளும் கிடக்கும் கோராமையைப் பாருங்கள்.



உக்கிரமான தெய்வப்படங்களை வீட்டில் வைத்திருக்கக் கூடாது என்றும் உக்கிரமான அல்லது தனித்திருக்கும் சாமி படங்களையும் சிலைகளையும் வீட்டில் வைத்தால் ஒற்றுமைக்குக் கெடுதல் என்று சொல்லிக் கொண்டுபோய்க் கோயிலில் வைப்பார்கள்.



ஆனால் இக்கோயிலில் மூலவர் போன்ற சாமி சிலைகளும் இருப்பது ஏன்.?. எங்கிருந்து வந்தன இவ்வளவு சிலைகள். கடல்கொண்டு தள்ளியதா. இல்லை மனிதர்கள் கட்டிடக் கழிவு போல எங்கிருந்தோ பின்னமான சாமி சிலைகளையும் கொண்டுவந்து போடுகிறார்களா ?.

அட ஆஞ்சநேயர் கூடவா வெளியில் ஹ்ம்ம். L 




கடல்நீர் உள்வாங்கும் அபாயமும் கோயிலுக்கு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

1 கருத்து:

  1. வெங்கட் நாகராஜ்5 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 6:10
    சிலைகள் பின்னப்பட்டு கிடக்கும் கோலம் - வேதனை.

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam5 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 6:45
    நீங்கள் உன்னிப்பாக கவனிக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு

    Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University6 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 8:05
    இதுவரை போகாத கோயிலுக்கு, பதிவின் மூலமாக அழைத்துச் சென்றமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan11 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 12:12
    aam Venkat sago

    nandri Bala sir

    nandri Jambu sir


    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

வைகுண்ட ஏகாதசிக் கோலங்கள்

வைகுண்ட ஏகாதசிக் கோலங்கள்  இந்தக் கோலங்கள்  5. 1. 2023  குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.