இரணிக்கோயில் தூண்சிற்பத் திருமூர்த்தங்கள்.
புகைப்படக்காரர்களின் டிலைட் என்றால் அது இரணிக்கோயில் என்றால் மிகையாகாது. காரைக்குடிக்கு அருகில் இருக்கும் ஒன்பது நகரக் கோயில்களில் இந்த சிற்பக் கலையில் மாத்தூர், வைரவன் கோயில், நேமம், இரணிக்கோயில் ஆகிய சிறப்பிடம் பிடிக்கின்றன. அதிலும் இரணிக் கோயில் புராணக் கதையின் படியும் சரி, சிற்பவேலைப்பாடுகளிலும் ஓவியங்களிலும் சரி முதலிடம் பிடிக்கிறது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என அவற்றைப் படம் பிடித்துப் பகிர்ந்துள்ளேன்.
சிவனின் 108 திருமூர்த்தங்களும் இடம் பெற்றிருக்கலாம். ஆனால் நான் சிலவற்றையே படம் பிடித்திருக்கிறேன். நல்ல கரவு செறிவான சிற்ப வேலைப்பாடுகள். கல்லில் சங்கிலி , நகம், முடி போன்றவற்றைக் கூட யதார்த்தத்தைப் போல அச்சு அசலாக வடித்திருக்கிறார்கள். அந்தக் காலத்தில் அப்பிடியாப்பட்ட ஸ்தபதிகள் இருந்திருக்கிறார்கள். இப்போது எங்கே எனத் தெரியவில்லை.
இக்கோயில்கள் பெரும்பாலும் கற்றளிக்கோயில்கள்தாம். இங்கே பிக்ஷாடணர் காட்சி அளிக்கின்றார். அவருடைய பாதரட்சைகளைக் கூடப் பாருங்களேன்.நாணம் மீறிய ஆசையால் தன்னிலை மறக்கும் ரிஷி பத்தினிகளும் வடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
முயலகனும் சூரசம்ஹார மூர்த்தியும். அவரது சிரசைப் பாருங்கள். தீ லாவுகிறது.
இந்த மூர்த்தியின் ஆடைகள் வரிவரியாக சுருண்டு நிற்பது கொள்ளை அழகு.
அவரேதான் இவரும் . இன்னொரு கோணத்தில் போர்க்கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
மீனாக்ஷி திருக்கல்யாணம். கல்யாண சுந்தரர்.
இவர் கலாட ரூபர்.
இவர் ருத்ர மூர்த்தி.
அநேகமும் சம்ஹார ரூப மூர்த்தங்கள்தான் இரணிக்கோயிலில்.
வேடரும் ஷண்முகநாதரும்.
அறுமுகமும் பன்னிரெண்டு கையும் வேலும். மயில்வாகனத்தில் எழுந்தருளி இருக்கும் சுப்ரமண்யர். மயிலின் நளினமான தலையசைப்பைப் பாருங்களேன். :)
மூஞ்சுறு வாகனத்தில் விநாயகரும் சூரசம்ஹார மூர்த்தியும்.
கலாட ரூபர் இன்னொரு கோணத்தில்.
திருக்கல்யாணமும்.
அழகான சிவபுரந்தேவி.
திருக்கல்யாணம்.
அம்மைக்குத் தன் இடப்பாகம் தந்த அர்த்தநாரீசர்.
அஹா கொள்ளை அழகு ருத்ர மூர்த்தி.
யமனிடமிருந்து மார்க்கண்டேயரைக் காத்த காலசம்ஹார மூர்த்தி.
தத்ரூபம். அழகுக் கோலங்கள். செதுக்கிய சிற்பிகளுக்கு வந்தனங்கள். காலத்தால் அழியாத ஒன்றைப் படைத்து விட்டீர்கள். இறைவன் கருணையும் உங்கள்மேல் நிறைந்திருக்கும்.
டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.
1. அஷ்ட பைரவர்களும் 108 உக்கிர பைரவர்களும்.
2. துர்க்கை உள்ளே லெக்ஷ்மி வெளியே.
3. இராசிகளை ஆளும் இரணியூர் நீலமேகப் பெருமாளும் கனகவல்லித் தாயாரும்.
4. ஊருணிகள் - திருக்கோயில் புஷ்கரணிகளும் தாமரை பூத்த தடாகங்களும்.
5. இரணிக்கோயில் கோபுரங்களும் திருச்சுற்று மதிலில் பள்ளிகொண்டபெருமாளும் நான்முகனும்.
6. இரணிக்கோயில் படிச்சிற்பங்கள்.
7. இரணிக்கோயில் தூண்சிற்பத் திருமூர்த்தங்கள்.

கரந்தை ஜெயக்குமார்30 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 6:47
பதிலளிநீக்குஆகா
சிற்பங்கள் அற்புதம்
நன்றி சகோதரியாரே
பதிலளிநீக்கு
G.M Balasubramaniam30 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 11:11
நகரத்தார் கோவில்கள் ஒன்பதற்கும் சென்று வந்திருக்கிறோம் ஆனால் எல்லாமேஒரு அவசரகதியில் நடந்ததால் சிற்பங்களை ரசித்து புகைப்படங்கள் எடுக்காதது வருத்தம் தருகிறது
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan4 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 3:08
நன்றி ஜெயக்குமார் சகோ
நன்றி பாலா சார். நானும் பல கோயில்களில் எடுத்ததில்லை. தற்போதுதான் எடுக்க ஆரம்பித்திருக்கிறேன்.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan4 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 3:08
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
பதிலளிநீக்கு
Unknown16 ஏப்ரல், 2017 ’அன்று’ முற்பகல் 12:53
கீழசெவல்பட்டி அருகே உள்ள இரணியூர் கோயில் தானே.
பதிலளிநீக்கு
Unknown16 ஏப்ரல், 2017 ’அன்று’ முற்பகல் 12:56
கீழசெவல்பட்டி அருகில் உள்ள இரணியூர் தானே!