எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 17 மே, 2020

விருத்தன் திருமணமும் விடையேறு பாகன் திருவிளையாடல்களும்.

விருத்தன் திருமணமும் விடையேறு பாகன் திருவிளையாடல்களும்.

இரணிக்கோயில் சிற்பங்களைப் போல மிக அழகு வாய்ந்தவை வெளி மண்டபத்தில் இயற்கைச் சாயம் கொண்டு வரையப்பட்டிருக்கும் இந்த ஓவியங்கள்.
வள்ளி திருமணம். ! முருகன் விருத்தன் வேடத்தில் வந்து வேழமுக அண்ணனின் உதவியோடு வள்ளியை மணம் புரிந்தது.
விடையேறு பாகன்.
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த ததனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு  நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. 

அன்னை மீனாட்சி.

ஆழ்கடலில் போட்டாலும் அக்கினியில் இட்டாலும்
அழியாத மேனி வேண்டும்
அடுநோய்கள் பலகூடி உடல்மீது தொடுத்தாலும்
அலறாத நெஞ்சம் வேண்டும். 
பாழ்வழியிலே தூங்கிப் பசியோ டிருந்தாலும்
பக்தியிலே உறுதி வேண்டும்.
பயமாகத் தோன்றுவதை நயமாக மாற்றுகின்ற
பலமான அறிவு வேண்டும். 
ஊழ்வினைகள் ஒன்றாகி உயிர்வாதை செய்தாலும்
ஒளிசிந்தும் இதழ்கள் வேண்டும்
உச்சத்தில் இருந்தபடி கீழே விழுந்தாலும்
உலையாத நெஞ்சம் வேண்டும்
சூழ்வதெல்லாம் நீயென்ற துணிவுதா தேவியே
சொக்கனின் அன்பு மனையே
தொல்மதுரை நகருக்குப் பல்லாண்டு பாடிடும்
தூய மீனாட்சி உமையே. ! 

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம். ! 

அன்ன பட்சிகளும் தேவதைகளும் .
கல்தாமரைகளும் சிங்கமுக யாளிகளும்.
கலைத்தூண்களும் வண்ணம் மாறா ஓவியங்களும்
நாரதர் மாங்கனியைக் கொண்டு வந்து கலகத்தை ஆரம்பித்தல்.
சிவபெருமானிடம் கொடுத்து இதை ஒருவரே உண்ணவேண்டும் என சொல்ல அவர் பார்வதியிடம் கொடுக்கிறார். அவர் பிள்ளைகளுக்குக் கொடுக்க விழைய சிவன் போட்டி வைக்கிறார். யார் உலகத்தை முதலில் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கே இம்மாங்கனி என்று சொல்கிறார்.
அம்மையப்பன்தான் உலகம் என்று சொல்லி விநாயகர் தாய் தந்தையைச் சுற்றி வந்து மாங்கனியைப் பெற்றுக் கொள்கிறார்.
இதை அறியாத முருகன் உலகை மயில்மீது சுற்றி வந்து கொண்டிருக்கிறார்.

சுற்றி வந்து மாங்கனியைக் கேட்க அதை விநாயகருக்குக் கொடுத்துவிட்டதாக சிவ பெருமான் கூற முருகன் கோபமடைகிறார்.
கோபித்துக் கொண்டு பழநிமலையில் ஆண்டிக் கோலத்தில் போய் நின்றுவிடுகிறார் . அதன் பின் தமிழ்ப்பிராட்டி ஔவையின் பாடல்களினால் மனம் குளிர்ந்த முருகன் பெற்றோருடனும் அண்ணனுடனும் சேர்கிறார்.

சூரபதுமனை சம்ஹரிக்க பரமசிவன் சுப்ரமணியருக்கு சக்திவேல் கொடுக்கிறார்.

தெட்சிணாமூர்த்தி சனகாதிமுனிவர்களுக்கு ஞான உபதேசம் செய்தல்.
காமதகனம்.
தாட்சாயிணி பூஜை செய்தல். சுந்தரரும் அப்பரும்/மாணிக்கவாசகரும்/திருநாவுக்கரசரும் ?
பிட்டுக்கு மண் சுமத்தல்.

கானதேவதைகளும் கந்தர்வக் கன்னிகளும் பன்னிரெண்டு ராசிகளும்.
டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1. அஷ்ட பைரவர்களும் 108 உக்கிர பைரவர்களும்.

2. துர்க்கை உள்ளே லெக்ஷ்மி வெளியே.

3. இராசிகளை ஆளும் இரணியூர் நீலமேகப் பெருமாளும் கனகவல்லித் தாயாரும். 

4. ஊருணிகள் - திருக்கோயில் புஷ்கரணிகளும் தாமரை பூத்த தடாகங்களும்.

5. இரணிக்கோயில் கோபுரங்களும் திருச்சுற்று மதிலில் பள்ளிகொண்டபெருமாளும் நான்முகனும். 

6. இரணிக்கோயில் படிச்சிற்பங்கள்.

7. இரணிக்கோயில் தூண்சிற்பத் திருமூர்த்தங்கள்.

1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்16 ஏப்ரல், 2017 ’அன்று’ முற்பகல் 7:32
    அசர வைக்கும் ஓவியங்கள்...

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்16 ஏப்ரல், 2017 ’அன்று’ முற்பகல் 9:57
    அற்புதமான ஓவியங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

    Nagendra Bharathi16 ஏப்ரல், 2017 ’அன்று’ முற்பகல் 10:50
    அருமை

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan17 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 2:49
    நன்றி டிடி சகோ

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி நாகேந்திர பாரதி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.