எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 27 மே, 2020

திருக்கடையூர் அபிராமி, சீர்காழி சட்டைநாதர் கோயில்கள்.

திருக்கடையூர் அபிராமி, சீர்காழி சட்டைநாதர் கோயில்கள்.

தோணியப்பரைப் பார்த்துத் தோடுடைய செவியன் என்று ஞானப்பால் பெற்ற திருஞான சம்பந்தர் பாடிய பாடல் இங்கேதான் நிகழ்ந்தது.

திருக்கடையூர் காலசம்ஹார மூர்த்தியையும் அபிராமியையும் அதே நாளில் தரிசித்தோம்.

இங்கே தங்கவில்லை. அழகாக இருந்தது என்று எடுத்தேன். 

அபிராமி அம்மையைத் தரிசிக்கக் காத்திருந்த நேரத்தில் முன் ஹாலில் எடுத்தது. 



மார்க்கண்டேயனைக் காத்த கால சம்ஹார மூர்த்தியை விடவும் அபிராமியிடம் ஏனோ ப்ரேமை அதிகம் எனக்கு.


அபிராமி அபிராமி என்று கமல் போல அவ்வப்போது சொல்லியும் மகிழ்வதுண்டு :)

உள்ளே 59, 60, 70, 80, 90 , 100 என வயது வாரியாக ஹோமங்களும் யாகங்களும் நடைபெற்று நடைபெற்று கருப்படித்துக் கிடக்கிறது காலசம்ஹாரமூர்த்தியின் சன்னிதியும் பிரகாரமும்.

ஆனால் அபிராமி அம்மையின் முன்னால் இந்தத் தோட்டம் & நந்தவனம் பரந்து விரிந்து கிடக்கிறது. மாபெரும் அழகுடன்.
ஆயுஷ்ஹோமங்கள் செய்வோரும் கும்பம் சொறிதலுமாகக் கலவையாய்க் கிடக்கிறது கோயில். உள்ளே எடுக்க அனுமதி இல்லை. எனவே வெளியே எடுத்தேன்.
இந்தக் குட்டி யானை யாளியின் கால்களுக்குள் நின்று கொண்டு அழகாய் செய்யும் அட்டகாசம் பிடித்திருந்தது.

செதுக்கியவன்/அமைத்தவன் கலாரசிகன். :)

சோ க்யூட்ல்லா :)
முத்துச்சட்டைநாதர் சன்னதி சீர்காழியில்
சனகாதி முனிவர்கள் சங்கரனுடன்.-- தட்சிணாமூர்த்தியுடன்
பிரகாரத்தில் விநாயகர்.


திரும்பவும் திருஞான சம்பந்தர் மெய்ஞானம் பெற்ற இடத்தில். :)
கும்பகோணம் சீர்காழியைச் சுற்றி நூற்றுக்கணக்கான கோயில்கள். ஒருமுறை சென்று வாருங்கள் . ஆன்மீக எனர்ஜி ஃபுல் ஸ்ட்ரெந்த்தில் ஏறிவிடும். :)

1 கருத்து:

  1. G.M Balasubramaniam15 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 3:24
    இரண்டு மூன்று முறை சென்று வந்திருக்கிறோம் பதிவர் ஒற்றுமை வளர்க

    பதிலளிநீக்கு

    மாதேவி15 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 7:59
    சீர்காழி கோவில்கள் காணக்கிடைத்து மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்16 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 7:12
    அழகிய படங்கள். இப்பகுதிகளில் பயணம் செய்ய வேண்டும். பார்க்கலாம் எப்போது முடிகிறது என.....

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan19 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 3:46
    ARUMAI BALA SIR

    NANDRI MADEVI

    NICHAYAM POI VAANGKA VENKAT SAGO


    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

வைகுண்ட ஏகாதசிக் கோலங்கள்

வைகுண்ட ஏகாதசிக் கோலங்கள்  இந்தக் கோலங்கள்  5. 1. 2023  குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.