எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 25 மே, 2020

பூமீஸ்வர ஸ்வாமிகோயில் - புதுவண்ணத் தேர்.

பூமீஸ்வர ஸ்வாமிகோயில் - புதுவண்ணத் தேர்.

கடியாபட்டியில் இருக்கும் ஸ்ரீ பிரம்ம வித்யாம்பாள் சமேத ஸ்ரீபூமிஸ்வர ஸ்வாமி கோயிலின் ஒன்பதாம் திருவிழா நாளான இன்று தேரோட்டம் நடைபெறுகிறது. சிலநாட்கள் முன்பு அங்கே சென்ற என்னை எனது சித்தப்பா அத்தேரைக் காண அழைத்துச் சென்றார்கள். தூரத்தில் இருந்து பார்க்கும்போது உயரமாகக் கவர்ந்ததே ஒழிய அதன் சிறப்பம்சங்கள் புரியவில்லை. ஆனால் கிட்டே சென்று பார்த்தபோது அடடா.. என் சொல்வேன். அங்கே முழுதும் புதிதாக வண்ணம் தீட்டப்பட்டு கண்கவர நின்றிருந்த தேரைக் கண்டேன். மெய்மறந்தேன்.

சுற்றிச் சுற்றிப் புகைப்படம் எடுத்தேன். :)


எனக்கு இந்தத் தேரையும் அதன் வண்ணந்தீட்டப்பட்ட குதிரைகளையும்  பார்க்கும்போது கண்மணி குணசேகரனின் ஒரு கதை ஞாபகம் வந்தது. J
 



இதில் தேர்க்கால் கட்டை, சக்கரம், குதிரைகள், தேரின் எல்லாப் பக்கங்களும் எடுத்திருக்கிறேன்.





தாவும் குதிரைகள்,



அடுத்த இடுகைகளில் இன்னும் சிறப்பு இருக்கு. என்னன்னா. படிப்படியான அழகழகான சிற்பங்கள். அதை எப்படி இத்தேரில் செதுக்கிப் பொருத்தினார்கள் என்று தெரியவில்லை. உலக அதிசயங்களில் ஒன்றாக நமது கோயில்களின் பாரம்பரியத் தேர்களும் கொள்ளப்படவேண்டும்.





பின்புறத்தில் தேர்க்கட்டை.




இச்சிற்ப வேலைப்பாடுகள் செய்த பெருந்தச்சர்கள் மரபில் யார் இருந்தாலும் அவர்கள் இன்னும் பயிற்சி பெற்று இவை போல் சிற்பங்கள் சமைக்க வேண்டும். இது ஒரு உலக மகா கலை என்று தோன்றுகிறது. ஏனெனில் ஒரு சின்னப் பலகைக் கட்டையில் தசாவதாரம், 64 லீலைகள், முப்பெரும் தேவர்கள், அம்பாளின் பல்வேறு ரூபங்கள், உக்ர தெய்வங்கள், விநாயகர், ஆஞ்சநேயர் , பைரவர்,  இதில் முருகன் மயில்வாகனத்தில் மயிலின் வாயில் உள்ளே ஒரு நாகம் தொங்குவது கூட செதுக்கப்பட்டிருப்பது என்னை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது.



நான்முகன்.




கோயில் தோற்றம்.



அழகான பிரம்மாண்ட்மான வார்ப்பிரும்புச் சக்கரம்,




கீழ்க்கட்டையில் காவல் தெய்வங்கள். தேரைக் காவல் காக்கும் தெய்வங்கள். ஐயனார். வீரன், கருப்பர் போன்ற காவல் தெய்வங்கள். அதன் மேல்படியில் குதிரை வீரர்கள், வீரப் பெண்கள். அதன் மேல்படியில் உக்ர தெய்வங்கள். அதற்கும் மேல் படியில் சாத்வீக தெய்வங்கள் என மனதையும் கண்ணையும் கருத்தையும் நிறைத்தனர் தெய்வத் திரு உருவத்தினர்.



யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

1 கருத்து:

  1. G.M Balasubramaniam7 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 3:22
    அசைந்து வரும்தேரைக் காண்பதே பிடிக்கும் எங்கள் ஊர் கல்பாத்தி தேரை யானை முட்டித் தள்ளுவதைப் பார்க்க த்ரில்லாக இருக்கும்

    பதிலளிநீக்கு

    M0HAM3D7 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 3:48
    படங்கள் அருமை

    பதிலளிநீக்கு

    திண்டுக்கல் தனபாலன்7 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 5:56
    அழகோ அழகு...

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்8 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 10:07
    அனைத்து படங்களும் அழகு. சிற்ப வேலைப்பாடுகள் வெகு சிறப்பு.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan19 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 9:20
    AHAA PADAM IRUNTHA PODUNGKA BALA SIR

    NANDRI MOHAMED SAGO

    NANDRI DD SAGO

    NANDRI VENKAT SAGO


    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu20 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 8:06
    எவ்வளவு அழகு!!! படங்களும் அழகு! அழகான கைவேலைப்பாடு!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.