எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 6 மே, 2020

இரணிக்கோயில் படிச்சிற்பங்கள்.

இரணிக்கோயில் படிச்சிற்பங்கள்.

இரணிக்கோயில் சிற்பக் கலைக்குப் புகழ்பெற்றது . இங்கே எடுத்த சில படிச் சிற்பங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். படிக் கோலம் என்பது ரொம்ப விசேஷம் என்பது போல இந்தப் படிச் சிற்பங்களும் விசேஷமா இருக்கு. விதம் விதமான பூக்களும் தாமரையும்தான் இதன் அழகை அதிகமாக்குகின்றன. கொடிகளும் இலைகளும் தத்ரூபம்.

நான் ரசித்த அழகை நீங்களும் கண்டு களியுங்கள்.

கவிழ்ந்த கருங்கல் தாமரை பூத்திருக்கும் வாயில்கள்.
பொதுவாக வெள்ளைக்கல்லில்தான் படிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இலைகளும் ஐந்து இதழ் கொண்ட பூக்களும் பூத்திருக்கின்றன. கீழே அன்னபட்சி தன் வாயில் கவ்வி இருக்கிறது இக்கொடியை.
கற்பனை வளம் அளவிடற்கரியது. கீழே பூச்செடியின் பக்கம் நிற்கும் நாய்க்குட்டி கொள்ளை அழகு. அதன் மேல் கிளைகள் எழும்பி பூக்களும் இலைகளும் சுற்றிலும் மணிகளைப் போலும் பொறிக்கப்பட்டிருப்பது  விசித்திரம்.
கீழே அசுரகணம் அமர்ந்திருக்க அதன் மேல் நீளும் கொடியும் பூவும். வித்யாசமான வரிவரியான  வடிவமைப்பு.


கீழே ஒரு பூந்தொட்டியும் அதிலிருந்து கிளைத்திருக்கும் கொடிகளும் பூக்களும்.
இதிலும் அப்படியே. ஆனால் தூணைச்சுற்றிக் கொண்டிருக்கும் டெண்ட்ரில் க்ளைம்பர்ஸ் போல கொடி அமைப்பு. அதன் உச்சியில் அழகான பூக்கள் மூன்று.
இன்னொரு விதமான பிராணியும் பற்றுக் கொடியும்.
யப்பா என்ன ஒரு கரவு நெளிவு சுளிவு. இப்படிக் கோலம் போடும்போதும் ஓவியம் வரையும் போதும் கூட நச்சென்று வருவது அரிது. ஆனால் சிற்பமாக வழு வழுவென்று இங்கே செதுக்கி இருக்கும் பாணி சிறப்பு. பூந்தொட்டியிலிருந்து பூத்து வழியும் இலைகளும் பூக்களும் அலையலையாக் கிளம்பி மனம் மயக்குகின்றன. இவற்றைச் செதுக்கிய சிற்பிகள் யாரோ. உண்மையில் பிரம்மனுக்குச் சமமானவர்கள்தாம்.

இவற்றிற்கெல்லாம் ஏதும் தனிப்பட்ட பேரும் பாணியும் இருக்கலாம். அது பற்றி எல்லாம் எனக்குத் தெரியவில்லை. தெரிந்ததை பார்த்ததை உணர்ந்ததைப் பகிர்ந்திருக்கிறேன் :)

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1. அஷ்ட பைரவர்களும் 108 உக்கிர பைரவர்களும்.

2. துர்க்கை உள்ளே லெக்ஷ்மி வெளியே.

3. இராசிகளை ஆளும் இரணியூர் நீலமேகப் பெருமாளும் கனகவல்லித் தாயாரும். 

4. ஊருணிகள் - திருக்கோயில் புஷ்கரணிகளும் தாமரை பூத்த தடாகங்களும்.

5. இரணிக்கோயில் கோபுரங்களும் திருச்சுற்று மதிலில் பள்ளிகொண்டபெருமாளும் நான்முகனும். 

6. இரணிக்கோயில் படிச்சிற்பங்கள்.

7. இரணிக்கோயில் தூண்சிற்பத் திருமூர்த்தங்கள்.

1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்3 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 1:11
    உன்னிப்பான உங்களின் பார்வைக்கு பாராட்டுகள் சகோதரி...

    பதிலளிநீக்கு

    Nagendra Bharathi3 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 4:30
    அருமை

    பதிலளிநீக்கு

    கரந்தை ஜெயக்குமார்3 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 7:10
    அருமையான சிற்பங்கள்

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்12 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 2:37
    அழகு......

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan13 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 9:41
    நன்றி டிடி சகோ

    நன்றி நாகேந்திர பாரதி சகோ

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan13 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 9:41
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.