மணக்குள விநாயகர். கஜானனை பூஜிக்கும் லெக்ஷ்மி.
புதுச்சேரி மணக்குள விநாயகர ஆலயம் மிக அழகானது. இது பதினைந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட கோவில். தொள்ளைக்காது சித்தர் என்பவர் ஒரு மணற்குளத்தங்கரையில் உருவாக்கி வழிபட்டு வந்த விநாயகர் இவர். எனவே கருவறை அமைந்திருக்கும் இடமே ஒரு கிணறு போன்ற நீர்நிலைமேல் என்கிறார்கள். பக்கத்திலேயே ஒரு குழியில் எப்போதும் வற்றாமல் நீர் நிரம்பி நிற்கிறது என்றும் சொல்கிறார்கள்.
பிள்ளையார்பட்டிக் கோவிலுக்குப் பின் அருளாட்சி வெகுவாகப் பொலிய நான் பார்த்த விநாயகருக்கான தனிக்கோவில் இது. சுமார் 35 லட்சரூபாய் மதிப்பிலான ஏழரைக்கிலோ தங்கத் தகட்டால் செய்யப்பட்ட தங்கத்தேர் கொண்ட கோவில் இது. தங்கத்தேர் மட்டுமல்ல. கோபுரம் கூட தங்கத்தால் வேயப்பட்ட கோவிலாம். !
புதுவை கடற்கரைக்கும், அரசு அலுவலகங்களுக்கும் அரவிந்தர் ஆசிரமத்துக்கும் பக்கத்தில் உள்ளது. மிக அழகான நீண்ட தூய சாலைகள் கொண்டது புதுவை.