எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 4 நவம்பர், 2020

சிவன்மலை சுப்ரமண்யசுவாமி கோயில்.

சிவன்மலை சுப்ரமண்யசுவாமி கோயில்.

திருப்பூர் பார்க் கல்லூரியில் மகளிர் மன்ற நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக அக்கல்லூரியின் முதல்வர் திருமாறன் ஜெயமாறன் அவர்களால் சில வருடங்களுக்கு முன்பு அழைக்கப்பட்டிருந்தேன். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பெங்களூருவில் இருந்து இருவருக்கு ஏசி இரண்டாம் வகுப்பு ட்ரெயின் டிக்கெட்டும், திருப்பூரில் தங்க ஏசி ரூமும் புக் செய்ததோடு காலையில் இருந்து இரவு கிளம்பும் வரை ஒரு பேராசிரியரும் பேராசிரியையும் எங்கள் பயணத் திட்டத்தையும் உணவு ஏற்பாடுகளையும் கவனித்துக் கொண்டார்கள். மறக்கமுடியாத நிகழ்வு அது. பரிசுப்பொருட்கள், பொன்னாடை, பணமுடிப்பு என்று வேறு கொடுத்து சிறப்புச் செய்திருந்தார்கள்.

நிகழ்வு முடிந்து மாலையில் சிவன் மலை மற்றும் திருப்பூர் வெங்கடேச பெருமாள் கோயில் இன்னும் சில கோவில்களுக்கு  சென்றுவர கார் ஏற்பாடு செய்து கொடுத்தார். சிறப்பான தரிசனம் பெற்றோம்.

கோயிலுக்குச் செல்லும் வழியிலும் மலை மேலும் ஒரே ப்ளாஸ்டிக் குப்பைதான் இயற்கைக்கு இடராக இருந்தது. இது சிவன் மலையா இல்லை ப்ளாஸ்டிக் மலையா என்று எண்ணுமளவு.

487 படிகளாம். நாங்கள் காரிலேயே மலைக்குச் சென்றதால் களைப்பு தெரியவில்லை. சிவன் அருளாலே அவன் மகன் தாள் வணங்கி வந்தோம்.
கோயிலில் ஜுரஹரேஸ்வரர், கைலாஸநாதர், ஞானாம்பிகை, விநாயகர், ஆகியோரோடு சனி பகவானும் தனியாக சந்நிதியில் அருள் பாலிக்கிறார். 

அப்போது கட்டுமான வேலை நடைபெற்று வந்தது. இப்போது முடிந்து கும்பாபிஷேகம் ஆகி இருக்கலாம்.

இக்கோயிலிலில் வித்யாசமான வேண்டுதல் ஒன்று உண்டு. அதுதான் உத்தரவுப் பெட்டி . யார் கனவிலாவது ஏதேனும் பொருளை அர்ப்பணிக்கும்படி வந்தால் கோயிலில் பூப்போட்டுப் பார்த்து இந்த உத்தரவுப் பெட்டியில் வைத்துவிடுவார்களாம். அடுத்த பொருள் வரும்வரை இது இருக்கும்.

வேலும் மயிலும் துணை. துவஜஸ்தம்பத்தின் அருகில் மிகப் பெரிய வேல் ஒன்று காட்சி அளிக்கிறது. வேல் மாறல் , வேல் வகுப்பு  பாடல்கள் ஞாபகம் வந்தன.
சிவ வாக்கிய சித்தர் இம்மலையில் தங்கி சிவன் மகனை வணங்கி இக்கோயிலை எழுப்பியதாக சொல்கிறார்கள்.
தீர்த்தம் காசி தீர்த்தம் & ஸ்தலவிருட்சம் தொரட்டி மரம்.
சிவன் மேருமலையை வில்லாகப் பயன்படுத்தி திரிபுரத்தை அழிக்க முற்பட்டபோது சிதறிய துண்டுதான் இம்மலை என்கிறார்கள்.
பார்வதியும் அகத்தியரும் சிவனை நோக்கி தவம் செய்த தலம். வள்ளிமலை சென்று வள்ளியை மணந்த முருகப் பெருமான் இத்தலத்தில் வள்ளியுடன் கோயில் கொண்டிருக்கிறார். அருளாட்சி மிக்க ஸ்தலம் இது.
இன்றும் சித்தர்கள் உலாவரும் மலை இது என்கிறார்கள்.

a
கோபுரத்தில் சிவன் குடும்பம்.

பிள்ளையார், சிவன் பார்வதி அனைவரும் இருந்தாலும் முருகனுக்குத்தான் முதல் வழிபாடு.

நவக்கிரகங்கள் சூரியனைப் பார்த்து நிற்பதும் சிறப்பு.

சிவன்மலையில் முருகக் கடவுளின் வாகனத்தைப் படம் பிடித்தேன். பல புகைப்படங்கள் சரியாக விழவில்லை. :(

கோயில் முன்புறம் இந்த அரசமரம். இந்துக்கோயில்களில் உள்ள புனித மரம் வினோதக் கவர்ச்சியுடன் காட்சி அளித்தது.
சப்த கன்னியர் மாதிரி இங்கே நவகன்னியருக்கும் சிவன் காட்சி அளித்திருக்கிறாராம். சிவன் மலையில் அவர் மகனுக்குச் சிறப்பளித்த மலை. திருப்பூரிலிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது இம்மலை. அனுபாவி, குருந்தமலை, மருதமலை, கோவை மாவட்ட  & சேலம் மாவட்ட  ( ஸ்கந்தபுரி, ஊத்துமலை ) மலைகளில் உள்ள முருகன் கோவில் மாதிரி இங்கும் முருகனின் அருளாட்சியில் மகிழ்ந்து தோய்ந்து வந்தோம்.

1 கருத்து:

 1. Thulasidharan V Thillaiakathu26 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 9:27
  பல நாட்கள் ஆகிவிட்டது தங்கள் தளம் வந்து. இதோ இனி தொடர்கிறோம். ஒவ்வொன்றாகப் பார்க்க வேண்டும்.

  படங்கள் அத்தனையும் அழகு. சிவன் மலை விவரங்களும். டாப் வியூ படங்கள் நன்றாக உள்ளன. தொடர்கிறோம் சகோதரி ////// தேனு....(சகோதரி என்று சொல்லுவது துளசி. தேனு என்று சொல்வது கீதா....ஹா ஹா)  பதிலளிநீக்கு

  Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University26 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 10:22
  நான் பார்க்க ஆசைப்படும் கோயில்களில் ஒன்றான சிவன்மலைக்கு அழைத்துச்சென்றமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

  Thenammai Lakshmanan30 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 2:38
  நன்றி துளசி சகோ & கீத்ஸ். வாங்க வாங்க நீங்க வராம இங்கே ஆளே இல்லாதமாதிரி காத்தாடிக்கிட்டு இருக்குது. மறு வருகைக்கு அன்பும் நன்றியும்.

  அஹா மிக்க நன்றி ஜம்பு சார். அந்த பாக்கியம் எனக்குக் கிடைத்ததே.. :)

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

  iramuthusamy@gmail.com30 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:03
  சிவன்மலை பற்றி நல்ல புகைப்படப்பதிவு

  பதிலளிநீக்கு

  Thenammai Lakshmanan18 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 12:38
  நன்றி முத்துசாமி சகோ

  பதிலளிநீக்கு

நரசிம்ம ஜெயந்திக் கோலங்கள்

   நரசிம்ம ஜெயந்திக் கோலங்கள்