எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 12 நவம்பர், 2020

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில்.

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில்.

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில்.

திருச்சி மலைக்கோட்டைக்குப் போகும்போது தெரியாது உச்சிப் பிள்ளையார் நிஜமாகவே மிக மிக உச்சியில்தான் இருக்கிறார் என்று. கல்லூரிப் பருவத்தில் ஒருமுறை சென்ற போது மலையைச் சுற்றி இருக்கும் கடைகளில் ஷாப்பிங் செய்துவிட்டுத் திரும்பி விட்டோம். சில ஆண்டுகளுக்கு முன்பு போகும்போதும் திருச்சி ஏர்ப்போர்ட்டில் நெருங்கிய உறவினரை ரிசீவ் செய்ய சென்றதால் தாயுமான சுவாமி சந்நிதிக்கு மட்டும் சென்று வணங்கி வந்தோம்.
கீழே மாணிக்க விநாயகர் அருள் வழங்குகிறார். அவரை ஒட்டியும் ஒரு பாதை. அதன் பின்னும் மலையில் ஒரு மலைப்பாதை. ஒரு பையன் சைக்கிள் எல்லாம் ஓட்டிப் போனான். சிலர் டூ வீலரிலும். ஆமா இவங்க எல்லாம் எங்கேருந்து எங்கே போறாங்க. இத்தனையையும் தாங்குதா அந்த மலை. ( ஏன்னா தாயுமானவர் ( சிவன் )  சந்நிதியைச் சுற்றிலும் ஏகப்பட்ட மண்டபங்கள், பழைய மண்டபங்கள், புது மண்டபங்கள், சந்நிதிகள், இதுல மலைக்குகைகள், ( பல்லவர் கால & பாண்டியர் கால ) குடைவரைக் கோயில்களும் நாயக்கர் கால கோட்டை ஒன்றும் இருக்காம் ! ) கர்நாடகப் போரில் இக்கோட்டை முக்கியப்பங்கு வகித்ததாம் !

இந்த முறைதான்  உச்சிப் பிள்ளையார் தரிசனம் கண்குளிரக் கிடைத்தது. அதுவும் சும்மா பத்துப் பத்துப் படியா இருக்கே. ஒரு 60. 70 படிதான் இருக்கும்னு நம்பிப் போனேன் மக்கா.. ஆனா அது ஐம்பது நூறாகி நூறு இருநூறாகி , முன்னூறாகி.. கோயில் எந்தத் திசையில இருக்குன்னே தெரியாம கண்ணைக் கட்டிருச்சு. சும்மா சுத்தி சுத்தி வளைச்சு வளைச்சுப் படியைக் கட்டி வைச்சிருக்காங்க. அதுவும் கடைசி ஐம்பது படி நிஜமாவே ஸ்லாண்டிங்கான மலைப்படி. கம்பியைப் பிடிச்சு ஏறவே கதிகலங்குச்சு. ஆனால் விநாயகர் கலக்கத்தைப் புரிஞ்சு கூட்டிட்டுப் போயிட்டார்.


மேலே  பிரகாரத்துடன் கூடிய சந்நிதி. மிக மிக அருமை. பிரகாரத்தில் ஊரே ஜொலித்தது அருமை. 






இனி கோயிலின் பெருமைகள் பற்றி கொஞ்சம் பார்ப்போம். இந்த மலை ஒரு பில்லியன் ஆண்டு (3, 400 மில்லியன் ) பழமையானது என்றாலும்  கிபி ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து இந்தக்கோயில் கட்டப்பட்டு இருக்குது. பல்வேறு காலகட்டங்களில் இதைக் கட்டியவர்கள், புதுப்பித்தவர்கள் பல்லவர், சோழர், நாயக்கர் மன்னர்கள்.


காவிரியின் கரையில் அமைந்துள்ள இது மலையும் சுற்றி கோட்டையும் கொண்டுள்ளதால் மலைக்கோட்டையாம். அதான் ராக்ஃபோர்ட்.  மலையின் உயரம் 83 மீட்டர். ஆதிசேஷனும் வாயுவுக்கும் ஏற்பட்ட சண்டையில் இமயமலையிலிருந்து பிரிந்து இங்கே விழுந்த மலைத்துண்டு இது எனக் கூறப்படுகிறது. 
பிள்ளையார் எப்பிடி வந்தார்னு சொல்லலியே. இராமாயணப் போருக்குப் பின்னால இந்தியாவுக்கு வந்த விபீஷணர் பல்வேறு ஸ்தலங்களை தரிசிச்சிட்டு இங்கே வந்தாராம். அப்போ அவர் இலங்கையில் வணங்குவதற்காக பள்ளி கொண்ட பெருமாளை இந்திரனிடம் கேட்டுப் பெற்று வந்தாராம். இங்கே வந்ததும் காலைக்கடன் கழிக்கச் செல்லும்போது அங்கே காவிரி நதிக்கரையோரம் விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனிடம் இதைக் கொடுத்துட்டுக் கீழே வைத்துவிட வேண்டாம் என்ற கோரிக்கையோடு போனாராம்.  ஆனால் அந்தக் குறும்புக்காரச் சிறுவன் – வேற யாரு நம்ப புள்ளையார்தான் J - என்னால தூக்கிட்டு இருக்க முடியாட்டி 3 தரம் கூப்பிடுவேன். வராட்டா கீழே வைச்சிடுவேன் என்று சொன்னானாம்.

இதை ஒப்புக்கொண்டு விபீஷணன் காவிரியில் கால் வைக்கக்கூட இல்லியாம். சும்னாச்சுக்கும் மூணு தபா கூப்பிட்டுட்டு உடனே ( பெருமாள் கடல் கடந்து இலங்கைக்குப் போவதை விரும்பாமல் ) அங்கேயே தரையில் வைச்சிட்டு விளையாடப் ஓடிட்டானாம். குரல் கேட்டு விபீஷணன் ஓடிவந்து பார்ப்பதற்குள் பெருமாள் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதராக நிலை பெற்று விட்டார். அவரை அங்கிருந்து அசைக்கக் கூட முடியவில்லையாம். கோபத்தில் விபீஷணன் அந்தச் சிறுவனின் தலையில் ஓங்கிக் கொட்டினாராம். அந்த வடு இன்னும் அந்த பிள்ளையார் சிலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

நாயக்கர், மராட்டியர் , இஸ்லாமியர், ஆங்கிலேயர் என்று பல தரப்பட்டவர்களின் ஆட்சியிலும் அவர்கள் நிகழ்த்திய போர்களிலும் இக்கோட்டை பங்கேற்று இருக்கிறதாம். எல்லாத்துக்கும் பிள்ளையார்தான் சாட்சி. இங்கே இருக்குற முதன்மைக் கதவுதான் மெயின் கார்டு கேட் நு பிரபலமான இடமாயிருக்கு.


பிள்ளையாரை தரிசிக்க ஏழு மணிக்குச் சென்றதால் எட்டுக்குள் கோயில் மூடிவிடுவார்கள் என்று வேக வேகமாக வேறு படியேறினோம். கீழே தாயுமான சுவாமி கோயில் எட்டரை வரை திறந்திருக்கும். அவரைப் பற்றி இன்னொரு இடுகையில் விவரிப்பேன்.

1 கருத்து:

  1. ஸ்ரீராம்.8 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 5:42
    முன்னர் எப்பவோ போனததற்கு அப்புறம் நான்கு வருடங்களுக்கு முன் ஒரு தரம் சென்று வந்தேன். படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்8 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 7:21
    அழகான கோவில். நிறைய முறை இங்கே சென்றதுண்டு. பாறைகளில் அமர்ந்து ஊரையும், காவிரியையும் பார்ப்பது ஒரு பொழுதுபோக்காக இருந்தது எனக்கு.

    பதிலளிநீக்கு

    Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University8 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 9:53
    கோயிலும், தொடர்புடைய கதையும் அருமை. பல முறை சென்றுள்ளேன். இன்று உங்கள் பதிவு மூலமாகச் செல்லும் வாய்ப்பு. நன்றி.

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam8 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 6:15
    உச்சி பிள்ளையார் கோவில் செல்லும் வழியில் ஒரு மண்டபத்தில் டெலெஸ்கோப் வைத்துநகரைக் காட்டுவார்கள்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan18 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 1:09
    நன்றி ஸ்ரீராம்.

    கொடுத்துவைத்தவர் நீங்கள் வெங்கட் சகோ

    நன்றி ஜம்பு சார்

    அப்படியா நாங்க பார்க்கலையே பாலா சார்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.