எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 24 நவம்பர், 2020

திருத்தணிகை முருகன் கோவில்.

திருத்தணிகை முருகன் கோவில்.

திருத்தணிகைக்கு இந்த முறை சென்றபோதும் ( படியில் ஏறாமல் ) வாகனப் பிரயாணப்பாதையிலேயே சென்றோம்.  அது ஒரு காலை நேரம். மிக அழகாக வடிவமைக்கப்பட்ட முகப்பு ஆர்ச்சுகள் கம்பீரமாக நம்மை வரவேற்கிறது.
திருத்தணியைப் போல வெய்யில் கொட்டிய ஊரை நான் பார்த்ததே இல்லை. சும்மா உங்க வெய்யில் எங்க வெய்யில் இல்லை. இது தந்தூரி அடுப்பு கூட இல்லை சூளையில் செங்கல்லைச் சுடும் வெய்யில். ஆமா அந்த ஊரில் எப்படித்தான் எல்லாரும் இருக்காங்கன்னே தெரியல. :(

கும்பாபிஷேகத்துக்குத் தயாராய் கோயில் ரெடி ஆயிட்டு இருக்குது.
முன் கோபுரத்தை மூடி வைச்சிருக்காங்க. புனரமைப்பு வேலைகளுக்காக.

இந்த  தலம் சூரபத்மனை வதம் செய்தபின் சினம் தணிந்து வீற்றிருப்பதால் திருத் தணிகை என அழைக்கப்பட்டு திருத்தணி என மருவி உள்ளது.
கோயில் கொள்ளை அழகு.

அதிகாலையிலேயே குளிர் தென்றல் வீச வாசமான தனித்தனிச் சந்நிதியில் பக்கம் பக்கமாக  வள்ளி தெய்வானையுடன் காட்சி தரும் சுப்ரமண்யரின் திருக்கோலம் இனிய ஆச்சர்யமாக இருந்தது.

 இந்தக் கோயிலில்தான் வித்யாசமான காவடியையும் பார்த்தேன். பலரும் பிரம்பில் கட்டிய காவடியையே குன்றக்குடி பழனி இங்கெல்லாம் தூக்கிச் செல்வார்கள்

இங்கே தோளில் ஒரு மூங்கில் குச்சியில் இருபுறமும் தொங்க விட்ட காவடியைத் தூக்கிச் சென்றார்கள். அவற்றில் மலர்கள் சுற்றி உள்ளன. அந்தப் பை நீளமாகத் தொங்குகிறது. இதற்கு மலர்க்காவடி என்று பெயராம்.
சுற்றுப் பிரகாரம் வெகு தூய்மை. கொள்ளை கொள்ளும் அழகோடு இருக்கிறது. இன்னும் விஸ்தாரமாக்கி இருக்கிறார்கள் . மூன்று நிலை முன் கோபுரம்.
இங்கே பக்கவாட்டில் புகுந்து உள் செல்லவேண்டும். கிழக்குபார்த்த சந்நிதி. மலையடிவாரத்தில் சரவணப் பொய்கை இருக்கிறது.

வள்ளி தெய்வானை, ஆபத்சகாய விநாயகர், ஆறுமுக சாமி, இன்னும் சில சந்நிதிகளும் இருக்கின்றன.
இதன் கட்டிடக்கலை சாளுக்கியர் காலத்ததாம். !

அருணகிரிநாதர் திருப்புகழிலும், திருமுருகாற்றுப் படையிலும் இத்தல முருகனைப் பற்றிப் பாடப்பட்டுள்ளது.

இது ஐந்தாம் படை வீடு.
இதன் ஸ்தலவிருட்சம் மகுட மரம். தீர்த்தம் இந்திர தீர்த்தம்.

சுப்ரமணியர்  வஜ்ராயுதம் வைத்திருக்கிறார். ஞானக் கடவுள் என்பதால் வேல் இல்லை.
ஆடிக்கிருத்திகையும் மலர்க் காவடிகளும் விசேஷம். கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் எல்லா மாநிலத்திலேருந்தும் காவடி எடுத்து வருவாங்களாம். !

இவ்வூர் மக்கள் அனைவரும் தெலுங்கும் தமிழும் பேசுகிறார்கள்.  முருகனுக்கு வெந்நீர் அபிஷேகம்., யானை வாகனத்துடன் முருகன் காட்சி அளிப்பது, நான்கு நாய்கள் ( நான்கு வேதங்களின் ரூபமாய் )  உள்ள பைரவர், ஆபத் சகாய விநாயகரை கடைசியில் வணங்கும்படி அமைத்திருப்பது, பிரசாதமாகத் தரப்படும் உரைத்த சந்தனத்தை பக்தர்கள் நோய் தீர்க்க குடிப்பது இதெல்லாம் இங்கே விசேஷம் !.

தினைப்புன வள்ளியை விநாயகர் யானை ரூபத்தில் பயமுறுத்த விருத்தன் வேடத்தில் முருகன் வள்ளியை மனமும் மணமும் கொண்ட தலம். வள்ளி தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் காட்சி அளிப்பதாலும் கோபம் தணிந்து சாந்தமாக இருப்பதாலும் இத்தலம் வெகுவாகக் கவர்ந்தது.

1 கருத்து:

 1. G.M Balasubramaniam23 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 3:06
  அறுபடை வீடுகளுள் பார்க்காத திருத்தணிக்கு ஒரு முறை சென்னையில் இருந்து ரயிலில் சென்றுவந்தோம்நினைவுகள் எல்லாம் மச மச வென்றே இருக்கிறது

  பதிலளிநீக்கு

  Thulasidharan V Thillaiakathu25 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 6:46
  படம் அட்டகாசமாக இருக்கிறது. நானும் சென்றிருக்கிறென். மலை மேல் நல்ல காற்று சூப்பரா இருக்கும் மாலை அல்லது காலையில் மற்றபடி கீழே வெயில் கடுமைதான்...டிசம்பர் ஜனுவரி தவிர...

  அது சரி முருகன் தான் கூலாகித்தானே இங்கே இருக்கார் அப்புறம் ஏன் ஊர் மட்டும் இந்த தகிப்போ!! ஹா ஹா ஹாஅ ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு

  Thenammai Lakshmanan30 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 7:09
  சில கோவில்கள் எனக்கும் அப்படித்தான் பாலா சார்

  நன்றி துளசி சகோ & ஹாஹா உண்மைதான் கீத்ஸ். :)

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

நரசிம்ம ஜெயந்திக் கோலங்கள்

   நரசிம்ம ஜெயந்திக் கோலங்கள்