எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 23 டிசம்பர், 2020

திருக்கடையூரில் அப்பா அம்மாவின் விஜயரத சாந்தி - 1 .

திருக்கடையூரில் அப்பா அம்மாவின் விஜயரத சாந்தி - 1 .

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் அபிராமி சந்நிதியில் நித்தமும் ஆயுஷ்ஹோமங்கள், ம்ருத்யுஞ்செய ஹோமங்கள், உக்ரரத சாந்தி, சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, விஜயரத சாந்தி, சதாபிஷேகம் என ஒரே கோலாகலம்தான். கனகாபிஷேகம் , மகுடாபிஷேகம் ஆகியனவும் இருக்கலாம் தெரியவில்லை.

கோவிலின் பிரகாரமெங்கும் பிறந்த நட்சத்திரம் கொண்டாடும் தம்பதிகள்.

மார்க்கண்டேயனின் பதினாறாம் வயதின்போது அவருக்கு ஆயுள் முடிந்துபோக எமன் கவர்ந்து செல்ல வருகிறார். அப்போது மார்க்கண்டேயர் சிவனுக்கு பூஜை செய்து சிவலிங்கத்தை வாரியணைக்க அதிலிருந்து சிவன் தோன்றி எமனை எட்டி உதைத்து மார்க்கண்டேயரை சிரஞ்சீவி ஆக்கினார் என்பது ஸ்தல வரலாறு.  இவர் கால சம்ஹார மூர்த்தியாகவும் எழுந்தருளி இருக்கிறார். இதனால் இங்கே இந்த ஹோமங்கள் , சாந்திகள் செய்வது சிறப்பு.

அமிர்தமே லிங்கமாக அமைந்ததால் இங்கு இருக்கும் மூலவர் அமிர்த கடேஸ்வரர், அமிர்தலிங்கேஸ்வரர். அம்மை அபிராமி. அம்மனின் எழிலில் மூழ்கியிருந்த அபிராமி பட்டர் அமாவாசையை பௌர்ணமி என்று அரசனிடம்  கூறிவிட்டார். அதனால் அபிராமியை அந்தாதியால் பாட அவள் தன் தாடங்கத்தை எறிந்து அமாவாசையை பௌர்ணமியாக்கிய திருத்தலம். இன்னும் பல்வேறு சிறப்புக்களும் உண்டு.

இங்கே சென்ற ஆண்டு அம்மா அப்பாவின் 75 ஆவது பிறந்தநாள் விழா நடந்தது. நான், அப்பா, அம்மா மூவர் மட்டுமே சென்றுவந்தோம். அந்நிகழ்வின் தொகுப்பாக இப்புகைப்படங்களைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

இங்கே நவக்ரஹ சந்நிதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  ஸ்தலவிருட்சம் வில்வம். தீர்த்தம் அமிர்த புஷ்கரணி, கால தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், மூவர் தேவாரம் பாடிய திருத்தலம்.  ( மாணிக்கவாசகர் பாடவில்லை ).

கோவில் வாசலில் வேதியர் கூறியபடி  முதலில் மாலை மாற்றிக் கொண்டார்கள் அப்பாவும் அம்மாவும்.




வேழமுகனிடம் ஆசீர்வாதம்.

திருக்கடையூர் கோவில் கோபுரம் உட்புறம். ஐந்துநிலை இராஜகோபுரம்.
முதலில் கஜபூஜை.
அதன்பின் கோபூஜை.

காராம்பசுவுக்கு தீபஹாரத்தி. முப்பத்து முக்கோடி தேவர்களும் இவளிடம் உறைந்திருப்பதாக ஐதீகம்.

கோவிலின் உள் சுற்றில்.

காலசம்ஹார மூர்த்தியின் சந்நிதி எதிரில் கும்பங்களும் ஹோம திரவியங்களும்.

அப்பாவும் அம்மாவும் மனையில்.

நானும். :)

ஹோம சமித்துக்கள்.


முதலில் விநாயகர் அனுக்ஞை பூஜை . நவக்ரஹமில்லாவிட்டாலும் நவக்ர ஹோமம், ஆயுஷ் ஹோமம் செய்யப்படுகிறது.

பிரதிக்ஞை.

அர்ச்சனை.





ஹோமம் பூர்த்தியாகி பூர்ணாகுதி ஆனபின் தீபஹாரத்தி.

அக்கம் பக்கமும் பூஜை, மக்கள் வெள்ளம்.

நீங்களும் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ளுங்கள். அனைவரும் ஷேமமாய் இருக்க வேண்டும். பூமியெங்கும் புதுமழை பெய்ய வேண்டும்.


அடுத்து அபிஷேகமும் பரிவட்டமும் அடுத்த இடுகையில் தருகிறேன். அப்பா அம்மாவிடம் அன்று மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆசி வாங்கி இருப்பார்கள். :)

1 கருத்து:

  1. ஸ்ரீராம்.24 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:21
    அப்பா அம்மாவுக்கு என் நமஸ்காரங்கள்.

    நானும் இங்கு சிலமுறை சென்று வந்துள்ளேன்.

    பதிலளி

    கோமதி அரசு24 மே, 2019 ’அன்று’ முற்பகல் 8:19
    உங்கள் அம்மா, அப்பாவிடம் நாங்களும் ஆசீவாதம் பெற்றுக் கொள்கிறோம்.
    படங்கள் தெளிவாக, அழகாய் இருக்கிறது.

    //நீங்களும் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ளுங்கள். அனைவரும் ஷேமமாய் இருக்க வேண்டும். பூமியெங்கும் புதுமழை பெய்ய வேண்டும்.//
    நாங்களும் கண்ணில் ஒற்றிக் கொண்டோம்.
    புதுமழை பெய்ய வேண்டியது மிகவும் அவசியம்.
    நல்ல வேண்டுதலை நிறைவேற்றுவாள் அன்னை அபிராமி.

    பதிலளி

    மாதேவி24 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 3:25
    அப்பா அம்மாவை வணங்குகிறேன்.

    பதிலளி

    வை.கோபாலகிருஷ்ணன்24 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 11:12
    தங்களின் பெற்றோர்கள் (பெரியோர்கள்) இருவருக்கும் என் நமஸ்காரங்கள்.

    அப்பா ஜாடை பெண்ணும், அம்மா ஜாடை பிள்ளையும் அதிர்ஷ்டமாக இருப்பார்கள் என்று சொல்லுவார்கள். கேள்விப்பட்டுள்ளேன். தாங்களும் தங்கள் அப்பா ஜாடையாக மிகவும் அதிர்ஷ்டமாகவே உள்ளீர்கள். பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

    பதிலளி

    viet nguyen26 மே, 2019 ’அன்று’ முற்பகல் 9:54
    This article is truly wonderful

    Vietnam Package Tour

    பதிலளி

    Thenammai Lakshmanan3 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 11:58
    நன்றி ஸ்ரீராம்

    கோமதி மேம் நீங்கள் கூறியபடி அன்று மழைபொழிந்தது . மிக்க நன்றி மேம் :)

    நன்றி மாதேவி

    அஹா !! நன்றி வைகோ சார் :)

    நன்றி ப்ரிமியம் ட்ராவல் வியட்நாம். :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

நவக்ரஹக் கோலங்கள்.

 நவக்ரஹக் கோலங்கள்.