எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 9 டிசம்பர், 2020

காளிக்கூத்தும் இரண்ய மல்யுத்தமும் இரண்ய சம்ஹாரமும்.

காளிக்கூத்தும் இரண்ய மல்யுத்தமும் இரண்ய சம்ஹாரமும்.

தில்லைக்காளி, திருவாலங்காட்டுக் காளி, எல்லைக்காளி எல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். இங்கே இரணிக் காளியை தரிசிப்போம் வாருங்கள். இரணியூரில் தனிக்கோயில் கொண்டுள்ள அவள் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவி கோவிலில் சிற்பத் திருமூர்த்தமாக அருள் பாலிக்கிறாள்.

அவளின் எல்லையில்லாக் காளிக்கூத்து காலந்தோறும் இங்கே நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. கூத்தனுக்கு நிகரானவள் காளி. அதனால் அவள் இரணியூரில் நிகழ்த்தும் கூத்தும் அதி அற்புதமானது. அதை உணரவும் தரிசிக்கவும் இங்கே கட்டாயம் வாருங்கள்.
கடுகிச் செல்லும் வாயுபகவான். கிழக்குப் ப்ரகாரத்தின் சுற்றில் குபேரனிலிருந்து புகைப்படம் எடுத்துள்ளேன். எதிர்பாராத ஆச்சர்யங்கள் கிடைத்தன. அவை பின் தொடர்கின்றன.

ரதிதேவியும் மன்மதனும்.
ஃப்ளாஷ் லைட்டில்.
இதோ இரண்ய மல்யுத்த சிலை.

நரசிம்மரின் முகத்தைப் பாருங்கள்.எவ்வளவு உக்கிரம்.

பக்கவாட்டுத் தூணிலும் இரண்ய வதம்.


நடுவில் சஞ்சீவி மலையோடு நேயமிக்க ஆஞ்சநேயர்.

அவருக்கு எதிரிலேயே யுத்த கோலத்தில் ராமபிரான்.

கிழக்கு வாயிலுக்கு இப்புறம் பக்கவாட்டுத் தூணிலும் இரண்ய மல்யுத்தம். தொடர்கிறது. அந்தி சாய இரண்ய சம்ஹாரமும் நடைபெறுகிறது.

எவ்வளவு உக்கிரம். இரணியனைத் தொடையில் வைத்துப் பிளக்கும் நரசிம்மரின் உக்கிரக் கோலமும் பதினாறு கரங்களையும் பார்த்து விதிர்த்தேன்.

எங்கெங்கும் சிம்மத்தின் கர்ஜனை. கிழக்கு வாயிலிலும். பாருங்கள். இரட்டைத் தூண்களில் யாளிகளாகக் கர்ஜிக்கும்  சிம்மங்கள்.

எங்கெங்கு நோக்கினும் சிம்மமடா.

வெளிப்புற கிழக்குத்தூண்களில்  சாந்தமளிக்கும் கல்யாண சுந்தரர்.

இன்னும் தணிக்கும் வருணன்.

நித்ய சாந்த ஸ்வரூபியான மகாவிஷ்ணு. இவரேதானா நரசிம்மர். !
பக்கம் பிளிறும் நரசிம்மம்.
கடவுட்காட்சிகள் அற்புதம். உள்ளே அசைந்தாடிக் கொண்டிருக்கிறது நரசிம்மம். வேளை வரும்போது எதிராளியையும் கிழித்து நம்மையும் கிழிக்கிறது.

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1. அஷ்ட பைரவர்களும் 108 உக்கிர பைரவர்களும்.

2. துர்க்கை உள்ளே லெக்ஷ்மி வெளியே.

3. இராசிகளை ஆளும் இரணியூர் நீலமேகப் பெருமாளும் கனகவல்லித் தாயாரும். 

4. ஊருணிகள் - திருக்கோயில் புஷ்கரணிகளும் தாமரை பூத்த தடாகங்களும்.

5. இரணிக்கோயில் கோபுரங்களும் திருச்சுற்று மதிலில் பள்ளிகொண்டபெருமாளும் நான்முகனும். 

6. இரணிக்கோயில் படிச்சிற்பங்கள்.

7. இரணிக்கோயில் தூண்சிற்பத் திருமூர்த்தங்கள்

8. விருத்தன் திருமணமும் விடையேறு பாகன் திருவிளையாடல்களும். 

9. காமதேனுவும் கீதோபதேசமும் பட்டாபிஷேகமும்.

10. இரணியூரில் குபேர ஹோமமும் பச்சைக் குங்குமமும்.

11. இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவியம்மன் கோவில்.

12. வயலினும் வீணையும் மீட்டும் கோபிகைகள்.



1 கருத்து:

  1. கிருஷ்ண மூர்த்தி S8 ஜனவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 12:08
    இரணியூர்க் கோவில் படங்களை பார்த்தபோது நேரில் சென்றுவந்த உணர்வே மிகுந்தது. சிறுவயதில் போய்வந்தது, சில உறவினர்களும் அங்கிருந்தது என நினைவுகள் சுழல்கின்றன.

    பதிலளி

    Thulasidharan V Thillaiakathu8 ஜனவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 4:29
    அழகான கோயில் சிற்பங்கள். படங்கள் நன்றாக இருக்கின்றன. படம் எல்லாம் எடுக்க அனுமதிக்கின்றனரா? பரவாயில்லையே சில கோயில்களில் அனுமதிப்பதில்லை ..புதியதொரு கோயில் பற்றி தெரிந்து கொண்டோம்..

    கீதா

    பதிலளி

    வெங்கட் நாகராஜ்8 ஜனவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 10:02
    சிற்பங்கள் அனைத்தும் அழகு.

    பதிலளி

    Thenammai Lakshmanan6 பிப்ரவரி, 2019 ’அன்று’ முற்பகல் 5:51
    நன்றி கிருஷ்ணமூர்த்தி சார்

    நன்றி துளசி சகோ ஆம் அனுமதிக்கிறார்களோ இல்லையோ ஒன்றும் சொல்வதில்லை. :) & கீத்ஸ்

    நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.