செவ்வாய், 29 டிசம்பர், 2020

பெங்களூரு செட்டி முருகன் கோவில்

பெங்களூரு செட்டி முருகன் கோவில்

பெங்களூரு ராயல் கவுண்டி லேஅவுட்டில் அமைந்துள்ளது இந்த செட்டி முருகன் கோவில். பெங்களூருவில் பொதுவாக நிறைய சுப்ரமண்ய சுவாமி கோவில்கள் உள்ளன என்றாலும் இது ( காட்டன் பேட் இல் உள்ளதா என்று வேறு குழப்பம் எனக்கு ) ஏனெனில் சென்றது 2012 ஆம் ஆண்டு.

போஸ்ட் போட்டுவிட்டேன் என நினைத்து ப்லாகர் டாஷ்போர்டிலும் ப்லாகிலும் தேடினாக் கிடைக்கலை. எனவே இப்போது பகிர்வதால் நிறைய மறந்துவிட்டது. எனிஹௌ இது பெங்களூரில்தான்பா இருக்கு.

கர்நாடகாவில் குக்கி சுப்ரமண்ய சுவாமி கோவிலில் இருந்து கிட்டத்தட்ட பெங்களூருக்குள்ளேயே 30 முருகன் கோவிலாவது இருக்கும்போல் தெரிகிறது. ஒன்றிரண்டு கோவிலை நான் தரிசித்திருக்கிறேன்.

இங்கே செட்டி முருகன் கோவிலில்  பால்குடம், பங்குனி உத்திரம் ஆகியன ஸ்பெஷல். தினப்படி ஆறுகால பூஜை வழிபாடு நடக்கிறது. குடியிருப்புக்களை ஒட்டி இருக்கிறது இது.

இதன் எதிரே ஒரு பக்கம் நிறையப் புல்வெளியும் பூந்தோட்டங்களுமாக இருக்கிறது.

சில்க் போர்டில் இருந்து  ஆட்டோவில் சென்றோம். குழந்தைகள் சொல்வது மாதிரி பெரிய்ய்ய பாலம் வந்தது. அப்புறம் கோவில் வந்தது அம்புட்டுத்தான் ஹாஹா.


எனவே இன்று மூன்று மணி நேரம் தேடி இது சில்க் போர்டில் இருந்து 9 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பார்ப்பன அக்ரஹாரத்தில் கோயில் கொண்ட முருகனாகத்தான் இருக்கவேண்டும் என மேப் போட்டு யூகித்து எழுதி உள்ளேன்.


யார் கட்டினார், எப்போது என்ற தகவலெல்லாம் அப்போது எழுத நினைத்தது.

இப்போது சுத்தமாக கொத்தில்லா.ஹ்ம்ம்.


இங்கே முருகன்  வள்ளி தெய்வானை, சிவன் அம்பாள், விநாயகர், பைரவர் ஆகியோரும் கோயில் கொண்டிருக்கிறார்கள்.

கருவறையின் முன் மயில்கள். பிரணவ மந்திரம்.


பெங்களூர் வாழ் நகரத்தார்கள் திருப்பணி செய்திருக்கிறார்கள்.


இது அலுவலகம். இங்கே மாதாந்திர கார்த்திகை, சஷ்டிவிழா பற்றிய தகவல்கள் எல்லாம் போர்டில் குறித்து வைத்திருக்கிறார்கள்.குடிகளோடு குடிகளாகக் குடியிருக்கும் செட்டி முருகனை ஒரு தரம் தரிசித்து வாருங்கள்.

முருகா... முருகா...

அழகென்ற சொல்லுக்கு முருகா - உந்தன்
அருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற)

சுடராக வந்த வேல் முருகா - கொடுஞ்
சூரரைப் போரிலே வென்ற வேல் முருகா
கனிக்காக மனம் நொந்த முருகா - முக்
கனியான தமிழ் தந்த செல்வமே முருகா (அழகென்ற)

ஆண்டியாய் நின்ற வேல் முருகா - உன்னை
அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா
பழம் நீ அப்பனே முருகா - ஞானப்
பழம் உன்னை அல்லாது பழம் ஏது முருகா (அழகென்ற)

குன்றாறும் குடி கொண்ட முருகா - பக்தர்
குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா
சக்தி உமை பாலனே முருகா - மனித
சக்திக்கே எட்டாத தத்துவமே முருகா (அழகென்ற)

பிரணவப் பொருள் கண்ட திரு முருகா - பரம்
பொருளுக்கு குருவான தேசிகா முருகா
ஹரஹரா ஷண்முகா முருகா - என்று
பாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா (அழகென்ற)

அன்பிற்கு எல்லையோ முருகா - உந்தன்
அருளுக்கு எல்லை தான் இல்லையே முருகா
கண்கண்ட தெய்வமே முருகா - எந்தன்
கலியுக வரதனே அருள் தாரும் முருகா (அழகென்ற)

-- நன்றி முருகனருள் வலைத்தளம்.

1 கருத்து:

  1. Thenammai Lakshmanan11 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 12:04
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

தமிழ்ப் புத்தாண்டுக் கோலங்கள்.

தமிழ்ப் புத்தாண்டுக் கோலங்கள். தமிழ்ப் புத்தாண்டுக் கோலங்கள்.