எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 16 நவம்பர், 2020

திருச்சி தாயுமானசுவாமி கோயில்.

திருச்சி தாயுமானசுவாமி கோயில்.

தாயுமான சுவாமிகள் கோவில்.

தாயுமான சுவாமி கோவிலுக்கு முன்பே ஒருமுறை சென்றிருக்கிறோம். எனது உறவினர் ஒருவருக்குக் குழந்தை பிறந்தவுடன் இங்கே வாழைப்பழத்தாரை வேண்டுதலாக அளித்தார்கள். அதை ஒரு கயிறில் கட்டி ஆட்டி தீபம் காட்டி திரும்ப எங்களுக்கே அளித்தார்கள். அதில் இருந்த வாழைப்பழங்களை அங்கே படியேறி வந்தவர்களுக்குப் பிரசாதமாக அளித்தபடியும் நாங்களும் எடுத்துக்கொண்டு திரும்பினோம்



பல்லவர், சோழர் கால குகைகள் உள்ளன. சிராப்பள்ளிக் கோட்டையின் மேல் அமையப்பெற்ற கோவில் இது. படிகளின் வழியிலேயே பிள்ளையார், சிவன் ஆகியோருக்கு மடம் சார்ந்த கோயில்களும் உள்ளன. கீழே அலுவலகத்தில் காவல் அதிகாரியிடம் பதிந்துகொண்டுதான் செல்லணும். இரவு எட்டரையிலிருந்து ஒன்பதுக்குள் மேலே மணியும் விசிலும் ஒலிக்கிறது. அதன் பின் கோயிலில் இருந்து அனைவரும் இறங்கி வந்துவிட வேண்டும்.



கீழே மாணிக்க விநாயகரும் மேலே உச்சிப் பிள்ளையாரும் பெற்றோருக்குக் காவலாய் இருக்கிறார்கள். 258 படிகள் கடந்து சென்றால் தாயுமான சுவாமி கோவில் வருகிறது. யம்மா என்ன பிரம்மாண்டமான சந்நிதிகள், மண்டபங்கள். மலை மேல் எப்படித்தான் கட்டினார்களோ. அம்மன் சந்நிதியைச் சுற்றிப் புது மண்டபம் எழுப்பப்பட்டு புதுப்பிக்கப்பட்டதுபோல் இருக்கிறது. சன்னிதியைச் சுற்றிக் காற்று அள்ளுகிறது. மீனாட்சி சுந்தரேசுவரர் சன்னிதியும் இருக்கிறது. நவக்ரகங்கள் அனைத்தும் கிழக்குப் பார்த்து இருக்கின்றன.



முப்பெரும் தேவியர்.



.பிரசவ வேதனையில் இருந்த ஒரு பெண்ணுக்கு அவளது தாய் ( தனதத்தன் என்ற வணிகனின் மனைவி ரத்னாவதி ) காவிரியின் அக்கரையில் இருக்கும் ஒரு ஊரில் இருந்து வரவேண்டும். பிரசவ வேதனையில் அவள் ஈசன் பெயரை இடைவிடாது அழைத்துக் கொண்டிருக்கிறாள். வெள்ளம் காரணமாக தாய் வர இயலாது போகிறது. கல்லும் கரையும் ரத்னாவதியின் அழைப்பைக் கேட்டு இறைவனே தாய் உருவில் வந்து பிரசவம் பார்த்ததால் இங்கே குடி கொண்டிருக்கும் ஈசன் தாயுமானவராக வணங்கப்படுகிறார். வெள்ளம் வடிந்து தாய் வந்தபின் தான் இருவருக்கும் விபரம் தெரிகிறது. நினைக்கும்போதே மெய்சிலிர்க்கிறது அல்லவா.



இது தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். சம்பந்தர், அப்பர்,அருணகிரியார், தாயுமானவர்,சைவ எல்லப்ப சுவாமிகள், ஐயடிகள் காடவன் கோன் ஆகியோர் இத்தல ஈசனைப் புகழ்ந்து பாடி இருக்கிறார்கள்.  தீர்த்தம் பிரம்ம தீர்த்தம். ஸ்தலவிருட்சம் வில்வம். மூலவர் தாயுமான சுவாமிகள்/தாயுமானேஸ்வரர்/மாத்ருபூதேஸ்வரர், தாயார் மட்டுவார்குழலம்மை/சுகந்தகுந்தளாம்பிகை. இறைவனுக்கு செவ்வந்தி நாதர் என்ற பெயரும் வழங்கப்படுகிறது.



இராக்கால பூஜைக்குச் சென்றிருந்தோம். இன்னும் நாதஸ்வரம் மேளம் எல்லாம் வாசித்து ( பல  கோவில்களில் நகாராதான் )  தேவாரம் எல்லாம் பாடி மிக ஆத்மார்த்தமாக பூஜை செய்தார்கள். எங்களுக்கும் இந்த முறை சுகப் ப்ரசவம் ஆகவேண்டும் என்று யாரோ வேண்டிக்கொண்டு பூஜை செய்த வாழைப்பழம் கிடைத்தது.



கோயிலைச் சுற்றி இரு சக்கர வாகனங்கள், வண்டிகள் செல்லும் பாதையும் பல்வேறு கடைகளும் மலைமேல் இருக்கின்றன. ! தாயுமான சுவாமிகள் வாழ்ந்த இடம் இது என்கிறார்கள். 

மிக அற்புதமான கோயில் தரிசனம் முடித்து இறங்கினோம். மாணிக்க விநாயகர் சன்னிதி இன்னும் ஜொலித்துக் கொண்டிருந்தது. தீபாராதனை பார்த்துவிட்டுத் திரும்பினோம்.

1 கருத்து:

  1. G.M Balasubramaniam13 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 2:59
    தாயுமானவர் சன்னடிக்கு போகும் போது விதானத்தில்கற்சங்கிலிகள் தொங்குவது அக்கால சிற்பவேலைகளுக்கு எடுத்துக்காட்டு மேல் விதானத்தில் வரையப்பட்ட ஓவியங்களும் அழகு

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan18 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 1:14
    அடடா அதை எல்லாம் சரியாகக் கவனிக்கவில்லையே பாலா சார் :(

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.