உலாவந்த காசி ஈசன்.
காசியிலிருந்து உலா வந்த 400 கிராம் ( 3 1/2 கிலோ தங்கத்திலாலான ) சொர்ணலிங்கேஸ்வரரைப் பற்றி முன்பே ஒரு இடுகை வெளியிட்டிருக்கிறேன். மானகிரிக்கு வந்திருந்தபோது அங்கே சென்று எடுத்த இன்னும் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளேன்.
காசி நகர சத்திரத்தில் சொர்ணத்திலாலான விசாலாக்ஷி சமேதராய் 2011 இல் இருந்து காட்சி அளிக்கிறார் சொர்ணலிங்கேஸ்வரர்.
இங்கே சம்போ பூஜை பிரசித்தம். தீபாவளிஅன்று லட்டுத் திருவிழா காண கூட்டம் அலைமோதும். இங்கே இறந்தால் முக்தி என்பதால் இந்தச் சத்திரத்துக்குச் சென்று (ஆன்மவிடுதலை அடைய எண்ணி) முதியவயதினர் சிலர் பல்லாண்டுகளாகத் தங்குவதும் உண்டு.
பக்கத்திலேயே காசி விசுவநாதர் கோயிலும் தஸஸ்வமேத யாகக் கட்டமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
76 நகரத்தார் ஊர்களுக்கும் 9 நகரத்தார் கோயில்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
விபூதிப்பட்டை வைரத்திலும் மேலே காவல் செய்யும் நாகத்தின் மேல் சிவப்புக் கற்களும் வாயிலிருந்து தொங்கும் பச்சைக் கற்களும் சிவனைச் சுற்றித் தங்கம் பிடித்த ருத்ராக்ஷ மாலை அணிவிக்கப்பட்டிருப்பதும் வெள்ளி பீடத்தில் பதிக்கப்பட்டிருப்பதும் சிறப்பு.
லிங்கத்தின் சிரசில் சூரிய சந்திரரும், கங்கையும் கூட பொறிக்கப்பட்டுள்ளார்கள்.
நாகம் வளைத்து நிற்கும் ஆவுடையார் கண்கவரும் வகையில் செதுக்கப்பட்டுள்ளார். (தேவதாரு மரத்தில் செய்யப்பட்ட ஆவுடையார் நாகாபரணம் அணிந்தது போன்று தங்கக் கவசம் கொண்டு செதுக்கப்பட்டுள்ளார். )
குண்டலினி சக்தி மேலெழும்பும் தியானநிலையில் செதுக்கப்பட்டுள்ள சிவலிங்கத்தைத் தரிசித்தல் சிறப்பும் பெரும்பேறும் ஆகும். 2011 மார்ச்சில் உலாவந்த இவ்வீசனை ஆறரை ஆண்டுகள் கழித்து ( பழைய லேப்டாப் புகைப்படங்களில் ) கண்டு மகிழ்ந்தேன்.

Thenammai Lakshmanan31 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 12:04
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!
பதிலளிநீக்கு
G.M Balasubramaniam1 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 4:01
2004ம் ஆண்டு காசிக்குச் சென்றோம் அப்போது இது பிரதிஷ்டை ஆகி இருக்கவில்லை என்று தெரிகிறது