காவடியாம் காவடி. கந்தவேலன்காவடி.
தைப்பூசத்துக்குப் பழனி முருகனிடம் ப்ரார்த்தனை செய்துகொண்டு காவடி எடுப்பவர்கள் காரைக்குடியில் அநேகம் பேர். சுமார் 70 காவடிகளாவது வருடா வருடம் புறப்படும். பழனிக்கு போற ஐயா வீடு என்றும் அரண்மனைச் சிறுவயலார் வீடு என்றும் சொல்லப்படக் கூடிய ஒருவரின் இல்லத்தில் இந்தக் காவடிகள் வருடம் முழுமையும் பாதுகாக்கப்படும். தைப்பூசத்துக்கு 20 நாட்கள் முன்பு தமிழகத்திலும் அயல் மாநிலங்களிலிருந்தும், அயல் தேசத்தில் இருந்தும் பக்தர்கள் காவடி எடுக்க வேண்டிக்கொண்டு இவர்கள் இல்லத்தில் பெயர் பதிந்து வைப்பார்கள்.
தைப்பூசத்துக்கு இருபது நாட்கள் முன்பு பழனிக்குப் போற ஐயா வீட்டிலிருந்து காவடியை எடுத்து வந்து ( அவை வில் போல தனியாக இருக்கும். அவர்கள் இன்னும் பலவற்றைத் தனித்தனியாகக் கொடுப்பார்கள். நாம்தான் அந்த பேஸ், வில், காவடித் துண்டு போர்த்தி மயில் தோகை, பக்கவாட்டில் விநாயகர் எல்லாம் கட்ட வேண்டும். ) நல்ல உறுதியான நூல் கயிறு கொண்டு பிரம்புப் பட்டையில் வில்லாக வளைத்த காவடியில் அனைத்தையும் பொருத்திக் கட்டுவார்கள். இதைக் கட்டுமுன்பு வைராகியிடம் பூசை செய்து தீபம் காட்டி அதன் பின் கட்டுவார்கள். ( சிலர் வீட்டில் எடுத்து வந்து காவடி பூசை செய்து தீபதூபம் ஆராதனை செய்து ஊரோடு அனைவரையும் அழைத்து பூசைச் சாப்பாடு போடுவார்கள் ) . மாலையில் பானக பூசை நடக்கும். அதன் பின் வீட்டில் சொல்லிக் கொண்டு காவடியை எடுத்து வந்து சிவன் கோயிலில் வைப்பார்கள்.( தாயார் அல்லது மனைவி மெயின் வாசல் நடையிலும் சாமிவீட்டிலும் நடுவீட்டுக் கோலமிட்டுக் குத்து விளக்கேற்றி நடையில் ஸ்லேட்டு விளக்கு வைத்து அதன் முன் காவடியோடு நிற்க வைத்து ஆலாத்தி எடுத்து விபூதி பூசி அனுப்புவார்கள். )
சிலர் நகரச் சிவன் கோவிலிலேயே கட்டுவதும் உண்டு. காவடி கட்டுவதற்கென்று உள்ள நியமயங்கள் பல கடைப்பிடிக்கப்படுகின்றன . இங்கே சிவன் கோயில் பிரகாரத்தில் மயில் மேல் வீற்றிருக்கும் சுப்ரமண்யர் முன்பு காவடி கட்டுகிறார்கள். அநேகர் வெல்லக் காவடி கட்டுவதால் ( பழனி சென்றபின் செய்யப்படும் பஞ்சாமிர்தத்தில் இதைச் சேர்ப்பார்கள் ) சின்னச் சின்ன செம்புகளில் வெல்லத்தைக் கிட்டித்து வைராகியைக் கூப்பிட்டு தீப தூபம் போடச் செய்து அதைத் துணி வைத்துக் கட்டி காவடியின் இருபுறமும் இறுக்கக் கட்டுகிறார்கள்.
முதலில் விக்னம் தீர்க்கும் விநாயகரைக் கட்டுகிறார்கள். காவடிகள் விக்னமில்லாமல் சென்றுவர விநாயகரின் அருள் காவடிக்குக் கிட்டுகிறது.
அதன்பின் துணி போர்த்தி இழுத்து இறுக்கிக் கட்டி இருபுறமும் மயில்தோகை கட்டப்படுகிறது.
சுப்ரமணியர் முன்பு வரிசையில் அடுக்கப்பட்ட காவடிகள்.
நகரச் சிவன் கோயில் தூணிலேயே காட்சி தரும் பழனி தண்டாயுதபாணி
கட்டிய காவடிகளின் மேல் அனைவரும் பிரசாதங்களை நேர்ந்துகொண்டு வைக்கின்றார்கள்.
காலண்டர் , டைரி, பழங்கள், பிஸ்கட்டுகள், பைகள், மிட்டாய், சாக்லெட்டுகள், வேஃபர்ஸ், துண்டுகள், இனிப்புகள், கூல்ட்ரிங்க்ஸ் என எண்ணிலடங்காத பொருட்களை காவடியில் வைப்பதாக வேண்டிக் கொண்ட பொதுமக்கள் வைக்கிறார்கள்.
பொருட்களால் நிரம்பும் காவடி.
கந்தவேலன் பாமாலை என்றொரு பாடல் தொகுப்பு உண்டு.
அதில் கந்தப் பலகாரம் என்ற பாடலில்
ஆண்டிமேல் ஆசையாய் ஓடயிலே
நல்ல ஆகாரம் சேருது கூடையிலே
என்ற பாடல் என்னைக் கவர்ந்தது.
வேல்வேல் முருகா வேல்முருகா-வடி
வேல்வேல் முருகா வேல்முருகா
வேல்வேல் முருகா வேல்முருகா-வடி
வேல்வேல் முருகா வேல்முருகா
ஆண்டிமேல் ஆசையாய் ஓடையிலே-நல்ல
ஆகாரம் சேருது கூடையிலே
பக்தியாம் பசிவெறி போதையிலே-இந்த
பலகாரம் போதுமோ பாதையிலே
கந்தனின் பூமுகம் மாவுருண்டை
அவன் காலடித் தண்டையோ முறுக்குவடை
கைகளின் கங்கணம் தேன்குழலாம்-எங்கள்
கந்தனே நெய்வழி அதிரசமாம்.
தாமரை முகங்களோ தெங்கிளநீர்-நம்மை
தாங்கிடும் கைகளோ செங்கரும்பாம்
கந்தனின் கால்விரல் தேன்கதலி-அவன்
கைவிரல் யாவுமே சீனிமிட்டாய்.
சட்டியில் வெந்ததை தின்பவரே-கந்த
சஷ்டியில் வந்ததை உண்பதற்கே
எட்டடியில் நாலடி போடுங்களே-வேல்வேல்
என்றோங்கி எல்லோரும் பாடுங்களேன்.
என்ற கந்தப் பாடலைக் கேட்டு இன்புறுங்கள்.
http://www.bhajanai.com/Recent_Added.aspx?Song_ID=M2904
அதிகரித்துவரும் காவடிகள்.
சீராக நிற்கும் காவடிகள். ஒவ்வொரு ஊரிலும் எந்த எந்த நாள் சேரும் என்று குறித்துக் கொடுத்து விடுவார்கள். அங்கே காவடி இறக்கி பூசித்தபின் உணவருந்தி உறங்குவார்கள். அதன்பின்உறங்கினாலும் உறங்காவிட்டாலும் திரும்பவும் அனைவரும் குளித்தபின் தான் காவடி எடுப்பார்கள். குளித்து பழனிக்குப் போற ஐயாவிடம் விபூதி வாங்கியபின் தான் கிளம்புவார்கள். பழனிக்குப் போற ஐயாவின் குடும்பத்தார் உடன் அத்யாவசியப் பொருட்கள் சுமந்த மாட்டு வண்டி ஒன்றும் வரும்.
பழனி சென்றதும் மூன்று நாள் தங்கி பூசை செய்து தைப்பூசத்தன்று காவடியைச் சேர்ப்பித்து அதன் பின் ஓரிரு நாட்கள் பூசை செய்து திரும்புவார்கள். தங்கள் காவடியை சிலர் அவர்களே சுமந்து திரும்புவார்கள். சிலர் மறுகாவடியைப் பிறர் வசம் ஒப்புவித்து குன்றக்குடியில் வந்து ஏற்றுக் கொள்வதும் உண்டு. ஊருக்கு வந்ததும் கோயிலில் வைத்து வணங்கி அதன் பின் வீட்டுக்குக் கொண்டு வந்து பொங்கலிட்டு வணங்கி காவடியைக் கொண்டு போய் அரண்மனைப் பொங்கலார் வீட்டில் சேர்ப்பார்கள்.
திருமுகத்தை மறக்க முடியுமா! >/b>
பழனிமலைக்கு நான் வராமல் இருக்க முடியுமா - உன்
பால்வடியும் திருமுகத்தை மறக்க முடியுமா! மறக்க முடியுமா!
ஆண்டுதோறும் ஆண்டுதோறும் பழனி வருகிறேன் - என்
ஆண்டவனே உனதருளை வேண்டி வருகிறேன்
தெய்வயாணை வள்ளியுடன் நீவருவாயா - உன்னை
தேடிவரும் எங்களுக்கு அருள்தருவாயா!
காவடியைக் கண்டவுடன் பக்தி பெருகுது - என்
கால்வலியும், மேல் வலியும் பறந்து செல்லது
கட்டிவரும் காவடியில் வீற்றிருப்பவனே - அதை
சுமந்து வரும் தோள்களுக்கு துணை இருப்பவனே!
வெற்றியுடன் எனது வாழ்வு நடைபெற வேணும் - நான்
வேண்டும் வரம் தந்து எனை காத்திட வேண்டும்
அன்னதானமடத்தினிலே கொலு விருப்பவனே! - அங்கே
ஆறுகாலு சவுக்கையிலே ஆடிநிற்பவனே!
அருளாடி வடிவினிலே நீயும் வந்திடுவாய் - உன்
அடியவர்க்கு பொன் பொருளை அள்ளித் தந்திடுவாய்
தங்கரதம் ஏறி இங்கே நீவருவாயா - பெற்ற
தாய்போல எங்களுக்கு துணை இருப்பாயா
லெ.சோமு. பெங்களூர்

கணவர்களுக்குத் துணையாக மனைவிகளும் விரதத்திலும் காவடி பூசையிலும் பங்கெடுக்கிறார்கள். கிட்டத்தட்ட கார்த்திகை மாதத்திலிருந்து தைப்பூசம் வரை விரதம் இருப்பவர்கள் இவர்கள்.
குடும்பத்தினர் அனைவருமே பிள்ளை பிறப்பு , கேதம் போன்ற தீட்டு இல்லங்களுக்குப் போகமாட்டார்கள். காவடி எடுப்பவர்கள் வெளிநாடுகளில் வசித்தாலும் குளிரிலும் காலை மாலை குளித்து பூசை செய்து சைவ சாப்பாடு மட்டுமே உண்பார்கள். நடைப் பயிற்சி மேற்கொண்டால்தான் காவடியைச் சுமக்க முடியும் என்பதால் அங்கே இருக்கும் ப்ளாட்ஃபாரங்களில் விடியலில் எழுந்து வெறுங்காலோடு நடை பயில்வார்கள். இளம் கணவர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் இளம் மனைவியரும் துணை நிற்கிறார்கள். இங்கே காவடி எடுத்த அநேகர் 30 , 35 வயதுடையவர்களே.
காவடிக்கு தீபம் காட்டுகிறார் வைராகி. பக்கத்தில் தாம்பாளத்தில் வெல்லமும் பித்தளைச் செம்புகளும்.
நல்ல நேரத்தில் காவடி கட்டியபின் மதிய உணவருந்திவிட்டுக் குளிக்கின்றார்கள். சுப்ரமணியருக்குப் பூசை செய்து காவடிகள் புறப்பட்டு வெளியே வரப்போகின்றன.
வில் போலும் வேல் போலும் மயில்போலும் புறப்பட்ட காவடிகள்.
அழகுக் குட்டிக்குரலில் கேட்டு மகிழுங்கள்.
சின்னச் சின்ன காவடி
சின்னச் சின்னக் காவடி செந்தில் நாதன் காவடி
வண்ண வண்ணக் காவடி வள்ளிநாதன் காவடி
அங்கும் இங்கும் காவடி அழகு வேலன் காவடி
இங்கும் அங்கும் காவடி ஏர கத்தான் காவடி
ஆட்டம் ஆடும் காவடி ஆண்டியப்பன் காவடி
பாட்டுப் பாடும் காவடி பழநி யப்பன் காவடி
முன்னும் பின்னும் காவடி முருக வேலன் காவடி
கண்ணும் மனமும் காவடி கந்த வேலன் காவடி
இரத்தினவேல் காவடி இன்ப மூட்டும் காவடி
பழநி மலைக் காவடி பஞ்சந் தீர்க்கும் காவடி
சென்னி மலைக் காவடி சேவற் கொடியோன் காவடி
தண்ணீர் மலைக் காவடி தாகம் தீர்க்கும் காவடி
பாலும் பழமும் காவடி பஞ்சாமிர்தக் காவடி
வேலும் மயிலும் காவடி வினைகள் தீர்க்கும் காவடி

நாளை கார்த்திகை.காரைக்குடி நகரச் சிவன் கோயிலில் காலையில் பத்துமணியளவில் திருப்புகழ் பாராயணம் இருக்கிறது. வாய்ப்பிருப்பவர்கள் கலந்து கொள்ளுங்கள்.
தண்ணீர் மலையான்
கந்தனுக்கு வேல் வேல் செந்தூர் வேலனுக்கு வேல் வேல்

துள்ளி விளையாடும் சின்னப் பிள்ளைமுகம் மறந்து
வெள்ளி விளையாடும் மலேயா சீமை தன்னையடைய
நாகபட்டினத்துக் கடலில் நங்கூரம் பாய்ச்சி நிற்கும்
செட்டிக் கப்பலுக்குத் துணையாம் செந்திலாண்டவனே
செந்தில் ஆண்டவனே! ஐயா! செந்தில் ஆண்டவனே!

கப்பல் ஏறுகையில் முதலில் கடல் முகம் தெரியும்
கண்களில் நீரோடு நிற்கும் மனைவிமுகம் தெரியும்
அன்னைமுகம் தெரியும் அன்புப்பிள்ளைமுகம் தெரியும்
அந்தமுகங்களிடைச் செந்தூர் கந்தன் முகம் தெரியும்
செந்தில் வடிவேலா ஐயா செந்தில் வடிவேலா
வந்தவினை தீர்க்கும் எங்கள் செந்தில் வடிவேலா!
பினாங்குத் துறைமுகத்தைக் கப்பலும் பிடித்து விட்டதையா
கப்பல் அடியினிலே கூட்டம் கண்டிடவந்திருக்கு
தண்ணீர்ப் பூமலையில் நிற்கும் தண்ணீர்மலையானே; எங்கள்
பெண்டு பிள்ளைகளைக் காக்கும் பெரிய மலையானே
தண்ணீர் மலையானே நெஞ்சின் தாகம் தீர்ப்பானே
கண்களில் நீர்வழிய நாமும் கைகள் குவிப்போமே
தைப்பூச நாளினிலே அவனும் தங்கரதமேறி
நகரத்தைப் பார்க்கத் தேரில் நகர்ந்து வந்திடுவான்
பார்க்கு மிடமெல்லாம் தமிழர் பக்திமுகம் தெரியும்
காவடி ஆடிவரும் சீனர்காலடியும் தெரியும்
கந்தனுக்கு வேல்வேல்_செந்தூர் வேலனுக்குவேல் வேல்
கடலைத் தாண்டி எடுக்கும் எங்கள் காவடிக்கும் வேல் வேல்
கந்தனுக்கு வேல் வேல் கந்தன் காவடிக்கு வேல் வேல்

-கவிஞர் மா. கண்ணப்பன்

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
டிஸ்கி:- இதையும் பாருங்க.
டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.

Thulasidharan V Thillaiakathu31 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 11:13
பதிலளிநீக்குபடங்கள் செம...தகவல்களும்.....
கீதா: நான் பாடல்களை குறித்து வைத்துக் கொண்டேன்....மிக்க நன்றி....
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan4 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 3:12
நன்றி கீத்ஸ்
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan4 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 3:14
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!