எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 13 மார்ச், 2019

ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

கோயில்களில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் திருவிளக்கு பூஜை நடைபெறும். சென்ற வருடம் காரைக்குடி கற்பகவிநாயகர் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.  நெய்வேலியில் எப்போதோ முன்பொரு முறை திருவிளக்கு பூஜையைக் கோயிலில் செய்திருக்கிறேன்.
இங்கே சென்ற வருடம்  கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. அம்மா, மாமி ஆகியோரோடு விநாயகர் சன்னதியின் எதிரில் கோலமிடப்பட்ட இடத்தில் அமர்ந்து வாழையிலையில் அட்சதை பரப்பி குத்துவிளக்கை ஸ்தாபித்து , ஐந்து முகங்களிலும் தீபமேற்றி, தண்டில் பூச்சாற்றி,  விநாயகரை மஞ்சளில் பிடித்து பிரதிஷ்டை செய்து  குங்குமம் அருகம் புல் வைத்து விக்னேஸ்வர பூஜை செய்து சோடச நாமங்களைச் சொல்லி நானாவித பத்ர பரிமள புஷ்பங்களையும் நிவேதனத்தையும் சமர்ப்பித்து வடக்கில் - யதாஸ்தானத்தில் பிரதிஷ்டாபயாமி செய்த பிறகு --  சேர்ப்பித்த பிறகு, திருவிளக்குப் பூஜையை ஆரம்பித்தோம்.

விளக்கே திருவிளக்கே, சேவித்தெழுந்திருந்தேன் ஆகியவற்றைத் தினமும் தீபமேற்றும்போது சொல்வதுண்டு. அர்ச்சகர் சொல்லச் சொல்ல இத்துடன் 108 திருவிளக்குப் போற்றியும், திருவிளக்குப் பாடல்களும் பாடி, குங்கும ( சிந்தூர ) அர்ச்சனை செய்து , வளையல்,சீப்பு, கண்ணாடி, கந்தம், சந்தனம், புஷ்பம், வஸ்த்ரம் ( ரவிக்கைத் துணி )  தீபம் தூபம் காட்டி ஆராதனைகள் செய்து பிரசாதம் சமர்ப்பித்து வணங்கி எழுந்தபோது நிறைய பாசிட்டிவ் எனர்ஜி வந்தது போலிருந்தது.

தீபத்தின் ஒளியிலும் வெம்மையிலும் மனம் ஒன்றிப் பிரார்த்தித்தபோது மனமும் உடலும் புத்துணர்ச்சி பெற்றது. நிர்மலமும் சாந்தமும் நிலவியது. :) 


108 திருவிளக்கு போற்றி


பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி
போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி
முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி
மூவுலகும் நிறைந்திருந்தாய் போற்றி
வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி
இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி
ஈரேழுலகும் ஈன்றாய் போற்றி
பிறர் வயமாகாப் பெரியோய் போற்றி
பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி
பேரருள் கடலாம் பொருளே போற்றி
முடிவில் ஆற்றல் உடையாய் போற்றி
மூவுலகும் தொழ மூத்தோய் போற்றி
அளவிலாச் செல்வம் தருவாய் போற்றி
ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி
ஓமெனும் பொருளாய் உள்ளோய் போற்றி
இருள்கெடுத்து இன்பருள் ஈந்தாய் போற்றி
மங்கள நாயகி மாமணி போற்றி
வளமை நல்கும் வல்லியே போற்றி
அறம்வளர் நாயகி அம்மையே போற்றி.
மின்னொளி அம்மையாம் விளக்கே போற்றி
மண்ஒளிப் பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி
தையல்நாயகித் தாயே போற்றி
தொண்டர்கள் அகத்தமர் தூமணி போற்றி
முக்கண் சுடரின் முதல்வி போற்றி
ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி
சூளாமணியே சுடரொளி போற்றி
இருளொழித்து இன்பமும் ஈவோய் போற்றி
அருள்மொழிந்து எம்மை ஆள்வோய் போற்றி
அறிவினிக்கு அறிவாய் ஆனாய் போற்றி
இல்லக விளக்காம் இறைவி போற்றி
இடரைக் களையும் இயல்பினாய் போற்றி
எரிசுடராய் நின்ற இறைவி போற்றி
ஞானச்சுடர் விளக்காய் நின்றாய் போற்றி
அருமறை பொருளாம் ஆதி போற்றி
தூண்டுசுடர் அனைய ஜோதி போற்றி
ஜோதியே போற்றி சுடரே போற்றி
ஓதும் உள்ளொளி விளக்கே போற்றி
இருள் கெடுக்கும் இல்லக விளக்கே போற்றி
சொல்லாக விளக்காம் ஜோதி போற்றி .

பலர்காண் பல்லக விளக்கே போற்றி
நல்லக நமச்சிவாய விளக்கே போற்றி
உவப்பிலா ஒளிவளர் விளக்கே போற்றி
உணர்வு சூழ் கடந்தோர் விளக்கே போற்றி
உடம்பெனும் மனையாக விளக்கே போற்றி
உள்ளத்தகழி விளக்கே போற்றி
மடம்படு உணர்நெய் விளக்கே போற்றி
உயிரெனும் திரிமயக்கு விளக்கே போற்றி
இடர்படும் ஞானத்தீ விளக்கே போற்றி
நோக்குவார்க்கு எரிகொள் விளக்கே போற்றி
ஆதியாய் நடுவுமாகும் விளக்கே போற்றி
அளவில்லா அளவுமாகும் விளக்கே போற்றி
ஜோதியாய் உணர்வுமாகும் விளக்கே போற்றி
தில்லைப் பொதுநட விளக்கே போற்றி
கற்பனை கடந்த ஜோதி போற்றி
கருணை உருவாம் விளக்கே போற்றி
அற்புதக் கோல விளக்கே போற்றி
அருமறைச் சிரத்து விளக்கே போற்றி
சிற்பர வ்யோம விளக்கே போற்றி
பொற்புடன் நடம்செய் விளக்கே போற்றி

உள்ளத்து இருளை ஒழிப்பாய் போற்றி
கள்ளப் புலனைக் கரைப்பாய் போற்றி
உருகுவோர் உள்ளத்து ஒளியே போற்றி
பெருக அருள் சுரக்கும் பெரும போற்றி
இருள்சேர் இருவினை எரிவாய் போற்றி
அருவே உருவே அருவுருவே போற்றி
நந்தா விளக்கே நாயகி போற்றி
செந்தாமரைத் தாள் தந்தாய் போற்றி
தீப மங்கள ஜோதி போற்றி .
மதிப்பவர் மாமணி விளக்கே போற்றி
பாகம் பிரியா பராபரை போற்றி
ஆகம முடிமேல் அமர்ந்தாய் போற்றி
ஏகமுகம் நடம்செய் எம்மான் போற்றி
ஊழிஊழி உள்ளோய் போற்றி
ஆழியான் காணா அடியோய் போற்றி
ஆதியும் அந்தமும் அற்றாய் போற்றி
அந்தமில் இன்பம் அருள்வோய் போற்றி
முந்தை வினையை முடிப்போய் போற்றி
பொங்கும் கீர்த்தி பூரணி போற்றி
தன்னருள் சுரக்கும் தாயே போற்றி..

அருளே உருவாய் அமைந்தோய் போற்றி
இருநில மக்கள் இறைவி போற்றி
குருவென ஞானம் கொடுப்போய் போற்றி
ஆறுதல் எமக்கிங்கு அளிப்பாய் போற்றி
தீதெலாம் தீர்க்கும் திருவே போற்றி
பக்தியில் ஆழ்ந்த பரமே போற்றி
எத்திக்கும் துதி ஏய்ந்தாய் போற்றி
அஞ்சேல் என்றருளும் அன்பே போற்றி
தஞ்சம் என்றவரை சார்வோய் போற்றி
ஓதுவார் அகத்துறை ஒளியே போற்றி
ஓங்காரத்து உள்ளொளி விளக்கே போற்றி
எல்லா உலகமும் ஆனாய் போற்றி
பொல்லா வினைகள் அறுப்பாய் போற்றி
புகழ்சேவடி என்மேல் வைத்தோய் போற்றி
செல்வாய் செல்வம் தருவாய் போற்றி
பூங்கழல் விளக்கே போற்றி
உலகம் உவப்புற வாழ்வருள் போற்றி
உயிர்களின் பசிப்பிணி ஒழித்தருள் போற்றி
செல்வம் கல்வி சிறப்பருள் போற்றி
நல்லன்பு ஒழுக்கம் நல்குக போற்றி
விளக்கிட்டார்க்கு மெய்நெறி விளக்குவாய் போற்றி
நலமெலாம் உயிர்க்கு நல்குக போற்றி
தாயே நின்னருள் தந்தாய் போற்றி
தூய நின்திருவடி தொழுதனம் போற்றி
போற்றி என்பார் அமரர் விளக்கே போற்றி
போற்றி என்பார் மனிதர் விளக்கே போற்றி
போற்றிஎன் அன்பொளி விளக்கே போற்றி
போற்றி போற்றி திருவிளக்கே போற்றி.




திருவிளக்கு பூஜையும் அதன் பலன்களும் - அறிந்து கொள்வோம்.

 திருவிளக்கு பூஜை செய்து வாழ்க வளமுடன்.  

 

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம்.

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.


டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

1 கருத்து:

  1. வெங்கட் நாகராஜ்21 மே, 2016 ’அன்று’ பிற்பகல் 2:50
    வாழ்த்துகள்.....

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan4 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 11:50
    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan4 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 11:50
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.