கார்த்திகை சோமவார தண்டாயுதபாணி வேல் பூசை .
891*கார்த்திகை மாதம் காரைக்குடிப் பகுதிகளில் *92* சோமவார விரதம் இருந்து வேல் பூசை செய்வார்கள். அப்போது முதலில் 893*வேலுக்கும் தண்டாயுதத்துக்கும் அபிஷேகம் நடைபெறும்.
நல்ல நேரத்தில் இந்த 894*இரு பீடங்களும் ஒன்றின்மேல் ஒன்றாகக் கிழக்கு நோக்கி வைக்கப்பட்டு அதன் மீது தண்டமும் வேலும் வைக்கப்படும். இதை ஒருவர் வைத்துப் பிடித்துக் கொள்வார். வேல் வலது புறமும் தண்டம் இடது புறமும் வைக்கப்படும்.
அம்மா வீட்டில் கார்த்திகை வேல் பூசை வருடாவருடம் நடக்கும் அப்போது எடுத்த அபிஷேகப் படங்களைப் பகிர்ந்துள்ளேன். முன்பு ஒவ்வொருவர் இல்லங்களிலும் நடைபெற்றது இப்போது அதற்கென கட்டப்பட்டுள்ள 895*பூசை வீட்டில் நடைபெறுகிறது.
896*அபிஷேகத் திரவியங்கள். பால், தயிர், எண்ணெய், ஸ்னானப் பொடி, சந்தனம், கிடாரங்காய் சாறு, சாத்துக்குடிச் சாறு, ஆரஞ்சுச் சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி என 897*பதினோறு அபிஷேகங்கள் நடைபெறும்.
அபிஷேகம் செய்ய எடுத்து வருகிறார் வருடாவருடம் இல்லத்தில் வந்து அபிஷேகம் செய்யும் மணி.
காரைக்குடிப் பக்கம் எந்த விசேஷம் என்றாலும் சங்கு ஊதி கோலம் போட்டுத்தான் ஆரம்பிப்பார்கள்.
அதே போல் இதிலும் 898* சங்கு ஊதி, 899*சேகண்டி அடித்து ஆரம்பிப்பார்கள்.
அபிஷேக திரவியங்களை சேமிக்க ஒரு அண்டாவைக்கப்பட்டுள்ளது.
முதலில் எண்ணெய்க் காப்பு.
அதன்பின் வாசனைப் பொடி/ஸ்நானப் பொடி அல்லது சீகைக்காய்.
தீபம் காட்டிய பின் பாலபிஷேகம்.
தயிரபிஷேகம்.
தீபம்.
பழச்சாறுகள்.
எலுமிச்சை, கிடாரங்காய், ஆரஞ்சு, சாத்துக்குடி.
பஞ்சாமிர்தம்.
பூமாலை வைத்து சாம்பிராணி காட்டுகிறார்.
அதன் பின் தீபம். ஒவ்வொரு அபிஷேகத்தின் பின்பும் பூ/ கதம்பம் வைத்து தீபம், தூபம் காட்டுவார்.
இளநீர்.
சந்தனம்
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!
நன்மையெல்லாம் நடக்குது..!
நன்மையெல்லாம் நடக்குது..!
அடுத்து விபூதி அபிஷேகம்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று சொல்லி சன்னதம் வந்த மணி விபூதியை வேலின்மேல் ஒரு கைப்பிடி எடுத்து அப்படியே வைக்க வேல் முழுவதும் விபூதி பிடித்துக் கொள்வது சிலிர்க்க வைக்கும் ஆச்சர்யம்.
900*விபூதிக்காப்பில் இருக்கும் வேலுக்கு தீபம் பார்த்தவுடன் அந்த விபூதி பிரசாதமாக வழங்கப்படும்.
இதன் பின் விநாயப்பானை வைக்கப்பட்டு இரண்டு வெள்ளைப் பொங்கல் வைக்கப்பட்டு அதன் பின் பூசைக்கான காய்கறிச் சமையலும் அன்னமும் செய்து படைத்துத் தீப தூபம் காட்டி அதன் பின் அன்னதானம் செய்து உண்பார்கள்.
டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University30 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 8:00
பதிலளிநீக்குவிபூதிக்காப்பும், வித்தியாசமான பூசையும் கண்டேன்.
பதிலளிநீக்கு
Nagendra Bharathi30 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 2:47
அருமை
பதிலளிநீக்கு
Thulasidharan V Thillaiakathu3 டிசம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 11:53
வித்தியாசமான பூசையாக இருக்கிறதே! இதுவரைக் கேட்டதில்லை...
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan3 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 12:57
நன்றி ஜம்பு சார். அடுத்தவருடம் அழைக்கிறேன்.
நன்றி நாகேந்திர பாரதி சகோ
நன்றி துளசி சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!