பள்ளத்தூர் அளகஞ் செட்டியார், காளியாயா ஏழூர்ப் பொதுப் படைப்பு.
மெய்யாத்தா படைப்பு வீட்டில்தான் கம்புகட்டி க்யூவில் மக்கள் சென்று பார்த்திருக்கிறேன். அதற்குப் பின் பள்ளத்தூர் அள. கா பொதுப்படைப்பு வீட்டில் மாநாடு அளவு கூட்டத்தைப் பார்த்து வியந்தேன்.
பள்ளத்தூர், பலவான்குடி, புதுவயல், , கடியாபட்டி, காரைக்குடி&தேவகோட்டை, கொத்தமங்கலம், கோட்டையூர் என்ற ஏழூரைச் சேர்ந்த இரணிக்கோவில் பங்காளிகள் 2 வருஷத்துக்கு ஒரு முறை பள்ளத்தூரில் அளகஞ்செட்டியார், காளியாத்தா பொதுப்படைப்பு படைக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் வந்து வணங்கலாம்.
படைப்பு வீட்டில் எல்லாமே பிரம்மாண்டம்.
மிகப் பெரும் படைப்பு வீடு இது. தெரு முழுக்க நாற்புறமும் கார்கள் நின்றிருந்தன. படைப்புக்கு வந்தவர்கள் பெருங்கூட்டமாக ஆங்காங்கே அமர்ந்திருந்தார்கள்.
காற்றோட்டத்துக்காக அங்கங்கே எக்ஸாஸ்ட் ஃபேன்களும் ஸ்பிலிட் ஏசிக்களும் நிறுவப்பட்டிருந்தன. திருவிழாப் போன்ற நெரிசலான கூட்டம்.
வெற்றிலைபாக்குக்கு என தனி ரூம்.
பெட்டியடிக்கு என தனி அறை.
காய்கறிக்கென்றும், மளிகைக்கென்றும் தனித்தனி அறைகள்.
தரிசிக்கும் ஆவலில் முண்டியடிக்கும் கூட்டம்.
இளைய வாலண்டியர்கள் ஆங்காங்கே கரம்கோர்த்து கூட்டத்தை நெறிப்படுத்தினார்கள்.
பத்துப் பத்துப் பேராக உள்ளே விட்டார்கள். வளவு இரண்டாம்கட்டு. இரண்டு பந்திக் கட்டுகள் எங்கெங்கும் கூட்டம்.
உள்ளே சென்று இருவரையும் வணங்கியதும் மனம் அமைதி பெற்றது. விபூதி, குங்குமப் பிரசாதமும் பாற்சோறும் வழங்கப்பட்டது.
தரிசித்ததும் வெளியே வந்து போஜன் ஹாலில் அமர்ந்து உணவருந்தினோம்.
அரிசி உப்புமா, இட்டிலி, மசாலச் சீயம், மல்லித் துவையல், அடை, அவியல், வத்தக்குழம்பு, சாம்பார்,அல்வா போன்றவை வழங்கப்பட்டன. பனங்கற்கண்டுப் பாலும் கிடைத்தது.
உப்புமாவை காசாணி அண்டாவில் கிண்டுவார்கள் என்று சொன்னார்கள். அடேயப்பா !
தாகம் தீர்க்க சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்.
பந்தியில் குசல விசாரிப்புகளும் உணவு உண்ணக் காத்திருப்போரும்.
கருப்பட்டிப் பணியாரத்துக்கு மாவு திரிக்கும் மிஷின்.
மறுநாள் உணவுக்காக தயிர் உறைய வைக்கக் காய்ச்சி வைக்கப்பட்டிருக்கும் பால்.
இது இன்னொரு பந்திக்கட்டு.
இங்கும் செம கூட்டம். போஜன் ஹாலில் அருள் பாலிக்கும் அன்னபூரணி. !
நிறைய உறவினர்களையும் அம்மா வீட்டுப் பங்காளிகளையும் பார்த்துப் பேசி வந்தோம்.
நட்பு வட்டத்திலும் பலர் வந்திருந்தார்கள். முதல் முறையாக படைப்பு வீட்டில் தொட்டில் கட்டியதையும் தாலாட்டுப் பாடியதையும் மங்கலப்பொருட்கள் பல லட்சங்கள் ஏலம் போவதையும் இங்கேயே நான் கேள்விப்பட்டேன்.
மிக அருமையானதொரு படைப்பில் கலந்து கொண்டு காளியாயா, அளகஞ்செட்டியாரின் ஆசி பெற்றோம். வாழ்க வளமுடன் அனைவரும்.
டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.
டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க.
பள்ளத்தூர், பலவான்குடி, புதுவயல், , கடியாபட்டி, காரைக்குடி&தேவகோட்டை, கொத்தமங்கலம், கோட்டையூர் என்ற ஏழூரைச் சேர்ந்த இரணிக்கோவில் பங்காளிகள் 2 வருஷத்துக்கு ஒரு முறை பள்ளத்தூரில் அளகஞ்செட்டியார், காளியாத்தா பொதுப்படைப்பு படைக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் வந்து வணங்கலாம்.
அதற்கு 5000 பேர் அளவில் கலந்து கொள்கிறார்கள். படைப்பு வீடு நிறைந்து இருக்கிறது. அன்று மூன்று வேளையும் சாப்பாடு நடந்துகொண்டே இருக்கிறது.
படைப்புப் பணியாரத்தை ( நெய்யில் ஊற்றப்படும் கருப்பட்டிப் பணியாரம் )நீண்ட வரிசையாக அமர்ந்து மகளிர் ஊற்றுகிறார்கள். பாற்சோறு போன்றவை அண்டாக்களில் சமைக்கப்படுகின்றன.
உள்ளே வளைவில் இரட்டை வீடுகள் மூன்று இணைக்கப்பட்டு அளகஞ்செட்டியார் காளியாத்தா ஆகியோருக்கான படையல்கள் சுவரில் பூக்களால் அமைக்கப்பட்டு அதன் பின் ( ஏழு வேஷ்டி துண்டுகள் ஒரு அறையிலும், ) ( ஏழு புடவை அணிமணிகள் இன்னொரு அறையிலும் ) வைக்கப்பட்டு ஏழு பள்ளயங்கள் முறையே படைக்கப்பட்டு உள்ளன.
மிகப் பிரம்மாண்டமான இப்படைப்பைக் கண்டு முன்னோர் தரிசனம் பெற கிட்டத்தட்ட 2 முதல் மூன்று மணி நேரம் வீட்டின் வளவுகளில் க்யூவில் நிற்கவேண்டி உள்ளது. ஆறு வரிசையாக க்யூவை விட்டார்கள்.
மாலையில் பள்ளயம் போட்டுப் படைக்கப்பட்டவுடன் வேண்டிக் கொண்டு குழந்தைகளுக்கான தொட்டி கட்ட டோக்கன் வாங்கியவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள். 100 டோக்கன்கள் அன்று வழங்கப்பட்டிருந்தன. ஆறு தொட்டில்கள் கட்டப்பட்டிருந்தன. இதற்கு தாலாட்டுப் பாட்டுப் பாடியும் சிலர் குழந்தைகளுக்குத் தொட்டில் கட்டினார்கள்.
இது அளகஞ் செட்டியார் என்ற மாப்பிள்ளைக்கும் காளியாயா என்ற மாமியாருக்கும் - ஆயாவுக்கும் படைக்கப்படும் படைப்பாகும். இப்படைப்புப் பற்றிய மேலதிகத் தகவல்கள் கிடைத்தவுடன் பகிர்கிறேன்.
////இன்று அளகஞ்செட்டியார், காளியார் ஏழூர் பொதுப்படைப்பு என்றொரு கட்டுரையை என் வலைத்தளத்திலிருந்து பகிர்ந்திருந்தேன்.
அது பற்றிய முக்கிய திருத்தம் . படைப்பு பரிபாலன சபைத் தலைவர் திரு. சிதம்பரம் அண்ணன் அவர்கள் திரு. வினைதீர்த்தான் அண்ணன் அவர்களும் அப்படைப்பு அழகன் செட்டியார் என்ற தங்கள் மாப்பிள்ளைக்கும், இரணிக்காளிக்கும் ( அதனால்தான் அது காளியார் படைப்பு, காளியாயா என்ற மாமியாருக்குப் படைக்கப்படுவதில்லை) படைக்கிறோம் என்று கூறினார்கள்.
இந்தத் திருத்தத்தை ஏற்று இங்கே பதிந்துள்ளேன். வலைப்பூவிலும் திருத்தம் செய்துள்ளேன்.
படைப்புப் பற்றிய விவரங்கள் கூறி ஆகஸ்ட் மாதம் நடைபெறப் போகும் படைப்புக்கு அழைத்தமைக்குத் திரு. சிதம்பரம் அண்ணன் அவர்களுக்கும் நன்றிகள். ////

இப்படைப்புப் பற்றிய சில சிறப்புத் தகவல்களில் ஒன்று மறுநாள் இங்கே மங்கலப் பொருட்கள் 50 லட்ச ரூபாய் வரை ஏலம் போகின்றன என்பதுதான்.
படைப்பு வீட்டில் எல்லாமே பிரம்மாண்டம்.
மிகப் பெரும் படைப்பு வீடு இது. தெரு முழுக்க நாற்புறமும் கார்கள் நின்றிருந்தன. படைப்புக்கு வந்தவர்கள் பெருங்கூட்டமாக ஆங்காங்கே அமர்ந்திருந்தார்கள்.
காற்றோட்டத்துக்காக அங்கங்கே எக்ஸாஸ்ட் ஃபேன்களும் ஸ்பிலிட் ஏசிக்களும் நிறுவப்பட்டிருந்தன. திருவிழாப் போன்ற நெரிசலான கூட்டம்.
வெற்றிலைபாக்குக்கு என தனி ரூம்.
பெட்டியடிக்கு என தனி அறை.
காய்கறிக்கென்றும், மளிகைக்கென்றும் தனித்தனி அறைகள்.
தரிசிக்கும் ஆவலில் முண்டியடிக்கும் கூட்டம்.
இளைய வாலண்டியர்கள் ஆங்காங்கே கரம்கோர்த்து கூட்டத்தை நெறிப்படுத்தினார்கள்.
பத்துப் பத்துப் பேராக உள்ளே விட்டார்கள். வளவு இரண்டாம்கட்டு. இரண்டு பந்திக் கட்டுகள் எங்கெங்கும் கூட்டம்.
உள்ளே சென்று இருவரையும் வணங்கியதும் மனம் அமைதி பெற்றது. விபூதி, குங்குமப் பிரசாதமும் பாற்சோறும் வழங்கப்பட்டது.
தரிசித்ததும் வெளியே வந்து போஜன் ஹாலில் அமர்ந்து உணவருந்தினோம்.
அரிசி உப்புமா, இட்டிலி, மசாலச் சீயம், மல்லித் துவையல், அடை, அவியல், வத்தக்குழம்பு, சாம்பார்,அல்வா போன்றவை வழங்கப்பட்டன. பனங்கற்கண்டுப் பாலும் கிடைத்தது.
உப்புமாவை காசாணி அண்டாவில் கிண்டுவார்கள் என்று சொன்னார்கள். அடேயப்பா !
தாகம் தீர்க்க சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்.
பந்தியில் குசல விசாரிப்புகளும் உணவு உண்ணக் காத்திருப்போரும்.
கருப்பட்டிப் பணியாரத்துக்கு மாவு திரிக்கும் மிஷின்.
மறுநாள் உணவுக்காக தயிர் உறைய வைக்கக் காய்ச்சி வைக்கப்பட்டிருக்கும் பால்.
இங்கும் செம கூட்டம். போஜன் ஹாலில் அருள் பாலிக்கும் அன்னபூரணி. !
நிறைய உறவினர்களையும் அம்மா வீட்டுப் பங்காளிகளையும் பார்த்துப் பேசி வந்தோம்.
நட்பு வட்டத்திலும் பலர் வந்திருந்தார்கள். முதல் முறையாக படைப்பு வீட்டில் தொட்டில் கட்டியதையும் தாலாட்டுப் பாடியதையும் மங்கலப்பொருட்கள் பல லட்சங்கள் ஏலம் போவதையும் இங்கேயே நான் கேள்விப்பட்டேன்.
மிக அருமையானதொரு படைப்பில் கலந்து கொண்டு காளியாயா, அளகஞ்செட்டியாரின் ஆசி பெற்றோம். வாழ்க வளமுடன் அனைவரும்.
டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.
1. ஆச்சியும் அய்த்தானும்
2. அப்பச்சியும் ஆத்தாவும்.
3. அயித்தையும் அம்மானும்.
4. ஆயாவின் வீடு.
5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.
6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES
7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )
8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )
9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING
10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )
11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )
12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.
13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI
14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.
16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3
17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.
18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5
19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.
20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.
21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8
22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9
23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10.
24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.
25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.
26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.
27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14
28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.
29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!
30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.
31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.
32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.
33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும்.
34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.
35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல்.
36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.
37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும்.
38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும்.
39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.
40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.
41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.
42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.
43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..
44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும்.
45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.
46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)
47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )
48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.
49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும்.
50. கோவிலூர் மியூசியம்.
51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-
52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.
53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.
54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.
55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.
56. திருப்புகழைப் பாடப் பாட..
57. காரைக்குடி வீடுகள். ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.
58. ஏடும் எழுத்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக் கொள்ளுதலும்.
59. இலை விருந்து. இதுதாண்டா சாப்பாடு.
60. காரைக்குடிச் சொல்வழக்கு, அந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும்.
61. காரைக்குடிச் சொல்வழக்கு. சுவீகாரம், திருவாதிரைப் புதுமைப் புகைப்படங்கள்.
62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.
63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.
64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும்.
65. காரைக்குடிச் சொல்வழக்கு. கைப்பொட்டியும் பொட்டியடியும்.
66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும்.
67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்
68. இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 )
69. தடுக்கு, கூடை, கொட்டான் முடையலாம் வாங்க.
70. மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.
71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும், அந்தக்கால எழுத்துக்களும்.
72. நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி ?!
73.அருகி வரும் காரைக்குடி வீடுகள். KARAIKUDI HOUSES.
74. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.
75. காவடியாம் காவடி. கந்தவேலன்காவடி.
76. முத்துவிலாசமும் லெக்ஷ்மி விலாசமும்.
77.காரைக்குடி வீடுகளில் ஓவியங்களும் படங்களும்.
78. காரைக்குடி வீடுகளில் இயற்கை வண்ணத்தில் முருகனும் கிருஷ்ணனும்.
79. காரைக்குடி வீடுகளில் தஞ்சை ஓவியங்களில் லெக்ஷ்மியும் சரஸ்வதியும்.
80. செட்டிநாடும் செந்தமிழும். தேனார் மாணிக்கணார் இயம்பும் அகத்திணையின் அகம் :-
81. மொய்ப்பண ஏடும் இசை குடிமானமும் கோயில் பிரிவுகளும்.
82. காரைக்குடி வீடுகளில் வரந்தை ஓவியங்கள்.
83. காரைக்குடி வீடுகள்:- முன்னோர் படைப்பும், சில திருமணச் சடங்குகளும்.
84. காரைக்குடி கலைப் பொருட்களும் கைவினைப் பொருட்களும்.
85.உத்தர ஓவியங்களும் தேக்குமரப்படிகளும், சுவற்றலமாரிகளும். :-
86. காரைக்குடிச் சொல்வழக்கு :- வாவரசியும், பெருமாளும் தேவியும்.
87. இந்த சீர் போதுமா ?!
88. புராதன வீடுகளும் புதுப்பித்தலும்
89. முயற்சி திருவினையாக்கும் திரு இராஜமாணிக்கம்.
90. சோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி. ( ஐபிசிஎன் ) .
91.தன்னம்பிக்கையின் திருவுருவம் திருமதி சீதா தேனப்பன்.
92. இனியெல்லாம் பிஸினஸே
93. தாய்மாமா வாய்ப்பது தவப்பயன்.
94. வட்டார நூல்கள் மூன்று - நூல்முகம்.
95. தலைச்சீலையில் முடிவதும், தலவு/தலைப்பு முடிவதும். - காரைக்குடி கைவேலைப்பாடு.
96.மகர்நோன்பும் மண்டகப்படியும் வாழைப்பழ மாலையும்.
99. கார்த்திகை சோமவார தண்டாயுதபாணி வேல் பூசை .
100. கானாடுகாத்தான், கடியாபட்டி, தெக்கூர், கோட்டையூர், காரைக்குடி வீடுகள்.
101. கானாடுகாத்தான் வீடுகள் செம்புறாங்கற்களும் தேக்குமரச் சிற்ப வேலைப்பாடுகளும்.
100. கானாடுகாத்தான், கடியாபட்டி, தெக்கூர், கோட்டையூர், காரைக்குடி வீடுகள்.
101. கானாடுகாத்தான் வீடுகள் செம்புறாங்கற்களும் தேக்குமரச் சிற்ப வேலைப்பாடுகளும்.
102. பழம்பெரும் வீடுகள்.
104. திருப்புகழும் உபதேசமும் சிவதீட்சையும்.
105. காரைக்குடிச் சொல்வழக்கு, பிச்சோடாவும் சித்தாடையும்.
105. காரைக்குடிச் சொல்வழக்கு, பிச்சோடாவும் சித்தாடையும்.
G.M Balasubramaniam29 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:00
பதிலளிநீக்குஉங்கள் பதிவுகள் மூலம்நகரத்தார் பழக்க வழக்கங்களைத்தெரிந்து கொள்ளமுடிகிறது ஏற்கனவே அவர்கள் வியாபாரகுணமும் தமிழ் பற்றும் கொடைத்தனமும் தெரிந்த விஷயங்கள் உங்களை நேரில் சந்தித்து இன்னும் பல செய்திகளையும் தெரிந்துகொள்ளவிருப்பம்
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan14 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 1:32
நிச்சயம் சொல்கிறேன் பாலா சார் :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!