எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 1 மார்ச், 2019

ஷரண பஸவேஷ்வரரும் கூடலசங்கம் சங்கமேஸ்வரர் கோயிலும்.

ஷரண பஸவேஷ்வரரும் கூடலசங்கம் சங்கமேஸ்வரர் கோயிலும்.


குல்பர்காவிலிருந்து பிதார் செல்லும் வழியில் பசவண்ணா அவர்கள் பிறந்த கூடலசங்கம் சங்கமேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வந்தோம். ( மாலையில் புத்தவிஹார், குல்பர்கா கோட்டையும் , மறுநாள் பிதார் குருத்துவாராவும், பிதார் கோட்டையும் சென்றுவந்தோம். )

இந்த கூடலசங்கம் கோயில் லிங்காயத் சமூகத்தினரின் புனித தல யாத்திரை இடமாக இருக்கிறது. 

////பசவண்ணா என்பவர் 12 - ஆம் நூற்றாண்டின் கர்நாடகாவின் மன்னர் பிஜாலா 1 அவர்கள் ஆட்சியில் அளிக்கப்பட்ட புலவர் ஆதரவின் கீழ் இருந்த கன்னடப் புலவர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் துறவியாவார். பசவண்ணா கடவுள் சிவனின் தீவிர பக்தர் ஆவார். அவரது புரட்சிகரமான இயக்கம் தென்னிந்தியாவில் வீரசைவம் சங்கத்திற்கு (லிங்காயத் சமூகம்) எழுச்சியைத் தந்தது. கூடல சங்கமா அல்லது குடல சங்கமா என்கிற இடத்தில் பசவண்ணா தனது குழந்தைப் பருவத்தைக் கழித்தார் மற்றும் அங்கேயே இறந்தார். எனவே லிங்காயத்களுக்கும் வீரசைவத்தைப் பின்பற்றுபவர்களுக்கும் அவ்விடம் மிகவும் முக்கியமான புனித யாத்திரைத் தலங்களுள் ஒன்றாகும். மத நல்லிணக்கம் மற்றும் சமத்துவம் கூடலசங்கம் சங்கமேஸ்வரா கோயில் (சங்கமநாதா கோயில்) மற்றும் ஐக்ய மண்டபா (பசவண்ணாவின் சமாதி அல்லது கல்லறை) ஆகியவற்றிற்கு புகழ் வாய்ந்ததாக அறியப்படுகிறது. சித்ர துர்காவில் நீங்கள் தவறவிடக்கூடாத 5 அதி அற்புத இடங்கள்!! பசவண்ணாவின் இலக்கியங்கள் மற்றும் பழமையான கர்நாடகாவின் தொல்பொருட்களின் தொகுப்பைக் கொண்ட ஒரு அருங்காட்சியகமும் கூட அங்குள்ளது. குடலா சங்கமா பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா மற்றும் மாலாபிரபா ஆகிய நதிக்கரைகளிலுள்ள ஒரு சிறிய கிராமமாகும். கர்நாடகாவிலுள்ள மிகப் பெரிய பக்தி இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த சுவாரஸ்யமான இடங்களில் ஒன்று திகழ்கிறது. பாகல்கோட் ஹோலி ஹப்பாவிற்கு புகழ் பெற்றதாகும். இந்தப் பண்டிகை பண்டைக் காலத்திலிருந்து அதன் ஆட்சியாளர்களால் அவர்களது மக்களிடையே மத நல்லிணக்கம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றை மேம்படுத்த மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வந்தது. முன்பெல்லாம் இது 6 நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படும்.////



பசவண்ணா 1105 ஆம் ஆண்டு பிறந்தவர். பெற்றோர். மதராசா, மதராம்பிகை, வசனாஸ் எனப்படும் கவிதைகள் மூலம் சமூகப் புரட்சியை உருவாக்கியவர். பால் வர்க்க பேதங்களைக் களையச் சொன்னவர், மூடநம்பிக்கையை ஒழிக்கச் சொன்ன இவர் தாலி அணிவதற்கு பதிலாக லிங்கம் இஷ்டலிங்கா என்ற கழுத்தணியை அணியச் சொல்லி இருக்காராம்.




பசவா என்றா ரிஷபா என்று அர்த்தமாம். சிவனின் வாகனமான நந்தியைக் குறிப்பதால் இக்கோயில் முழுதும் நாம் நிறைய ஆநிரைகளைப் பார்த்தோம்.
நாம் பார்த்த கோயில்களிலேயே வித்யாசமான கோயில் இதுதான். ஏனெனில் சிலைகள் எல்லாமே இரட்டை இரட்டையாக இரட்டித்து இருந்தது.



பிரம்மாண்டச் சங்கு



அபூர்வக் கலைப்பொருட்களுடன் இந்த மணி அடிக்கும் மனிதனும் விசேஷம். கால் மணிக்கொருதரம்வெளியே வந்து மணி அடிக்கிறார்.



கலைக்கூடம் போன்றதொரு தர்மஸ்தலா & கோயில்



முன் ஒரு சிவன் கோயில் பின்னே ஒரு தர்மஸ்தலா மாதிரி ஒன்று.இங்கே இரட்டை விநாயகர், பசவா, அவர் பெற்றோர், சிவன் ஆகியோருடன் எங்கு பார்த்தாலும் ஆவினமும் அதன் வாசமும்தான்.



தேங்காய் உடைத்த தண்ணீர்தான் பிரசாதமாகத் தரப்படுது.



இரட்டை விநாயகர், அரங்கம் போன்ற வாயில்கள், சிவன், குழந்தைத் தொட்டில் . இன்னும் பல படங்களை விநாயகர் இடுகையில் ( ஸ்ரீ மஹா கணபதிம் ) முன்பே பதிவேற்றி உள்ளேன்.




கோயிலின் இருபுறமும் அழகு யானைகள். இங்கே எல்லாமே பிரம்மாண்டம் & இரட்டிப்பாக இருக்கின்றன.




பசவண்ணா/ பசவேஸ்வரர் உருவம் வரைந்த திரைதான் கருவறையில் இருக்கு. அதற்குத்தான் தீப தூப ஆராதனை.



மேலும் கோயில் தூணில் எல்லாம் ஒரே நாகங்கள்தான் விதம் விதமாக அணிவகுத்தன.



நிறையப்பேர் வேண்டிக்கொண்டு இங்கே இராத்தங்க வருவார்கள் போலிருக்கிறது. சுற்றிலும் ஓரளவு கடைகள் இருந்தன.

இத்தனை ஆநிரைகள் இருந்தும் அவை சாதுவாக நம்மைத் தாக்காமல் தாம்பாடு அசைபோட்டுக்கொண்டு நடந்துகொண்டிருந்தன.



ஆகமொத்தத்தில் வித்யாசமான கோயில் இது. 


The rich
will make temples for Shiva,
What shall I,
a poor man do?

My legs are pillars,
the body the shrine,
the head a cupola of gold.

Listen, O lord of the meeting rivers,
things standing shall fall,
but the moving ever shall stay.
— Basavanna 820, Translated by Ramanujan[20]




உள்ளமே பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்று சொன்ன திருமூலர் போல உணர்கிறேன் பசவாவைவின் கவிதையைப் படிக்கும்போது. இன்னும் இவரைப் பற்றி அறிய வேண்டும் என்ற ஆவல் பெருகுகிறது. 



13 ஆம் நூற்றாண்டில் பல்குரிக்கி சோமநாதா , 1369 இல் சோம கவி ஆகியோர் லிங்காயத்சைவம் பற்றியும் பசவண்ணா வாழ்க்கையைத் திருத்தொண்டர் புராணமாகவும் எழுதி இருக்காங்களாம். ஆங்கில மொழிபெயர்ப்பு கிடைத்தால் வாசித்து முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.


1 கருத்து:

  1. Thulasidharan V Thillaiakathu12 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 3:15
    நல்ல தகவல்கள் அருமையான கோயிலைப் பற்றி. படங்களும் நன்று..

    பதிலளிநீக்கு

    viyasan13 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 8:04
    இவருக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ்ச்சைவத்தில் பூசலார்நாயனார் தனது உள்ளத்தில் கோயில் கட்டி, மன்னனையும் வரவைத்து குடமுழுக்கும் செய்துவிட்டார். தமிழ்நாயன்மார்கள பற்றியும் எழுதலாமே

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam13 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 2:26
    இதுவரை கூடல சங்கமா செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது லிங்காயத்துகள் தங்கள் மதம் வேறு என்று அங்கீகரிக்கக் கோருகின்றனராம்

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்19 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 12:14
    சிறப்பான தகவல்கள்.....

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan5 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 8:11
    Nandri Geeths

    Nandri viyasan, nichayam eluthukiren.

    Nandri Bala sir.oru murai sendru varugnkal

    Nandri Venkat sago

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.