புதுவயல் கைலாஸ விநாயகர் கோவில்.
கடந்தவருடம் நவம்பர் 10 ஆம் தேதியன்று புதுவயல் கைலாஸ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது . உறவில் நிறையத் திருமண நிகழ்வுகள் இருந்ததால் கும்பாபிஷேகத்துக்குச் செல்ல இயலவில்லை.
கும்பாபிஷேகத்துக்காக ஒரு மலர் வெளியிடப்போவதாகவும் அதற்குப் பங்களிப்புச் செய்யுமாறும் அந்த மலர்க் கமிட்டியின் மெம்பர் திரு முத்து பழனியப்பன் அவர்கள் ( காரைக்குடி கம்பன் கழகம் ) ஃபோன் செய்தார்.
உடனே ஒரு பாடல் எழுதி அனுப்பி விட்டேன். அந்த மலர் கடந்த 5.1.2020 அன்று கோவிலுக்கு அருகே உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் வெளியிடப்பட்டது. அது பற்றியும் போன வாரம் இடுகை ஒன்று வெளியிட்டுள்ளேன்.
இந்நூலைப் பதிப்பித்த ஆர் எம் கே வி பிரிண்டர்ஸின் உரிமையாளர் கவிதா பழனியப்பன் உங்க பாடல்தான் முதலில் வந்தது பிரிண்டுக்கு என்று சொன்னார். மகிழ்வாய் இருந்தது.எல்லாம் விநாயகன் செயல்.
ஊருக்கு நடுவே அமைந்துள்ளது இந்தக் கைலாஸ விநாயகர் கோவில். கோவில் எதிரே உள்ள ஊரணியைச் சுற்றிலும் ஒரே கடைகள் மயம். புதிதாய்க் கும்பாபிஷேகம் ஆனதால் புதுக்கருக்கு அழியாமல் மின்னிக் கொண்டிருக்கிறது கோவில். இதன் பிரகார மதில்கள் எனக்கு வியப்பூட்டின. அது என்ன என்று கடைசியில் பாருங்கள்.
சிறிய ராஜ கோபுரம் . முன் மண்டபத்தோடு காட்சி அளிக்கிறது.
உள்ளே ஜெகஜ்ஜோதியாக விநாயகர் கொலுவீற்றிருக்கிறார்.
இருபுறமும் குட்டி வாயிற்காவலர்கள் கோலோச்ச உள்ளே வெள்ளிக்கவசமா, தங்கக் கவசமா என்று கண்டுபிடிக்க முடியாத ஒரு மினுமினுப்பான கவசத்தில் காட்சி அளிக்கும் விநாயகரைப் பார்த்ததுமே பரவசம் தொற்றிக் கொண்டது.
பிரகாரத்தில் ஸ்தலவிருட்சத்தின் அடியில் விநாயகரும் நாகர்களும். ( ராகு கேது )
அறுபத்தி மூவரும் இங்கே காட்சி அளிக்கிறார்கள். ஆனால் 88 பேர் தெரிகிறார்கள். மேலும் மேலே உள்ள கடவுளர்கள் விநாயகர், லெக்ஷ்மி, சரஸ்வதி, முருகன், பெருமாளாக இருக்கலாம். ஒருவேளை ஆழ்வார்கள் நாயன்மார்கள், மற்றுமுள்ள கடவுளரோடு சம்பந்தப்பட்ட அடியவர்களாக இருக்கலாம். :) ஒருவேளை கைலாயத்தில் உள்ள அனைவருமே இருக்கிறார்களோ என்னவோ.
பிரகாரம். நீர் வர , செல்ல அழகான அமைப்பு.
உள்ளே விநாயகரோ சாதுவாய் இருக்கு வெளியே தூண்களிலோ துஷ்ட நிக்ரஹம்.
பிரகாரத் தூண்களில் உக்கிர தெய்வங்கள். காவல் ஐயனார்.
உட்புற மண்டபத் தூணில் மூஞ்சூறு வாகனத்தில் விநாயகர்.
அம்மாடியோவ் சிவன்தான். வதம் ஹதம்.
ஊர்த்துவ தாண்டவர்.
மணியோசை கலகலகலவென ஒலித்தது .தீபம் பார்க்கும்போது. சாயரட்சை தீபம் முடிந்து பிரசாதம் கொடுத்தார்கள்.
இதுதான் இக்கோவிலில் விநாயகருக்கு அடுத்து நான் கண்ட சிறப்பு அம்சம் இந்த மதில்தான். இதில் இரட்டை வரிசையாக காவலர்கள்.
கீழே காணும் மதிலும் ரிஷப வாகனத்தோடு காவல் தெய்வம் சிற்பமும் நாம் எங்கும் காணக்கூடியதுதான்.
ஆனால் மேலே உள்ள இன்னொரு மதிலில் உள்ள வாளெடுத்து நிற்கும் காவல்கார சிற்பம் வித்யாசம். நான் யாரோ கோயிலை புனரமைத்த அல்லது திருப்பணி செய்த, நிவந்தம், இறையிலி நிலம் அளித்த ராணியோ ( வேலு நாச்சியார் போல ) என நினைத்தேன். ராணியில்லையாம் . சும்மாதான் அழகுக்காக காவல் ராணி சிலை வைத்திருக்கிறார்களாம். வீராங்கனையின் இருபுறமும் மகுடி ஊதும் பாம்புப் பிடாரனும், வாத்தியம் வாசிக்கும் மங்கையும் சிற்பமாகி உள்ளார்கள்.
புதுவயல் கும்பாபிஷேகம் முடிந்து ஒரு மண்டலத்துக்கும் பிறகு இருபது நாள் கழித்துத்தான் கோவில் சென்று தரிசிக்க வாய்ப்புக் கிடைத்தது. அது சரி.. என்னதான் நாம் ஆசைப்பட்டாலும் அவன் பார்க்கவேண்டும் என்று அழைக்கும்போதுதானே பார்க்க வாய்க்கும். :)
ஸ்ரீ மஹா கணபதிம் நமஹ :)

Thenammai Lakshmanan28 ஜனவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 4:03
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!
பதிலளிநீக்கு
வெங்கட் நாகராஜ்29 ஜனவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 8:02
அழகான கோவில். கோவில் சிற்பங்கள் பார்க்கத் தந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan6 பிப்ரவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 2:49
நன்றி வெங்கட் சகோ