எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 19 ஜனவரி, 2021

முருகன் பூசையும் மழலைகளின் குறும்பும்.

முருகன் பூசையும் மழலைகளின் குறும்பும்.

முருகன் பூசையும் மழலைகளின் குறும்பும்.

காரைக்குடியில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தில் ( திங்கட்கிழமை ) தண்டாயுதபாணி பூசை நடைபெறும். முருகனின் தண்டத்துக்கும் வேலுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று விநாயகபானையில் பொங்கலிட்டு அதன்பின் மாபெரும் அளவில் பூசைச் சாப்பாடு செய்யப்பட்டு ஊரோடு உணவிடும் நிகழ்வு நடக்கும். 

நடுவில் முருகன் பாடல்கள், பாமாலைகள் அனைத்தும் பாடப்படும். அதோடு வெள்ளி மயில் வாகனத்தின் பக்கமிருக்கும் வேலுக்கும் தண்டாயுதத்துக்கும் ( முருகன் சமேதமாக ) மாவிளக்கு வைத்துப் பூசை செய்யப்பட்டுப் படையல் இடுவார்கள். 

அந்த நிகழ்வுக்கு வந்திருந்த குட்டிப் பிள்ளைகளின் குறும்பையும் அதோடு பெரியவர்களின் பொங்கலிடுதலையும் படம்பிடித்தேன். அவை உங்கள் பார்வைக்கு.


பூப்போலப் பூப்போலச் சிரிக்கும் :)



உறவினர் கையிலிருந்தபடி ஒரு பார்வை.

பொங்கலிடப் பெரியவர்கள் தயாராகிறார்கள்.

இதுதான் விநாயகப் பானை. தண்டாயுதத்துக்கு அபிஷேகம் முடிந்ததும் விநாயப் பானையை ஏற்றிப் பொங்கல் வைப்பார்கள்.

முன்பெல்லாம் கோட்டை அடுப்பு. இப்போதெல்லாம் கேஸ் அடுப்பு. நடுவீட்டுக் கோலம் போட்டு அதன் மேல் பானையை இரு சுமங்கலிப் பெண்டிர் ஏற்றுகிறார்கள்.

அனைவரும் வணங்க அம்மா பாலை ஊற்றுகிறார். 

சாமி வீட்டின் எதிரேதான் பொங்கல் வைப்பார்கள்.

அத்துடன் செம்புத்தவலையில் அரிசி களைந்த நீரை ஊற்றுகிறார்கள்.

பொங்கல் வைக்கும்போதும் பால்பொங்கும்போதும் சங்கூதுவார்கள்.




பால் பொங்கியதும் அரிசியைப் போட்டுப் பொங்கி இறக்கி வைப்பார்கள். முதலில் இந்த விநாயகப் பானைக்குத் தீபதூபம் காட்டி அதன் பின் படையல் செய்த சாதத்துக்குப் பூசை செய்வார்கள். 


ஃபோட்டோ எடுப்பது தெரிந்ததும் நாணித் தலை கவிழும் சின்னப் பையன்.

நீளமாக கோபிப் பொட்டும். அந்த முன் சுழியும் வெகு அழகு. 

என்ன பார்வை உந்தன் பார்வை :)


அடுத்த சேட்டைக்காரக்குட்டி.

தூணைத்தட்டி விளையாடிக் கொண்டிருந்தான். 


மூக்கில் கை வைக்கிறானா. ஃபோட்டோ எடுத்தால் கொன்னு கொன்னு என்று காட்டுகிறானா :)


சாத்வீகப் புன்னகையுடன் ஒரு குட்டிப் பெண்.


அடமெய்யாலுமே மிரட்டுரான்யா :)


அத்தை தள்ளிப் போயிடுங்க. அவன் பிச்சுப்புடுவேன் பிச்சுங்குறான் என்று எச்சரிக்கும்  தம்பி மகள். :)

1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்2 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 10:57
    சிறப்பான நிகழ்வு...

    குழந்தைகள் அழகு...

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்2 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 12:50
    குட்டிச் செல்லங்களின் படங்கள் அழகு. எத்தனை எத்தனை நிகழ்வுகள். குடும்ப விழா குதூகலங்கள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு

    துரை செல்வராஜூ2 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 4:49
    அழகு.. அழகு...

    பிள்ளையார் பானை - இப்போது தான் கேள்விப்படுகிறேன்...

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan12 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 1:26
    நன்றி டிடி சகோ

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி துரை செல்வராஜு சகோ.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

நவக்ரஹக் கோலங்கள்.

 நவக்ரஹக் கோலங்கள்.