ஸ்ரீ முகுந்தம்மா தேவி கோவில்.
ஸ்ரீ முகுந்தம்மா தேவி கோவில்
பானஸ்வாடியில் உள்ள கோவில்தான் ஸ்ரீ முகுந்தம்மா தேவி கோவில். மிகச் சக்தி வாய்ந்த அம்மன் என்றும் இந்த ஊரின் புராதன காவல் தெய்வம் என்றும் என்னை அழைத்துச் சென்ற என் சகோதரி சொன்னார்.
நம்மூரில் எல்லைக்காளி
போல இங்கே இவள் வீற்றிருக்கிறாள். ஆனால் சாத்வீகம் பொலியும் முகம். பாருங்கள்
சின்னஞ்சிறுபெண் போலே சிரித்துக் கொண்டிருக்கிறாள்.
இந்த ஊர் கோவில்களில் எல்லாம் பணம் கொட்டிக் கிடக்கிறது. அதோடு பூமாலைகளும்தான்.
அம்மன் முகம் தவிர எங்கும் வளையம் வளையமாக மாலையைக் காணலாம். இந்த ஊர் குளிருக்கு
அவை இரண்டு நாட்களானாலும் வாடுவதில்லை என்பது ஸ்பெஷல்.
குட்டி அர்ச்சகர் தீபம் காண்பித்துக் குங்கும பிரசாதம் தந்தார். இங்கே
அர்ச்சகர்கள் எல்லாம் மஞ்சள் ஆடை உடுத்தி இருக்கின்றார்கள்.
இக்கோவிலை நிர்மாணித்த சாமிஜி போல் தெரிகிறது. கீழே ஸ்ரீ ராகவேந்திர சாமிகளின் திருவுருவம். இது சிவன் சந்நிதிக்கு வெளியே. முருகன் சந்நிதி.
சப்த கன்னிமார் எழுவர். தனிசந்நிதியில் காட்சி அளிக்கின்றனர். விநாயகரை தனிக்கூண்டுக்குள் வைத்துப் பாதுகாக்கிறார்கள். ஒருவேளை இங்கேயும் பிள்ளையார் சிலையைத் திருடிக் கொண்டுபோய் வணங்கினால் மகத்துவம் அதிகம் என்று யாரும் புரளியைக் கிளப்பி இருப்பார்களோ :)
சிம்பிளாக அமர்ந்த சிவன். இவர் பின்னே உற்சவ முகுந்தம்மாவின் சிலை. நம்மூர் கருமாரி, மாரியம்மன் போல தலையின் மேல் குடைபிடித்த ஐந்து தலை நாகம்.
இந்த மாதிரி அம்மன் கோவில்களில் ராகு, கேது ஆகியோர் விசேஷமாக வணங்கப்படுகின்றார்கள். கோயிலின் முன்புறம் ஸ்தலவிருட்சத்தின் கீழ் அவர்களுக்குத் தனிச்சந்நிதி.
உற்சவ மூர்த்திகள், முருகன் வள்ளி தெய்வானை, லெக்ஷ்மி நரசிம்மர் என அனைத்துச் சாமிகளும் உண்டு இக்கோவிலில். அன்று வெள்ளிக்கிழமையாதலால் முன்புறம் சிலர் அமர்ந்து லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்து கொண்டிருந்தார்கள்.
கண்ணும் காதும் இனிமையால் நிரம்பி வழிந்தது. வெளியே பூம் பூம் மாட்டை ஓட்டியபடி ஒரு பெண் வந்து நின்றார். கோவிலின் பிரசாதமாக இங்கேயும் எலுமிச்சை சாதம் உண்டு கிளம்பினோம்.
முகுந்தம்மா மிகுந்த சக்தி வாய்ந்த அம்மன் என்பது அவள் முன் நிற்கும்போதும்,
பிரகாரம் வரும்போதும் உணரமுடிந்தது. சக்தி ஓட்டம் அதிகம் உள்ள கோவில் இது.
குளிர்காலத்தில் சூரியன் பளிச்சென்று பிரகாசிக்க கோவில் ரொம்பவே எனர்ஜிட்டிக்கா
இருந்தது.
கோவில் அமைவிடம் :-
ஸ்ரீ முகுந்தம்மா தேவி கோவில்,
ஹோர்மாவு மெயின் ரோடு,
அண்ணையா ரெட்டி லே அவுட்,
பனஸ்வாடி,
பெங்களூரு,
கர்நாடகா - 560043,
இந்தியா.
டிஸ்கி:- இவற்றையும் பெங்களூருவில் பாருங்க.
1. மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.
2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள்.
4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1
5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2
6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )
7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.
8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3
9. காதல் ரோஜாவே. -- பாகம் 4
10. காதல் ரோஜாவே..-- பாகம் 5
11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.
12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.
13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.
14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.
15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்
16.கொள்ளை லாபம் தரும் கோழிக்கொண்டைப்பூ
17. நான்கு வாயில்கள். லால் பாக்.
18. சந்தனம் பூசும் மஞ்சள் நிலாக்கள்.
19. மனித உருவிலும் பசுமைச் சிற்பங்கள்.
20. மலர்கள் நனைந்தன பனியாலே.
21. நீர்த்துளியா தேன்துளியா..
22. தேன் உண்ணும் வண்டு.. மாமலரைக் கண்டு.
23. பெண்ணல்ல பெண்ணல்ல பிங்க்கிப் பூ.. :)
24. லால் பாக் . தும்பிக்கைகளா பூமியின் நம்பிக்கைகளா.
25. லால் பாக். அழகு ஆர்க்கிட்ஸ்
26. லால் பாக். பச்சை நிறமே பச்சை நிறமே .
27. லால் பாக் . என்னைக் கவர்ந்த சில இடங்கள்.
28. லால் பாக். பசுமை வளைவுகள்.
29. அழகழகாப் பூத்திருக்கு. !
30. மொக்கும் மலரும்.
31. இலை அலையும் ரோஜாப் படகும் பூ(மி)ப் பந்தும்.
32. மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன. மூவர் அணி.
33. ஸ்ரீ முகுந்தம்மா தேவி கோவில்.
34. வெற்றிலை பூமாலையும் வெல்ல நெய்விளக்கும்.
35.. பனஸ்வாடியில் ஐந்து கோவில்கள்.
36. துறவின் வயலட். பான்ஸியும் பெட்டுனியாவும்.
37. மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்
38. ஸ்ரீரங்கப்பட்டினா ஸ்ரீரங்கநாதஸ்வாமி கோயில்.










G.M Balasubramaniam19 டிசம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 4:06
பதிலளிநீக்குபார்த்ததில்லை
பதிலளி
Yarlpavanan19 டிசம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 4:54
அருமையான தகவல்
பதிலளி
Thenammai Lakshmanan27 டிசம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 3:45
பனஸ்வாடி சென்றால் பார்க்கலாம் சார். பெங்களூருவில் திரும்பிய பக்கமெல்லாம் கோவில்கள்தான்..
நன்றி யாழ்பாவண்ணன் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!