எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 8 ஜனவரி, 2021

ஸ்ரீரங்கப்பட்டினா ஸ்ரீரங்கநாதஸ்வாமி கோயில்.

ஸ்ரீரங்கப்பட்டினா ஸ்ரீரங்கநாதஸ்வாமி கோயில்.















ஸ்ரீரங்கப்பட்டினா ஸ்ரீரங்கநாதஸ்வாமி கோயில்

மைசூர் செல்லும் வழியில் திப்பு சுல்தான் கேட், ஸ்ரீரங்கப்பட்டிணம் ஸ்ரீரங்கநாதர் கோயில் எல்லாம் பார்த்துவிட்டுத்தான் மைசூர் அரண்மனை பிருந்தாவன் பார்க்கச் சென்றோம்.

இக்கோயில் நம்மூர் அமைப்பில் ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் வரவேற்றது. கும்பாபிஷேக வேலைகள் நடந்து கொண்டிருந்தன அப்போது.

துளசி மணக்க ஸ்ரீரங்கநாதனான  நீலமேக வண்ணன் கார்மேகக் கண்ணனின் திருவடி தரிசனம் பெற்றோம்.

முகமண்டபத்தில் தசாவதாரக் காட்சி வெகு அழகு. ஹொய்ஸாளர் காலத்துத் தூண்கள் கெட்டியான மத்தை அப்படியே நிற்கவைத்ததுபோல் இருக்கின்றன. 

கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ளது இக்கோவில். காவிரிக்கரையில் அமைந்துள்ள ஐந்து விஷ்ணு கோவில்களில் ( நம் ஸ்ரீரங்கம்போல் ) இதுவும் ஒன்று. இக்கோயிலைச் சுற்றியும் காவிரி ஓடுகிறது. ஸ்ரீரங்கநாத சுவாமி கோவிலோடு ஸ்ரீரங்கப்பட்டினமே இத்தீவினுள்தான்  அமைந்துள்ளது.

ஐந்து விஷ்ணு கோவில்கள் காவிரிக்கரையில் அமைந்துள்ளதால் இவை பாஞ்ச்ரங்கா க்ஷேத்திரா என்று அழைக்கப்படுகின்றன. அவற்றில் இங்கேதான் ரங்கர் முதலில் குடி கொண்டதால் ஆதி ரங்கர் என்று அழைக்கப்படுகிறார். ( ஒருவேளை காவிரி பாயும் ஆரம்ப இடத்தில் குடி கொண்டதால் இருக்கும் ).

ஸ்ரீரங்கம், ஸ்ரீரங்கப்பட்டிணம் , கும்பகோணம், மயிலாடுதுறை, நெல்லூர் ஆகிய இடங்களில் உள்ள கோயில்கள் ஸ்ரீரங்கநாதர் கோயில்கள் ( பாஞ்ச்ரங்கா க்ஷேத்திரா ) என்று அழைக்கப்படுகின்றன

ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இக்கோயில் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் ஹொய்சாள மன்னன் விஷ்ணு வர்த்தன்  இக்கோயிலுக்காக ஸ்ரீரங்கப்பட்டின கிராமத்தையே இறையிலி நிலமாக அளித்துள்ளார். அதன்பின் உடையார் வம்ச அரசர்களும் கோயிலுக்குத் திருப்பணி செய்துள்ளார்கள்.

வரலாற்று ஆய்வாளர் கே வி சௌந்திரராஜன் அவர்களின் கூற்றுப்படி ஒன்பதாம் மற்றும் பத்தாம் நூற்றாண்டுகளில் ஸ்ரீரங்கப்பட்டினம் ஸ்ரீரங்கநாத சுவாமி கோயிலில் இருக்கும் மூலவர் போலவே  கோவிலடி அப்பக்குடத்தான் பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர் சௌம்யநாராயணப் பெருமாள் கோயில், மன்னார்குடி வீரராகவப் பெருமாள் கோயில் , ராஜகோபால சுவாமி கோயில் ஆகிய கோவில்களிலும் மூலவர் நிர்மாணிக்கப்பட்டாராம்.

ஸ்ரீரங்கர்  ( பள்ளி கொண்ட பெருமாள் ) யோக நரசிம்மர், கோபால கிருஷ்ணர், ஸ்ரீனிவாசர், ஹனுமன், கருடர், ஆழ்வார்களும் காட்சி அளிக்கிறார்கள். மொத்தத்தில் நல்ல தரிசனம்.



டிஸ்கி:- இவற்றையும் பெங்களூருவில் பாருங்க.

1.  மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.

2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள். 

4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1 

5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2

6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )

7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.

8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3

9.  காதல் ரோஜாவே. -- பாகம் 4 

10. காதல் ரோஜாவே..-- பாகம் 5

11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.

12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.

13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை. 

14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி. 

15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்

16.கொள்ளை லாபம் தரும் கோழிக்கொண்டைப்பூ

17. நான்கு வாயில்கள். லால் பாக். 

18. சந்தனம் பூசும் மஞ்சள் நிலாக்கள்.

19. மனித உருவிலும் பசுமைச் சிற்பங்கள். 

20. மலர்கள் நனைந்தன பனியாலே. 

21. நீர்த்துளியா தேன்துளியா..

22. தேன் உண்ணும் வண்டு.. மாமலரைக் கண்டு. 

23. பெண்ணல்ல பெண்ணல்ல பிங்க்கிப் பூ.. :)

24. லால் பாக் . தும்பிக்கைகளா பூமியின் நம்பிக்கைகளா.  

25.  லால் பாக். அழகு ஆர்க்கிட்ஸ்

26.  லால் பாக். பச்சை நிறமே பச்சை நிறமே .

27. லால் பாக் . என்னைக் கவர்ந்த சில இடங்கள்.

28. லால் பாக். பசுமை வளைவுகள்.

29. அழகழகாப் பூத்திருக்கு. ! 

30. மொக்கும் மலரும்.

31. இலை அலையும் ரோஜாப் படகும் பூ(மி)ப் பந்தும்.

32. மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன. மூவர் அணி.

33. ஸ்ரீ முகுந்தம்மா தேவி கோவில்.

34. வெற்றிலை பூமாலையும் வெல்ல நெய்விளக்கும்.

35.. பனஸ்வாடியில் ஐந்து கோவில்கள்.

36. துறவின் வயலட். பான்ஸியும் பெட்டுனியாவும்.

37. மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்

38. ஸ்ரீரங்கப்பட்டினா ஸ்ரீரங்கநாதஸ்வாமி கோயில்.

1 கருத்து:

  1. வெங்கட் நாகராஜ்17 ஜனவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 7:47
    நல்லதொரு கோவில் தரிசனம்.

    நன்றி சகோ.

    பதிலளி

    Thenammai Lakshmanan18 ஜனவரி, 2020 ’அன்று’ முற்பகல் 12:18
    நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளி

    Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University18 ஜனவரி, 2020 ’அன்று’ முற்பகல் 9:55
    இக்கோயிலுக்கு பல முறை சென்றுள்ளேன். பதிவில் நீங்கள் கூறியுள்ள பிற கோயில்களையும் பார்த்துள்ளேன். ஒப்புநோக்கிய விதம் அருமை.

    பதிலளி

    Thenammai Lakshmanan28 ஜனவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 3:57
    நன்றி ஜம்பு சார். :)

    பதிலளிநீக்கு

தமிழ்ப் புத்தாண்டுக் கோலங்கள்

தமிழ்ப் புத்தாண்டுக் கோலங்கள் தமிழ்ப் புத்தாண்டுக் கோலங்கள்  இந்தக் கோலங்கள்  13. 4. 2023  குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.