எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

குவாலியர் சூரியனார் ரதக்கோவில்.

குவாலியர் சூரியனார் ரதக்கோவில்.

குவாலியர் சூரியனார் கோவில் பற்றி முன்பே எழுதி இருக்கிறேன். 

குவாலியரில் மொரார் என்னுமிடத்தில் இது அமைந்திருக்கிறது. சூரியனுக்காகவே அமைக்கப்பட்ட கோவில்களில் இது முக்கியமானது. பிர்லா மந்திர் எல்லாம் பெருமாளுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்க இதுவோ சூரியனுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. வெகு தேஜஸான கோயிலை ஒருமுறை வலம் வருவோம் வாங்க. சுத்தி தோட்டம் வேறு அழகூட்டுகிறது. கூடவே மயிலும் புறாக்களும். 



கம்பீரமா நிற்கும் இந்தக் கோவிலில் முன் கூடம் ஒன்றும் கருவறை ஒன்றும் உள்ளது. கிழக்குப் பார்த்து அமைந்துள்ளது கோவில். 


சூரியனின் ரதத்தை வடிவமைத்தது போல் தேர் வடிவில் அமைந்துள்ளது இக்கோவில். 

கருவறையையும் மண்டபத்தையும் சுற்றிச் சக்கரங்கள் எழிலூட்டுகின்றன. 

அதோடு துள்ளி ஓடும் அந்தப் புரவிகளையும் பாருங்கள். கிழக்கு நோக்கி அமைந்துள்ள கோவிலை/ரதத்தை வலுவோடு இழுத்துச் செல்கின்றன. 

கோவிலின் முன் நாங்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். 

முன்புறம் பூக்கல்லில் டிசைன். மார்பிள். கட் வொர்க்ஸ். இதை இங்கே அதிகம் பார்க்கலாம். 


கோவிலின் உட்புறம் ஒருபக்கம் சூர்ய காயத்ரி , ஸ்தோத்திரம் போன்றவையும் , மறுபுறம் ஆதித்ய ஹ்ருதயமும் கல்லில் வடிக்கப்பட்டிருந்தன,. 

மேலே இருக்கும் மணிகள் நகாரா போல் மின்சாரத்தால் இயங்குவன. 

கோவிலை வலம் வந்தோம். நிறைய சிற்ப வேலைப்பாடுகளுடன் ரெட் ஸ்டோன் என்றழைக்கப்படும் செம்புறாங்கற்களால்/ சிவப்பு மார்பிள் கற்களால்  அமைக்கப்பட்டுள்ளது இக்கோவில்.


சக்கரத்தின் வடிவமைப்பையும் அதன் சிற்ப அற்புதத்தையும் நெருக்கத்தில் பாருங்கள்.


இருபுறமு ஏழு ஏழு சக்கரங்களும் , மும்மூன்று குதிரைகளும் கோவில் ரதத்தை இழுத்துச் செல்கின்றன. 


சூரியனின் புரவிகளை நெருக்கத்தில் பார்ப்போம்.வெகு நேர்த்தியான வடிவமைப்பு. 

மேலே இருக்கும் இந்த அமைப்புத்தான் புரிபடவில்லை. ரோமானியக்  கோவில்களிலோ அல்லது ஹாலிவுட் படங்களிலோ பார்ப்பதுபோல் ஒரு சிம்மம் போன்ற உருவமும் அதன் கீழே இரு ஈட்டி ஏந்திய காவலரும் எதைச் சித்தரிக்கிறார்கள். அதே போல் இந்தக் கருவறை மற்றும் முன்  மண்டபம்  இரண்டின் வெளிப்புறத்திலும் அநேக உருவச் சிற்பங்கள் உள்ளன. அவர்கள் எல்லாம் யார் ? தெரிந்தவர் சொல்லலாம். 

ரதத்துக்கு முன்னே இருபக்கமும் இரு குட்டி மண்டபங்கள் உள்ளன. இதில் இரு சிலைகள் உள்ளன. 

இதை வடிவமைத்த பிர்லாவோ இல்லை சர்தார் வல்லபபாய் படேலோ தெரியவிலை. 

நடு மையமாக இந்தப் பூக்கல் தரை. கோவிலின் எதிரில் உள்ள முற்றம். 

கண்ணையும் கருத்தையும் கவர்ந்த சூரியனின் ரதத்தை இன்னுமொருமுறை பார்வையிட்டுவிட்டு விழுந்து வணங்கினோம்.  சூர்யப் ப்ரகாசம் நம்முள் புகுந்துகொள்ள பசுமைமயமான தோட்டத்தில் புகுந்து நடந்து வெளிவந்தோம்.

அச்வத் த்வஜாய வித்மஹே
சாயா ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்யப் ப்ரஸோதயாத ll

ஓம் ஆதித்யாய நமஹ.  

டிஸ்கி :-

இதையும் பாருங்க.

1 கருத்து:

  1. ஸ்ரீராம்.6 ஆகஸ்ட், 2020 ’அன்று’ முற்பகல் 5:15
    படங்கள் அழகு. விவரங்கள் சுவாரஸ்யம். நீங்கள் கேட்டிருக்கும் விவரம் கீதா அக்கா போன்றவர்கள் பார்த்தால் கொடுக்கக் கூடும்.

    பதிலளிநீக்கு

    துரை செல்வராஜூ6 ஆகஸ்ட், 2020 ’அன்று’ பிற்பகல் 6:58
    அழகான படங்களுடன் நிறைய விவரங்கள்..
    நலமே வாழ்க..

    பதிலளிநீக்கு

    CS Ravindramani7 ஆகஸ்ட், 2020 ’அன்று’ பிற்பகல் 12:29
    வாவ்..!

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan12 ஆகஸ்ட், 2020 ’அன்று’ பிற்பகல் 2:36
    கீதா மேம் இன்னும் பார்க்கவில்லை போலிருக்கு ஸ்ரீராம். நன்றி :)

    நன்றி துரை செல்வராஜு சார்

    நன்றி சி எஸ் ரவீந்திரமணி சார் :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

நவக்ரஹக் கோலங்கள்.

 நவக்ரஹக் கோலங்கள்.