யட்சிணிகளும் யட்சர்களும் சிம்மயாளியும்.
தூண்களில் சிம்மங்களும் சிம்மயாளிகளும் அணிவகுக்கும் நகரத்தார் கோவில்களில் இரணியூரும் மாத்தூரும் முக்கியமானவை.
நேமமும் இரணியூரும் மாத்தூரும் சிற்ப அழகுக்காகவும் இறையருள் பெறவேண்டியும் தரிக்கத்தக்க ஸ்தலங்கள். வாருங்கள் இச்சிற்பங்களைக் கண்டு களித்து வருவோம்.
இந்த நிலைவாசல் சிற்பத்தில் கல்லிலே கலைவண்ணம் கண்ட அழகு அதிசயிக்க வைக்கிறது. மரச்சட்டத்தில் செதுக்குவதுபோல் கல்லிலே விதானம் வித்யாசம்.
தழைந்திருக்கும் தாமரை மொக்குகளும் கஜலெக்ஷ்மியும் சிம்மங்களும் ஆட்கொண்டநாதர் சந்நிதிக்குக் கட்டியம் கூறுகிறார்கள்.
மிருகங்கள்மேல் மனிதாபிமானத்தோடு அன்பு செலுத்துவதை இச்சிற்பங்கள் காட்சிப்படுத்துகின்றன.
குழலூதும் கிருஷ்ணரும், ஆடல்வல்லானும்.
இருபுறமும் ஆடல்பெண்ணும் பணிப்பெண்ணும் மேலே. கீழே சிம்மமும் அன்னமும்.
கவிழ்ந்திருக்கும் கல்தாமரையின் வடிவழகைப் பாருங்கள்.
இருபுறமும் வாயிற்காப்போன்கள் ஜெய விஜயர்கள். ஆடற்பெண்கள். விநாயகர், மீனாட்சி திருமணம், விநாயகனைச் சுமந்த உமையோடு விடையேறு பாகன், விநாயகர், கந்தர்வர்கள்.
ஒருபுறம் விநாயகர் என்றால் இன்னொரு புறம் ஷண்முகர், அறுமுகர், முருகப்பெருமான்.
ருத்ரமூர்த்தியும் விநாயகரும்.
குபேரனும் முருகனும்.
விநாயகர்தான் எத்தனை வடிவங்களில் எழிலோடு காட்சி தருகிறார். !
அஷ்டலெக்ஷ்மி மண்டபத்தில் தூண் சிற்பங்கள்.
நரசிம்மமூர்த்தி.
இரண்ய யுத்தம்.
சிம்ம யாளி. மிகப்பிரம்மாண்டமான சிம்மயாளியை நான் இங்கேதான் கண்டேன்.
கர்ப்பக்கிரகத்தின் வாயிலில் விநாயகர் & காவல் தெய்வங்கள்.
இதோ வந்துவிட்டார்கள் யட்சர்களும் யட்சிகளும்.
கோவில் உள்மண்டபத்தில் நவதுர்க்கைகள் காட்சி அளிக்கிறார்கள். அங்கே ஒவ்வொரு தூணையும் யட்சர்களும் யட்சிகளும் தாங்கிய வண்ணம் இருக்கிறார்கள்.
ஒரே கோலாகலமும் ஆட்டபாட்டமுமாக இரண்டு ஏன் மூன்று யட்சர்களும் யட்சிணிகளும் கூட தூணின் அடிப்பாகத்தில் காட்சி தருகிறார்கள்.
என்னா அலப்பறை. :)
இது பிரியாவிடைச் சிற்பம்.
மாதொரு பாகன்போல காட்சி தரும் இவர் கல்யாண சுந்தரராம்.
திருவாட்சி மேல்பாக டைப்பில் ஐந்து கல் முடிச்சுச் சிற்பங்கள்.
இன்னொரு முறை முன்வாசல் சிற்பத்தொகுதி நீங்கள் கண்டு களிக்க க்ளோசப்பில் கொடுத்துள்ளேன். காற்று உள்நுழையும் சாரள அமைப்பில் இருப்பது வெகு சிறப்பு. !
டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.
1. அஷ்ட பைரவர்களும் 108 உக்கிர பைரவர்களும்.
2. துர்க்கை உள்ளே லெக்ஷ்மி வெளியே.
3. இராசிகளை ஆளும் இரணியூர் நீலமேகப் பெருமாளும் கனகவல்லித் தாயாரும்.
4. ஊருணிகள் - திருக்கோயில் புஷ்கரணிகளும் தாமரை பூத்த தடாகங்களும்.
5. இரணிக்கோயில் கோபுரங்களும் திருச்சுற்று மதிலில் பள்ளிகொண்டபெருமாளும் நான்முகனும்.
6. இரணிக்கோயில் படிச்சிற்பங்கள்.
7. இரணிக்கோயில் தூண்சிற்பத் திருமூர்த்தங்கள்
8. விருத்தன் திருமணமும் விடையேறு பாகன் திருவிளையாடல்களும்.
9. காமதேனுவும் கீதோபதேசமும் பட்டாபிஷேகமும்.
10. இரணியூரில் குபேர ஹோமமும் பச்சைக் குங்குமமும்.
11. இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவியம்மன் கோவில்.
1. அஷ்ட பைரவர்களும் 108 உக்கிர பைரவர்களும்.
2. துர்க்கை உள்ளே லெக்ஷ்மி வெளியே.
3. இராசிகளை ஆளும் இரணியூர் நீலமேகப் பெருமாளும் கனகவல்லித் தாயாரும்.
4. ஊருணிகள் - திருக்கோயில் புஷ்கரணிகளும் தாமரை பூத்த தடாகங்களும்.
5. இரணிக்கோயில் கோபுரங்களும் திருச்சுற்று மதிலில் பள்ளிகொண்டபெருமாளும் நான்முகனும்.
6. இரணிக்கோயில் படிச்சிற்பங்கள்.
7. இரணிக்கோயில் தூண்சிற்பத் திருமூர்த்தங்கள்
8. விருத்தன் திருமணமும் விடையேறு பாகன் திருவிளையாடல்களும்.
9. காமதேனுவும் கீதோபதேசமும் பட்டாபிஷேகமும்.
10. இரணியூரில் குபேர ஹோமமும் பச்சைக் குங்குமமும்.
11. இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவியம்மன் கோவில்.
திண்டுக்கல் தனபாலன்13 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 6:38
பதிலளிநீக்குஅழகான அலப்பறைகள்...
பதிலளிநீக்கு
கவிஞர்.த.ரூபன்14 ஜூன், 2020 ’அன்று’ முற்பகல் 8:01
வணக்கம்
ஒவ்வொரு படங்களும் சொல்லிய கருத்தும் சிறப்பு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு
வெங்கட் நாகராஜ்14 ஜூன், 2020 ’அன்று’ முற்பகல் 8:20
அழகான படங்கள்.
பதிலளிநீக்கு
Kasthuri Rengan14 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 2:34
மிக அற்புதமான பதிவு
பதிலளிநீக்கு
Kasthuri Rengan14 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 2:34
அற்புதம் அய்யா
பதிலளிநீக்கு
Thulasidharan V Thillaiakathu15 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 9:00
படங்கள் அத்தனையும் ரொம்ப அழகாக இருக்கின்றன
துளசிதரன்
கீதா
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan24 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 12:50
ஆம் டிடி சகோ
நன்றி கவிஞர் ரூபன்
நன்றி வெங்கட் சகோ
நன்றி கஸ்தூரி ரங்கன் சார்
நன்றி துளசி சகோ & கீத்ஸ்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!