எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 27 ஜனவரி, 2021

மந்திராலயம் - 2.

 மந்திராலயம் - 2.

ஸ்ரீ ராகவேந்திரரின் பிருந்தாவனத்தில் வெளித்தாழ்வாரத்தில் காத்துக் கிடக்கிறோம். அவரை தரிசித்ததைப் பற்றிக் கூறுகிறேன். 



சமஸ்கிருதம், வேதம், வீணை வாசிப்பு ஆகியவற்றில் புலமைபெற்றவர் ராகவேந்திர மகான்.

அவரைக்காணக் காத்துக் கிடக்கும் மக்கள் கூட்டம். 

வெளியே கிருஷ்ணர் குடை பிடிக்க ராகவேந்திரர் ஜீவசமாதியின் எதிரில் நிஜமாகக் காட்சி அளிக்கிறார். 

இதோ திறந்தாயிற்று சந்நிதி. மிருத்திகா பிருந்தாவனம் என்பதால் உள்ளே உள்ள கட்டிட அமைப்பும் கோபுரமும் வித்யாசமாக இருந்தன. 

பிருந்தாவனத்தைச் சுற்றிலும் கோலங்களும் பிருந்தாவனத்தின் சுற்றுப்புறச் சுவர்களில் ராகவேந்திரரின் வாழ்க்கை வரலாறும் சித்தரிக்கப்பட்டிருந்தன. 

முற்பிறவிகளில் சங்குகர்ணர், பிரகலாதர், பாஹ்லீகர் ( பீஷ்மரின் பெரியப்பா), வியாசராயர், அதன்பின் குருராகவேந்திரர் ஆகப் பிறந்தவர்.  


சங்கரர், இராமானுஜர் போலவே இவரும் மக்கள் அனைவரும் சமம் எனக் கருதியவர். எளிய மக்களையும் அரவணைத்தார். 

சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்றதோடு பல்வேறு வகை நூல்களையும் தாமும் படைத்தார். வாத விவாதத்தில் வெல்லுதல் மட்டுமல்ல பல்வேறு அறிஞர்களையும் ஊக்குவித்தார்.  

ஒளிரூபமாய் இறங்கி வந்து ஆசீர்வதிக்கும் ராயர். தம்மை நாடியோரின் மனக்குறைகளைக் கேட்காமலே அறிந்து தீர்ப்பார். 

பிரஹலாதனாக, பாஹ்லீகராக, வியாசராயராக, ராகவேந்திரராக அவரின் அவதாரங்கள் ஓவியத்தில் கண்ணைக் கவர்கின்றன. கடைசியில் பிருந்தாவனத்தில் ஜீவசமாதி அடைந்ததும் சித்தரிக்கப்பட்டுள்ளது. 

இராகவேந்திரரின் வாழ்க்கை வரலாறு. 

ஸுதீந்திர தீர்த்தரிடம் துவைத வேதாந்தத்தையும் இலக்கியத்தையும் பயின்றது

சரஸ்வதியுடனான இல்வாழ்வு. 

ஸுதீந்திரர் மடத்துப் பொறுப்பை ஏற்கச் சொல்லுதல். 

கனவில் திருவேங்கடநாதன் அதையே வழிமொழிதல். 

மனைவியையும் இளைய மகனையும் பிரிந்து செல்ல வருந்தி இருத்தல். 

பின்னர் துறவு மேற்கொள்ளுதல் ஆகியன ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளன. 


ராகவேந்திரரின் பல்வேறு இறையம்ச லீலைகளையும் சித்தரிக்கும் ஓவியங்கள். ( நோயுற்றோரை குணமாக்கியது , பிரம்ம ராட்சசனை அடக்கியது. மாங்கனிச் சாற்றில் விழுந்து மரித்த குழந்தையை உயிர்ப்பித்தது ) 

பல்வேறு அவதாரங்களாகவும் கிருஷ்ணனை வணங்கியது, துறவறம், சீடர்களை நல்வழிப்படுத்துதல் என ஓவியங்கள். அனைத்திலும் கன்னடத்தில் எழுதி இருந்ததால் புரியவில்லை. 

மிருத்திகா பிருந்தாவனக் கோபுரத்தின் பிரகாசக்காட்சி. 

பன்னிரெண்டு முறை வலம் வந்து ஒவ்வொரு முக்கிலும் விழுந்து வணங்குவார்கள் பக்தர்கள். நாமும் வணங்கி மகானின் அருளாட்சியை மனதில் ஏந்திக் கொண்டு வெளிவந்தோம். 

ராமர் பூஜையில் கிருஷ்ணனோடு உரையாடும் ராகவேந்திரர். 

அவரது வீணை வாசிப்பில் மயங்கித் தோள் மீது சாய்ந்து  புல்லாங்குழல் இசைக்கும்  கிருஷ்ணன். 

நம் கவலைகளை அவரிடம் ஒப்படைத்தாயிற்று அவர் பார்த்துக் கொள்வார். 

1595 இல் பிறந்த அவர் 1671 இல் ஜீவ சமாதி அடைந்தார். அதன் முன் அவர் கூறிய உரையில் இருந்து சில வார்த்தைகள். 

சரியான வாழ்க்கை நடத்தையின்றிச்  சரியான சிந்தனை வராது

நல்ல மற்றும் தகுதிக்குரிய மக்களுக்குச் செய்யப்படும் உதவி/தர்மம் கடவுளின் பூஜைக்கு நிகராகும். 

சாஸ்திரத்தைப் பின்பற்றாமல் தங்களைக் கடவுள் என்று கூறிக் கொண்டு அதிசயங்கள் செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள்.

சரியான ஞானத்தை மிஞ்சிய எந்த அதிசயமோ அற்புதங்களோ கிடையாது.

கடவுளின் மேல் நல்ல பக்தி இருக்க வேண்டும். இப்பக்தி குருட்டு நம்பிக்கையாக இருக்கக் கூடாது. 




பூஜ்யாய இராகவேந்திராய  சத்ய தர்ம ரதாயச
பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காமதேனவே 11



ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ராகவேந்திராய சர்வ பராக்ரமாய
சர்வ கார்ய சித்திகராய சர்வ ஜன வசீகராய ஸ்வாஹா
சர்வலோக நிவாரணி ரஸ்து. 



ஸ்ரீ குருராஜ நாமாவளி

ஜெய ஜெய ஜெய வீவ ராகவேந்திரா
பவ பயநாசா ராகவேந்திரா 
துங்கா தீரதி ராகவேந்திரா
மங்கள மஹிமனே ராகவேந்திரா
கண்களிலாதவகே ராகவேந்திரா
அங்க ரஹிதகே ராகவேந்திரா
திம்மண்ணனஸூத ராகவேந்திரா
பொம்ம மாருதிப்பிரியா ராகவேந்திரா
வெங்கட நாமக ராகவேந்திரா
ஸங்கட ஹாரக ராகவேந்திரா
வீணா பண்டித ராகவேந்திரா
கான விஷாரத ராகவேந்திரா
பரிமள பண்டித ராகவேந்திரா
பாஷ்யகாரகுரு ராகவேந்திரா
ஸரஸ்வதியா பதி ராகவேந்திரா
ஸரஸ்வதி வித்யா ராகவேந்திரா
கும்பகோண வாஸா ராகவேந்திரா
ஸீதீந்த்ர சிஷ்யா ராகவேந்திரா 
ராகவேந்திர குரு ராகவேந்திரா
ராகவேந்திர குரு ராகவேந்திரா
சிஷ்யர வித்கெ ராகவேந்திரா
ஆயாச திம்பரெ ராகவேந்திரா
கந்தவ தெகெதனு ராகவேந்திரா
அக்னி சூக்ததிம் ராகவேந்திரா
விப்ரரு லேபிசே ராகவேந்திரா
க்ஷிப்ரதி மை உறி ராகவேந்திரா
சரணு ஹொக்கலு ராகவேந்திரா
வருண சூக்ததிம் ராகவேந்திரா
கந்தவ லே பி சே ராகவேந்திரா
சந்தன வாயிது ராகவேந்திரா
மூல ராமார்ச்சக ராகவேந்திரா
சன்யாசி ஆகலு ராகவேந்திரா
ஸூதனி கெமுஞ்ஜியு ராகவேந்திரா
சாரதெ ஆக்ஞெயு ராகவேந்திரா
ஆஸ்ரம தர்சித ராகவேந்திரா
பிசாசியாகி ஸதி ராகவேந்திரா
தீர்த்தவ ப்ரோக்ஷிஸே ராகவேந்திரா
மோக்ஷவ கைசித ராகவேந்திரா
சதுஷ் ஷஷ்டி கலையிந்த ராகவேந்திரா 
அதுள ப்ரகாசனு ராகவேந்திரா
மொதலின குருகளு ராகவேந்திரா
யாதவேந்த்ரரு ராகவேந்திரா
பந்து நோடலு ராகவேந்திரா
ஹருஷவ நித்தரு ராகவேந்திரா
சமஸ்தான ஒப்பிஸலு  ராகவேந்திரா
நிம்மதே எந்தரு ராகவேந்திரா
பரிபரியலி உண்டே ராகவேந்திரா
இந்தா குருகளு ராகவேந்திரா
படவெங்கண்ணனிகே ராகவேந்திரா 
ஒடெய தயதிந்த ராகவேந்திரா
திவான கிரிபரெ ராகவேந்திரா
திவார தொரெ ஹே ளே ராகவேந்திரா
மொஸல்மான் தொரேகாகி ராகவேந்திரா
தட்டெய  போஜ்யவு ராகவேந்திரா
பட்டெய முச்சிதெ ராகவேந்திரா
தீர்த்த ப்ரோக்ஷிஸே ராகவேந்திரா
தட்டென பல புஷ்ப ராகவேந்திரா 
வந்திஸிதனு தொரெ ராகவேந்திரா
மான்யகளனு கொடெ ராகவேந்திரா
தொரெய நெனபிகே ராகவேந்திரா
கோபுர விரசித ராகவேந்திரா
வெங்கண்ணனிகே பேளே ராகவேந்திரா
மாதா வாரதி ராகவேந்திரா
கெரிய ஏரிய மேலே ராகவேந்திரா
கரிய சிலையொளு ராகவேந்திரா 
பிருந்தாவன மாடே ராகவேந்திரா
உளித சிலையொளு ராகவேந்திரா
மாருதியனு மாடெ ராகவேந்திரா
கீருதி படெதனு ராகவேந்திரா
உத்தம தினதொளு ராகவேந்திரா
சிஷ்யரிகெ பேளே ராகவேந்திரா
தக்ஷிண த்வாரதி ராகவேந்திரா
ஆக்ஷண ஹொக்கரு ராகவேந்திரா 
ஒந்து தினதல்லி  ராகவேந்திரா
மதுவெகெ சிஷ்யகேளே ராகவேந்திரா
ம்ருத்திகெ கொடலாக ராகவேந்திரா
த்விஜ கொளியொளிரே ராகவேந்திரா
பிரம்ம பிசாசவு ராகவேந்திரா
ம்ருத்திகெ பரதிந்த ராகவேந்திரா
ஸூட்டு பூதியாகெ ராகவேந்திரா
சிஷ்யகெ மதுவெயு ராகவேந்திரா 
ராகவேந்திர குரு ராகவேந்திரா
ராகவேந்திர குரு ராகவேந்திரா
ரத்னஹார பரே ராகவேந்திரா
அக்னியொளிட்டரு ராகவேந்திரா
ஹார பேகெனலு ராகவேந்திரா
குண்டதி தெகெதரு ராகவேந்திரா
நீரினவன கேளே ராகவேந்திரா
மோக்ஷவ பேகெனலு ராகவேந்திரா
முக்தியனித்தரு ராகவேந்திரா
தேசாயி ஒந்து தின ராகவேந்திரா 
குருகளு கரிஸலு ராகவேந்திரா
மாவின ரஸதொளு ராகவேந்திரா
ஆடுவ மொகுபீளே ராகவேந்திரா
அந்து வ்யதிசிதரு ராகவேந்திரா
ராயரு தயதிந்த ராகவேந்திரா
ஜீவ வனித்தரு ராகவேந்திரா
பரிஜன குஹகதி ராகவேந்திரா
தருளன கரெதரு ராகவேந்திரா
குருகளு கருணிஸி ராகவேந்திரா
ப்ராணவ நித்தரு ராகவேந்திரா
ராகவேந்திர குரு ராகவேந்திரா
ராகவேந்திர குரு ராகவேந்திரா
ஒனெகெய சிகிரி ஸித ராகவேந்திரா
விப்ரரி கெசிரி பந்து ராகவேந்திரா
சிஷ்யன மக ஒப்ப ராகவேந்திரா
பிசிலல்லி பளிஸலு ராகவேந்திரா
சாடிய நெளலனு ராகவேந்திரா 
கருணிஸி பொரெதரு ராகவேந்திரா
இச்சாபோஜன ராகவேந்திரா
ஜாதக பரியலு ராகவேந்திரா
ஒந்து நூறு மனுஜகே ராகவேந்திரா
மூறு நூறு கிரந்தக்கே ராகவேந்திரா
ஏளு நூறு பிருந்தாவன ராகவேந்திரா
கரதல்லி பருபரு ராகவேந்திரா
தக்ஷிண த்வாரதி ராகவேந்திரா
ஆக்ஷண ஹொக்காரு ராகவேந்திரா
ப்ருந்தாவனொளி ஹரு ராகவேந்திரா
பரிபரி ரோக ஹர ராகவேந்திரா
ஜெய ஜெய மங்கள ராகவேந்திரா
சுப மங்கள ஸ்ரீ  ராகவேந்திரா
நித்யானந்த விட்டல ராகவேந்திரா

-- ஸ்ரீ குருராஜ நாமாவளி சம்பூர்ணம். 

ஸ்ரீ குருராயரே சரணம்.

1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்14 செப்டம்பர், 2020 ’அன்று’ முற்பகல் 11:09
    அருமை...

    பதிலளிநீக்கு

    Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University15 செப்டம்பர், 2020 ’அன்று’ முற்பகல் 7:22
    மன நிறைவான மந்த்ராலயம். நாங்கள் பார்த்துள்ளோம். இருப்பினும், இப்பதிவு மூலமாக மறுபடியும் சென்ற உணர்வு.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan12 அக்டோபர், 2020 ’அன்று’ பிற்பகல் 11:41
    நன்றி டிடி சகோ

    நன்றி ஜம்பு சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.