பனஸ்வாடியில் ஐந்து கோவில்கள்.
.
பனஸ்வாடியில் ஐந்து கோவில்கள்
பனஸ்வாடியில் ஐந்து கோவில்களை ஒரே நேரத்தில் தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டியது.
ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், ஸ்ரீ முகுந்தம்மா தேவி கோவில், ஸ்ரீ லெக்ஷ்மி வெங்கடேஸ்வரா கோவில், உமா மகேஸ்வரி கோவில், மகாலெக்ஷ்மி கோவில். இவை அனைத்தும் அருகருகே உள்ள சாலைகளில் அமைந்துள்ளன.
பெங்களூரு கோவில்களில் செல்வம் பொலிந்து நிற்கின்றது. அதுவும் இது லெக்ஷ்மி வெங்கடேஸ்வரா கோவில் அல்லவா. பெருமாளும் தாயாரும் அம்சமாகக் காட்சி அளிக்கின்றார்கள்.
தசாவதாரம், உலகளந்த பெருமாள், திருப்பாற்கடலில் துயிலும் பரந்தாமன், ஆகியோரோடு ஆண்டாளையும் கண்டு களித்தேன் பெருமாள் சன்னிதிக்கெதிரே கருடாழ்வார் வெள்ளிக்கவசத்தில் சின்ன உருவமாகக் காட்சி அளித்தார்.
அங்கே தெரியும் மஞ்சள் சிவப்பு மாலைகள் உல்லன் நூலால் பின்னப்பட்ட மாலைகள். வெகு அழகாக இருந்தன. மலைபோல் துளசி கொட்டியிருக்கக் கடவுளர் அனைவரும் வெள்ளிக்கவசத்தில் மின்னுகிறார்கள்.
மார்பில் பதக்கம், இடுப்பில் ஒட்டியாணம், ஜடைப்பில்லைகளோடு வளையல் மாலை அணிந்த கம்பீர ஆண்டாள். ஸ்ரீதேவி , பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் பாற்கடலில் பாம்பணையில்.
ஜீயர் அவர்களும் பாண்டுரங்க விட்டலனும். எதிரே பரமசிவனும் சுவற்றில் ஓவியமாக வராகமூர்த்தியும். தசாவதாரச் சிற்பங்கள். உலகளந்த பெருமாள். மச்சாவதாரம், கூர்மாவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம், பரசுராமவதாரம், ராமாவதாரம், பலராம அவதாரம், கிருஷ்ணாவதாரம், கல்கி அவதாரம்.
பெரிய திருவடியும் சிறிய திருவடியும் சங்கு, சக்கரம், நாமத்தை வணங்கும் முன் கோபுரம்.
மிக அருமையான இக்கோவிலில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து கொண்டிருந்தார்கள்.
பாதியில் கலந்து கொண்டேன். அதன் பின் பஜன்ஸோடு இனிதே முடிவுற்றது.
அங்கே தலைவி போல் இருந்த அம்மா நமது ”நம்பாடுவான்” கதையைக் கன்னடத்தில் சொன்னார்.
அதையே நான் தினமலர் சிறுவர்மலரில் எழுதியிருந்தபடி தமிழில் சொன்னேன்.
இக்கோவிலிலும் எலுமிச்சைப் பிரசாதம் உண்டு கிளம்பினோம்.
அடுத்து உமா மகேஸ்வரி கோவில். இங்கே வாயிலில் உற்சவ மூர்த்தி. இந்த அம்மனும் மிக்க சக்தி வாய்ந்தவள். அவள் இடது பக்கம் சாய் பாபாவும் காட்சி அளித்தார்.
உள்ளே அம்மன். இருமருங்கும் அவளது அன்புப் பிள்ளைகள் விநாயகரும் முருகனும்.
அடுத்துச் சென்றது மகாலெக்ஷ்மி கோவில். ஆனால் மதியம் ஆகிவிட்டபடியால் சந்நிதி சார்த்தி விட்டார்கள். கோயில் பிரகாரத்தில் காட்சி அளித்த இந்தத் தேவதையைப் புகைப்படம் எடுத்து வந்தேன். மேலே சிம்ம வாகனத்தில் துர்க்கை. கீழே குதிரை வாகனத்தில் அம்பாள்.மொத்தத்தில் பனஸ்வாடியில் நல்ல தரிசனம். ஐந்து கோவில்களை ஒரே நாளில் அழைத்துச்
சென்று தரிசனம் செய்வித்த என் அன்புச் சகோதரிக்கு நன்றி :)
டிஸ்கி:- இவற்றையும் பெங்களூருவில் பாருங்க.
1. மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.
2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள்.
4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1
5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2
6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )
7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.
8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3
9. காதல் ரோஜாவே. -- பாகம் 4
10. காதல் ரோஜாவே..-- பாகம் 5
11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.
12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.
13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.
14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.
15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்
16.கொள்ளை லாபம் தரும் கோழிக்கொண்டைப்பூ
17. நான்கு வாயில்கள். லால் பாக்.
18. சந்தனம் பூசும் மஞ்சள் நிலாக்கள்.
19. மனித உருவிலும் பசுமைச் சிற்பங்கள்.
20. மலர்கள் நனைந்தன பனியாலே.
21. நீர்த்துளியா தேன்துளியா..
22. தேன் உண்ணும் வண்டு.. மாமலரைக் கண்டு.
23. பெண்ணல்ல பெண்ணல்ல பிங்க்கிப் பூ.. :)
24. லால் பாக் . தும்பிக்கைகளா பூமியின் நம்பிக்கைகளா.
25. லால் பாக். அழகு ஆர்க்கிட்ஸ்
26. லால் பாக். பச்சை நிறமே பச்சை நிறமே .
27. லால் பாக் . என்னைக் கவர்ந்த சில இடங்கள்.
28. லால் பாக். பசுமை வளைவுகள்.
29. அழகழகாப் பூத்திருக்கு. !
30. மொக்கும் மலரும்.
31. இலை அலையும் ரோஜாப் படகும் பூ(மி)ப் பந்தும்.
32. மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன. மூவர் அணி.
33. ஸ்ரீ முகுந்தம்மா தேவி கோவில்.
34. வெற்றிலை பூமாலையும் வெல்ல நெய்விளக்கும்.
35.. பனஸ்வாடியில் ஐந்து கோவில்கள்.
36. துறவின் வயலட். பான்ஸியும் பெட்டுனியாவும்.
37. மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்
38. ஸ்ரீரங்கப்பட்டினா ஸ்ரீரங்கநாதஸ்வாமி கோயில்.













Thenammai Lakshmanan17 ஜனவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 11:39
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!